பகவத் கீதையை விஜய் பெற்றது முரண்பாடாக உள்ளது.. விசிக வன்னியரசு கருத்து
சென்னை: பிரபல நடிகர் விஜய் துவங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நேற்று நடைபெற்றது. அதில் ஜாதி ஏற்றத்தாழ்வை தவெக கட்சி எதிர்க்கும் என்று தெரிவித்தார். ஆனால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு இது குறித்து விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
தனது எக்ஸ் வலைத்தளப் பதிவில், வருணாசிரமக்கோட்பாட்டை எதிர்ப்பதாக கொள்கை அறிவித்த திரு.விஜய் அவர்கள், பகவத்கீதையை பெற்றுக்கொண்டது முரண்பாடாகும். ஏனென்றால், நான்கு வருணங்களை நானே படைத்தேன் என்பது தான் கீதையின் சாரம். அப்புறம் எப்படி வருணத்தை எதிர்க்க முடியும்?, இவ்வாறு வன்னி அரசு தெரிவித்துள்ளார்.

விஜய்யின் ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அவரது நிலைப்பாட்டை ஆதரித்து வரும் நிலையில், வன்னி அரசின் கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைத்தளங்களில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பகவத் கீதை, திருக்குர்ஆன், பைபிள் போன்ற மும்மதங்களின் புனித நூல்களை விஜய் அந்த மாநாட்டில் வாங்கி தான், மதசார்பு இல்லாதவர் ஆனால், மத நம்பிக்கை உள்ளவர் என்பதை வெளிப்படுத்தியிருந்தார். எனவே இதை விமர்சிப்பது தவறு என்பது விஜய் ரசிகர்கள் வாதமாக உள்ளது.
அதேநேரம், ஒவ்வொரு பிற கட்சியினரும் விஜய் மாநாட்டில் பேசிய பேச்சை டீகோட் செய்து குறைகளையும், விமர்சனங்களையும் முன்வைக்கிறார்கள். வன்னி அரசு வருணாசிரமம் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம்












Click it and Unblock the Notifications