"இந்தியா" இனி "பாரத்"- அப்ப "இந்து" என்பது "சனாதனம்" என மாறுமோ? கொளுத்தி போடும் விசிக ரவிக்குமார்!
சென்னை: இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்றுவதைப் போல "இந்து" என்பதை சனாதனம் என மாற்றுவார்களோ என விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிக்குமார் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
லோக்சபா தேர்தலுக்கான "இந்தியா" கூட்டணி என எதிர்க்கட்சிகள் பெயர் சூட்டியது முதலே "இந்தியா" என்ற பெயரை பிரதமர் மோடி முதல் அத்தனை பாஜகவினரும் கடுமையாக எதிர்க்கின்றனர். இந்தியாவை ஆக்கிரமிக்க வந்தது கிழக்கிந்திய கம்பெனி, இந்தியாவில் தாக்குதல் நடத்துவது இந்தியன் முஜாஹிதீன்கள் என்றெல்லாம் சகட்டுமேனிக்கு "இந்தியா" என்ற பெயரை விமர்சனம் செய்தனர் பாஜக தலைவர்கள்.

இதனைத் தொடர்ந்து மெல்ல "இந்தியா" என்ற பெயரையே உச்சரிக்காமல் "பாரத்" "பாரதம்" என அழைத்து வந்தனர். தற்போது நாட்டின் ஜனாதிபதியின் ஜி 20 மாநாட்டுக்கான தேநீர் விருந்து அழைப்பிதழில் "பாரத குடியரசுத் தலைவர்" என அச்சிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஒரு சேர ஒட்டுமொத்த பாஜக தலைவர்களும் "இந்தியா" என்கிற நாட்டின் பெயரையே "பாரத்" என மாற்ற வேண்டும் என குரல் கொடுக்கின்றனர். தங்களது சமூக வலைதளப் பதிவுகளிலும் இதனையே பயன்படுத்த தொடங்கி இருக்கின்றனர்.
இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்றுகிறவர்கள் இந்து என்பதை சனாதனம் என மாற்றுவார்களா? pic.twitter.com/Rgz7JVLjHU
— Dr D.Ravikumar (@WriterRavikumar) September 5, 2023
இதனால் மத்திய பாஜக அரசு கூட்டியிருக்கும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில், 'இந்தியா' என்ற பெயர் 'பாரத்' அல்லது "பாரதம்" என மாற்றப்படலாம் என சர்ச்சை வெடித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான கட்சிகள் இந்த முயற்சியை கண்டித்துள்ளன.
இது தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியா என்ற சொல்லே இப்போது பாஜகவை மிரட்டுகிறது எனவும் விமர்சித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
இந்நிலையில் விசிகவின் ரவிக்குமார் எம்.பி. தமது ட்விட்டர் பக்கத்தில், இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்றுகிறவர்கள் இந்து என்பதை சனாதனம் என மாற்றுவார்களா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். சனாதன தர்மத்தை ஒழிப்போம் என தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சு நாடு முழுவதும் பெரும் புயலை கிளப்பிவிட்டுள்ள நிலையில் ரவிக்குமார் எம்.பி. இப்படி பதிவிட்டிருப்பது இன்னொரு விவாதத்தை கிளப்பிவிட்டுள்ளது.
-
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications