திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன்
சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். தவெக, நாம் தமிழர் கட்சியும் களத்தில் சுழன்று கொண்டிருக்கிறார்கள். திமுக பிரம்மாண்ட கூட்டணியுடன் தேர்தலை சந்திக்கிறது. ஆனால் அதிக கட்சிகள் இருப்பதே தொகுதி பங்கீட்டில் சிக்கலை உருவாக்கியது. சிபிஐ, சிபிஎம் கட்சிகளுக்கு கடந்த முறையை விட குறைவான தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. விசிக 10 தொகுதிகள் கேட்ட நிலையில், 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருமாவளவன் மனம் திறந்து பேசியுள்ளார்.
சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக 173 தொகுதிகளில் போட்டியிட்டது. இந்தமுறை அவர்களும் அதைவிட 7-8 தொகுதிகளில் குறைவாக போட்டியிடுகிறார்கள். திமுகவே தாங்கள் போட்டியிடும் தொகுதிகளை விட்டுக் கொடுக்க முன் வந்துள்ளதால், நாங்களும் விட்டுக் கொடுக்க வேண்டியது எங்கள் பொறுப்பாகும். (VCK Thirumavalavan)

எடப்பாடி சொல்வதை ஏற்க முடியாது
தொகுதி பங்கீடு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி திமுகவுக்கு தான் பதில் சொல்ல வேண்டும். அதைவிடுத்து திமுக கூட்டணி கட்சிகளை அவர் இழிவுபடுத்துவதை ஏற்க முடியாது. திமுக அதிமுகவை இழிவாக பேசுவதாக அவர் நினைக்கிறார். அப்படியென்றால் அவர் திமுக மீதுதான் விமர்சனம் வைக்க வேண்டும். ஆனால் திமுகவுடன் கூட்டணியில் உள்ள கட்சிகளை விமர்சிக்க கூடாது.
அதிமுக கூட்டணியில் வலுவாக உள்ள கட்சிகள் ஒன்றிரண்டு கட்சிகள் தான். அங்கு அதிமுக, பாஜகவை தவிர வேறு எந்தக் கட்சியும் வலிமையாக இல்லை. ஆனால் திமுக கூட்டணியில் ஏற்கனவே 18 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இப்போது புதிதாக பல கட்சிகள் இணைந்துள்ளன. நிறைய கட்சிகள் கூட்டணியில் இடம்பெற்றுள்ளன.
போதும் என்கிற மனமே
இதன் காரணமாக தான் பேச்சுவார்த்தையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விரைந்து இரண்டொரு நாட்களில் உடன்பாடு எட்டப்படும். திமுக கூட்டணியில் நாங்கள் 8 தொகுதிகளில் 2 பொது தொகுதிகள் கேட்டோம். அதை திமுகவில் ஒதுக்கிவிட்டனர். போதும் என்கிற மனமே பொன் செய்யும் மருந்து" என்றார்.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? திருமாவளவன் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்?












Click it and Unblock the Notifications