பார்ப்பனிய எம்ஜிஆர்.. கொதித்த எடப்பாடி! என்ட் கார்டு போட்ட திருமா! மீண்டும் கிளறி விட்ட வன்னியரசு!
சென்னை: தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் அதிமுக நிறுவனருமான எம்ஜிஆர் குறித்து விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேசியது அதிமுகவினரின் கடும் கண்டனத்தை பெற்றுள்ளது. எம்ஜிஆரை விமர்சிப்பது தனது நோக்கமல்ல என திருமாவளவன் முற்றுப்புள்ளி வைத்த நிலையில் மீண்டும் இந்த விவகாரத்தை கிளறிவிட்டு பெரிதாக்கி இருக்கிறார் விசிக துணை பொது செயலாளர் ஆன வன்னி அரசு.
திமுக சார்பில் அம்பத்தூரில் 'போராளி ஓய்வதில்லை' என்ற தலைப்பில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விசிக தலைவர் தொல் திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர்," கருணாநிதி மீதான வெறுப்பு அரசியல் தமிழ்நாட்டின் மையமாக இருக்கிறது. எம்ஜிஆர் தான் அதனை கட்டமைத்தார். அவரால் தான் திராவிட இயக்கத்திற்குள் பார்ப்பனிய பெண் தலைவர் வந்தார்" என பேசி இருந்தார்.

திருமாவளவன்
இதையடுத்து திருமாவளவனின் பேச்சுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். எம்ஜிஆர் குறித்து பேசினால் திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போவார் என எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சித்து இருந்தார். இந்த நிலையில் எம்ஜிஆரை அவமதிக்கும் நோக்கம் தனக்கு இல்லை, எம்ஜிஆரை ஒரு சாதிக்குள் நான் சுருக்கவில்லை. நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. எம்ஜிஆர் ஜெயலலிதா தலைமையில் தான் அதிமுக இயங்கியது. இருவரும் சாதி எல்லைகளுக்கு அப்பாற்பட்டவர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அது கருணாநிதி எதிர்ப்பை மையப்படுத்தி இயங்கியதாக தான் நான் கூறினேன் என கூறி முற்றுப்புள்ளி வைத்திருந்தார்.
வன்னியரசு
இதை அடுத்து இந்த விவகாரம் ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் இந்த விவகாரத்தை பெரிதாக்கி இருக்கிறது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசுவின் எக்ஸ் பதிவு. இது தொடர்பாக பதிவிட்டுள்ள அவர்," விசிக தலைவர்"கருணாநிதி மீதான வெறுப்பரசியலே தமிழ்நாட்டின் மையமாக இருக்கிறது. எம்ஜிஆர் அதைத்தான் கட்டமைத்தார்" என பேசிவிட்டு,எம்ஜிஆருக்கு பின்னால் பார்ப்பனிய சக்திகள் இருந்தார்கள்.
எடப்பாடி பழனிசாமி
அதனால் தான் பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டு அரசாணையை பிறப்பிக்க முடிந்தது" என உரையாற்றினார். இதில் என்ன தவறு இருக்கிறது? அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
காணாமல் போவார் என்றெல்லாம் சாபமிடுகிறார். கடந்த 1979 ஆண்டு தமிழக முதல்வராக இருந்த எம்ஜிஆர் அவர்கள், பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டு அரசாணையை 1979 சூலை 2 அன்று வெளியிட்டார். திமுக,திக உள்ளிட்ட கட்சிகள் அப்போதே எதிர்ப்பு தெரிவித்தன.அப்போது நடந்த நாடாளுமன்றத்தேர்தலில் போட்டியிட்ட அதிமுக இரண்டு இடங்களை மட்டுமே வென்றது.
எம்ஜிஆர்
இதனால் அதிர்ந்து போன எம்ஜிஆர் 1980 சனவரி 19 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டினார். கலந்து கொண்ட எல்லா கட்சிகளுமே, பிற்படுத்தப்பட்டோருக்கு விதிக்கப்பட்ட ஆண்டுக்கு 9,000 ரூபாய் வருமான வரம்பு அளவுகோலை ரத்து செய்ய வலியுறுத்தினர். உடனே அந்த அரசாணையை ரத்து செய்தார் எம்ஜிஆர். இட ஒதுக்கீடு குறித்து சமூகநீதிப்பார்வை வேண்டும். அந்த பார்வை திரு.எம்ஜிஆருக்கு இல்லை என்பதையே இந்த பொருளாதார அளவுகோலான சிந்தனை வெளிப்படுகிறது.
கருணாநிதி
வெறுமனே கருணாநிதி வெறுப்பு மற்றும் தனக்கிருந்த சினிமா புகழை மட்டுமே வைத்து ஆட்சியை பிடித்தவர் எம்ஜிஆர். மற்றபடி எந்த கோட்பாட்டு பின்னணியும் இல்லை. குறிப்பாக கலைஞருக்கு இருந்த பார்ப்பனிய எதிர்ப்பு அரசியல் எம்ஜிஆரிடம் இல்லை என்பதே உண்மை. எமது தலைவர் உரையும் அதைத்தான் வெளிப்படுத்தியது. உச்சகட்டமாக "நான்ஒரு பாப்பாத்தி"என சட்டப்பேரவையிலேயே சொன்ன ஜெயலலிதா அம்மையார் திராவிட இயக்கத்துக்கு தலைமை தாங்கியிருப்பதையும் பார்க்கலாம்.
ஜெயலலிதா
இதை புரிந்து கொள்வதற்கு முதலில் சித்தாந்த சிந்தனை வேண்டும். அது மரியாதைக்குரிய எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் எதிர்பார்க்க முடியாது.அதனால் தான் எமது தலைவரின் உரையை கேட்காமலே சாபமிடுகிறார். இன்னும் உரத்துச் சொல்வோம் எம்ஜிஆரை உருவாக்கியதே பார்ப்பனியக்கும்பல் தான்.
இப்போது எடப்பாடி அவர்களை பின்னிருந்து இயக்குவது போல." என கூறியுள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications