"ஜெகதீப் தன்கர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்”.. திருமாவளவன் பரபர குற்றச்சாட்டு!
சென்னை: குடியரது துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கரை அச்சுறுத்தி பணி விலக வைத்து, அவரை வீட்டு காவலில் சிறை வைத்துள்ளனர் என்று விசிக தலைவர் திருமாவளவன் பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
கடந்த ஜூலை 21 ஆம் தேதி, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளன்று திடீரென குடியரசுத் துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ஜெகதீப் தன்கர். உடல்நலக் காரணங்களுக்காக தான் ராஜினாமா செய்ததாக அவர் கூறினார். இருப்பினும், எதிர்க்கட்சித் தலைவர்கள் அவர் ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டினர்.

இதனையடுத்து, முன்னாள் குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் எங்கிருக்கிறார்? ஜெகதீப் தன்கரின் உடல்நிலை எப்படி உள்ளது? என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. இந்நிலையில், முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக விசிக தலைவர் திருமாவளவனை குற்றம் சாட்டியுள்ளார்.
விசிக தலைவர் திருமாவளவன் தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "இந்தியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி இன்று சென்னைக்கு வருகை புரிந்து கூட்டணியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார்.
ஏற்கெனவே குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கரை பாஜக அரசு அச்சறுத்தி பதவி விலக வைத்துள்ளனர். தற்போது வீட்டு காவலில் சிறை வைத்துள்ளனர். வீட்டை சுற்றி ராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளனர். அவரது நிலை என்ன என்பது கூட தெரியவில்லை. வலுக்கட்டாயமாக பணி விலக வைக்கப்பட்டுள்ளார் ஜெகதீப் தன்கர். பதவி விலக நிர்பந்திக்கப்பட்டது ஏன் என்பது பற்றி தெரியவில்லை.
குடியரசுத் துணை தலைவருக்கே இந்த நிலை என்றால், குடிமக்களின் நிலை என்ன என்பதை எண்ணி பார்க்க வேண்டும். குடியரசு துணைத் தலைவர் தேர்தலை பாஜக அரசு நம் மீது திணித்துள்ளது. எனவே தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷணனை வேட்பாளராக அறிவித்துள்ளது. உடனே, தமிழர் ஒருவரை குடியரசு துணைத் தலைவராக்குவோம் என்று சிலர் குரல் எழுப்பியுள்ளனர். இந்த தேர்தல் தமிழ்நாட்டிற்கான தலைவர் பதவி அல்ல, இந்தியாவிற்கான தலைவர் பதவி. எனவே, இதில் தமிழர் என்கிற அடையாளத்தை முன்னிறுத்துவதில் எந்த பலனும் கிடையாது.
பாஜகவா, பாஜக அல்லாத ஜனநாயக சக்திகளா என்றுதான் இந்தத் தேர்தலை அணுக வேண்டியுள்ளது. அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கக்கூடிய வலிமையுள்ள ஒருவரை குடியரசுத் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டும். எனவே, சுதர்சன் ரெட்டி அவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்" என்றார்.
மேலும் பேசிய திருமாவளவன், "தூய்மைப் பணியாளர்கள் விவகாரத்தில் விசிக இரட்டை நிலைப்பாட்டை முன்வைக்கவில்லை. ஒரே நிலைப்பாடுதான். தனியார்மயத்தை எதிர்த்து மக்களோடு போராடிக் கொண்டிருக்கிற இயக்கம் விசிக. சென்னை துப்புரவுப் பணியாளர்கள் போராட்டத்தில் ஆதரவு தெரிவித்தோம். முதல்வரை சந்தித்து தூய்மைப் பணிகளை தனியார் வசம் ஒப்படைக்கக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளோம்.
இதனை குறிப்பிட்ட சமூகத்தின் தொழிலாக நிரந்தரப்படுத்திவிடக்கூடாது என்பதில் அரசு கவனம் செலுத்த வேண்டும். தொழில்நுட்பத்தை கற்றுக்கொண்டவர்கள் யாராக இருந்தாலும் அந்தப் பணியை செய்ய ஏதுவான சூழலை உருவாக்க வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையில் கருத்தை முன் வைக்கிறோம். கண்ணகி நகரில் உயிரிழந்த தூய்மைப் பணியாளர் குழந்தைகளின் உயர்கல்வி செலவிற்கு அரசு பொறுப்பேற்க வேண்டும். அவரது குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். கூடுதல் நிதி உதவி வழங்க வேண்டும்" என வலியுறுத்தினார்.
-
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
விசிகவில் இருந்து சங்கத்தமிழன் 3 மாதங்களுக்கு சஸ்பெண்ட்.. திருமாவளவன் அதிரடி ஆக்ஷன்! -
காங்கிரஸின் டபுள் கேம்.. வேலையை காட்டிய ராகுல் காந்தியின் டீம்! கேரளாவில் ஷாக் -
நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள் -
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
“காங்கிரஸ் வளர்ச்சியால் அச்சம் வேண்டாம்”.. திருமாவளவன் குற்றச்சாட்டுக்கு மாணிக்கம் தாகூர் பதில் -
திருமாவளவன் குற்றச்சாட்டால் ஆடிப்போன ராகுல், சோனியா.. அடுத்து என்ன செய்யப்போகிறது காங்கிரஸ்? -
INDIA கூட்டணி கூட்டத்தில்.. காங்கிரஸுக்கு எதிராக பேசிய விசிக! தன்னிச்சையாக செயல்படுவதாக கண்டனம் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications