2019ல் நான் திமுக உறுப்பினர்.. வெற்றிக்கு எதிரான வழக்கில் உயர்நீதிமன்றத்தில் விசிக ரவிகுமார் பதில்
சென்னை: திமுக சின்னத்தில் நின்று வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ரவிக்குமார் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். தான் திமுக எம்.பி. தான் என சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளார்.
2019 மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் 38 தொகுதிகளில் வெற்றிபெற்று திமுக இமாலய சாதனை படைத்தது. தேனி தொகுதியில் மட்டுமே அதிமுக சார்பாக போட்டியிட்ட ஓ.பி. ரவீந்திரநாத் குமார் வெற்றிபெற்றார். திமுக கூட்டணி வெற்றிபெற 38 தொகுதிகளில் திமுக மற்றும் திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட 24 பேர் பாராளுமன்றத்திற்கு தேர்வானார்கள். கொங்கு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் திமுகவின் சின்னத்திலேயே போட்டியிட்டது.

இது போக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் 2 உறுப்பினர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இரண்டு உறுப்பினர்கள், விசிகவில் இருந்து டாக்டர் திருமாவளவன் ஆகியோர் தங்களின் கட்சி சின்னம் அல்லது தனி சின்னத்தில் இருந்து போட்டியிட்டு வென்றனர்.
இந்த தேர்தலில் இந்திய ஜனநாயக கட்சி பாரிவேந்தர், மதிமுக கணேசமூர்த்தி மற்றும் கொங்கு மக்கள் கட்சி சின்னராஜ் ஆகியோர் திமுக'வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். அதேபோல் விசிக கட்சியின் உறுப்பினரான ரவிக்குமார் திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இந்த நிலையில் இன்னொரு கட்சியின் சின்னத்தில் இவர் வெற்றிபெற்றதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
ஒரு கட்சியை சார்ந்தவர் வேறு கட்சி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்க கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் தேசிய மக்கள் சக்தி கட்சி, தலைவர் எம். எல். ரவி வழக்கு தொடர்ந்திருந்தார். இதில் சென்னை உயர் நீதிமன்றம் ரவிகுமாரிடம் பதில் அளிக்கும்படி குறிப்பிட்டு இருந்ததில். இந்த நிலையில் இந்த வழக்கில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் ரவிக்குமார் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், கடந்த 2019 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வேட்பு மனு தாக்கலின் போது தான் ஒரு திமுக உறுப்பினர். மனுதாக்கல் செய்த போது நான் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த உறுப்பினர் அல்ல என தெரிவித்துள்ளார். மேலும், தன்னுடைய வெற்றியை எதிர்த்து தேர்தல் வழக்கு தான் தொடர முடியுமே தவிர பொது நல வழக்கு தொடர முடியாது என்பதால் தனக்கெதிரான இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
தேர்தல் வழக்காக இல்லாத காரணத்தால் இந்த வழக்கை உடனே தள்ளுபடி செய்ய வேண்டும். என்னுடைய வேட்பு மனுவில் நான் தெளிவாக திமுக உறுப்பினர் என்று குறிப்பிட்டுள்ளேன் என்று ரவிக்குமார் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக இந்த வழக்கில் ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கணேச மூர்த்தி, தேர்தலுக்கு முன்னதாகவே தான் மதிமுக'வில் இருந்து விலகி திமுக'வில் சேர்ந்து விட்டதாக பதில் மனு தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications