Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"தட்டிதூக்கிய" திருமாவளவன்.. "அவரை" மறைச்சிடுவீங்களா.. இந்து நாடா இது?.. வரலாறை திரிக்கும் பாஜக: நச்

இயேசு கிறிஸ்து அம்பேத்கர் குறித்து திருமாவளவன் பேசியது இணையத்தில் ஷேர் ஆகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: இஸ்லாமும், கிறிஸ்தவ மதங்களும் சகோதரத்துவத்தை கொண்டுள்ளதால் தான் உலகம் முழுவதும் பரவி இருக்கிறது. இந்தியாவை தவிர வேறு எங்காவது "இந்து" என்று என சொல்லக்கூடிய அளவிற்கு நாடு இருக்கிறதா? இந்தியாவையே இன்னும் இந்து நாடு என அறிவிக்க முடிகிறதா? முடியாது.. அறிவிக்கவே முடியாது" என்று காட்டமாக கூறியுள்ளார் விசிக தலைவர் திருமாவளவன்.

பொதுவாக திருமாவளவன் எந்த கூட்டத்தில் பேசினாலும், அந்த பேச்சின் வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகும்.. அந்தவகையில், கடந்த ஜுன் திருமாவளவன் ஒரு நிகழ்ச்சியில் பேசியிருந்தார்.

அந்த பேச்சு, இணையத்தில் பெரும் வைரலானது.. சிறுத்தைகளே அந்த பேச்சை வைரலாக்கினர்.. இதற்கு பொதுமக்கள் பலரும் திரண்டு வந்து ஆதரவு தெரிவித்திருந்தனர்.

 இயேசு கிறிஸ்து

இயேசு கிறிஸ்து

அதன் சுருக்கம்தான் இது: "அரசியல் என்பது பதவிக்காக மட்டுமில்லை.. தொண்டு செய்யவும்தான்.. பதவிக்குதான் போய்தான் தொண்டு செய்ய வேண்டும் என்பதல்ல.. பதவி இல்லாமலேயே தொண்டு செய்ய முடியும்.. நாம் ஏன் இன்றைக்கும் ஏசுபெருமானை பேசி கொண்டிருக்கிறோம்? 2 ஆயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டது.. போன அமைச்சரவையில் யார் யார் மந்திரிகளாக இருந்தார்கள் என்று கேட்டால் நமக்கு தெரியாது.. ஆனால், இயேசுவை பேசிக் கொண்டிருக்கிறோம்? ஏன் இன்றைக்கும் நபிகள் நாயகத்தை பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம் ஏன்? இவர்கள் எல்லாம் தேவதூதர்கள் அல்லது கடவுளின் மறு அவதாரங்கள் என்று சாதாரணமாக கடந்து போய்விடுகிறோம்..

 இயேசுபெருமான்

இயேசுபெருமான்

இருக்கட்டும்.. அவர்கள் பிறந்தார்கள்.. நம்மை போல் வளர்ந்தார்கள்.. நம்மை போல் வாழ்ந்தார்கள்.. பிறகு மறைந்தார்கள்.. இது இந்த மண்ணில் நடந்தது.. ஏசுபெருமான் பிறந்தார்.. 33 வயது வரை வாழ்ந்தார்.. 30 ஆண்டுகள் குடும்ப வாழ்க்கையில் இருந்தார், அல்லது தலைமறைவாக இருந்தார்.. 3 ஆண்டுகள்தான் பொதுவாழ்வில் ஈடுபட்டார்.. வெறும் 3 ஆண்டுகள் பொதுவாழ்வில் ஈடுபட்ட ஒருவரை 2 ஆயிரம் ஆண்டுகளாக பேசி கொண்டிருக்கிறோம் என்று சொன்னால் எண்ணி பாருங்கள்.. இன்னும் ஆயிரக்கணக்கான வருடங்கள் மனித குலங்கள் இருக்கும்வரை பேசிக் கொண்டேதான் இருப்பார்கள்..

 சிலுவைகள்

சிலுவைகள்

ஒரே விஷயம்தான்.. அந்த 3 ஆண்டுகளில் மக்களுக்காக மட்டுமே போராடினார்.. அவர் காலத்தில் வாழ்ந்த மக்களுக்காகவே வாழ்ந்தார் என்பதுதான்.. ஆன்மீகத்தை ஒருபுறம் தள்ளிவைத்துவிட்டு, அரசியல் பார்வையுடன் பாருங்கள்.. அவர் ஏன் சிலுவையில் அறையப்பட்டார்? அவர் நம்மை ரட்சிக்க வந்தார் என்று சொன்னது ஆன்மீக பாஷை.. அரசியல் மொழி என்னவென்றால், அவர் எளிய மக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.. இதுதான் அரசியல் மொழி.. அவர் மக்களுக்காக மரித்து கொண்டார் என்பது ஆன்மீக மொழி.. அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தியதால், ஆட்சியாளர்கள் அவரை மரண தண்டனை கொன்றார்கள் என்பது அரசியல் பார்வை.. அன்றைக்கு இருந்த மரணதண்டனை முறை அது..

கொம்பன்

கொம்பன்

இன்றைக்கு தூக்கு தண்டனை முறை உள்ளதுபோல், அன்றைக்கு சிலுவையில் அறைந்து, வதைத்து கொலை செய்வது நடைமுறையில் இருந்தது.. இயேசுவை பற்றின மற்ற கதைகள், சம்பவங்கள் ஒருபுறம் இருக்கட்டும்.. ஆனால், அவர் கடைசி 3 ஆண்டுகளில் ஏற்படுத்திய தாக்கம், இத்தனை வருடங்களாக இந்த மண்ணில் எதிரொலித்து கொண்டிருக்கிறது.. அதேபோல, அம்பேத்கார் வாழ்ந்த காலத்தில் , எத்தனையோ தலைவர்கள் தோன்றி மறைந்தார்கள்.. ஆனால், இன்றைக்கு எளிய மக்களால் கொண்டாடப்படக்கூடிய மாமனிதராக அம்பேத்கர் விளங்குகிறார்.. இனி எந்த கொம்பனாலும் அம்பேத்கரை மறைக்க முடியாது.. இருட்டடிப்பு செய்ய முடியாது.. எப்படி நபிகள் நாயகமும், இயேசு பிரானும் இந்த மண்ணில் நிலைத்து நிற்கிறார்களோ, அதுபோல, நிலைத்து நிற்கிறார் அம்பேத்கார்" என்று பேசியிருந்தார் திருமாவளவன்.

சிலுவை

சிலுவை

இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு உரை நிகழ்த்தி உள்ளார்.. வழக்கம்போல் பாஜகவை கடுமையாக சாடிய நிலையில், திருமாவளவன் கிறிஸ்தவ + இஸ்லாம் மக்களின் புகழை பேசியிருக்கிறார்.. கானத்தூரில் நடைபெற்ற கிறித்துவப் பெருவிழா நிகழ்ச்சியில் திருமா பேசியதன் சுருக்கம் இதுதான்: "இயேசு பெருமான் பிறக்கும்போது யூத குடியில் பிறந்தவர். உலகை வழிநடத்த ஒரு பாதை வகுத்தவர். அவருடைய போதனைகள் உலகம் முழுவதும் பரவி இருக்கிறது. கிறிஸ்தவம், இஸ்லாமிய மதத்திற்கு முன்பே இந்து மதம் தோன்றியது என சனாதனவாதிகள் சொல்கிறார்கள். ஆனால் அது இந்தியாவை தாண்டி வேறு ஒரு நாட்டில் பரவவே இல்லை. ஆனால் கிறிஸ்தவம் 200 நாடுகளில் பரவி இருக்கிறது. சகோதரத்துவத்தை சமத்துவத்தை போதிக்கிற மதம் இஸ்லாமியமும், கிறிஸ்துவமும்.

 வெளிச்சம் பிறந்தது

வெளிச்சம் பிறந்தது

கிறிஸ்துவம் என்பது ஆன்மீகத்தை மட்டும் இல்லாமல் சகோதரத்துவத்தை போதிக்கிறது. சாதி, மதம், நாடு என வேற்றுமை பார்க்காமல் அவர்கள் நலனுக்காக ஜெபிக்கக் கூடிய நாகரீகத்தை வளர்த்து இருக்கிறது. 2000 ஆண்டுகளில் 200 நாடுகளில் கிறிஸ்தவம் பரவி வருகிறது. கிறிஸ்துவம் வந்த பிறகு தான் இருண்டு கிடந்த இந்தியாவில் வெளிச்சம் பிறந்தது. இந்தியாவில் காலடி எடுத்த வைத்த பிறகு தான் கல்வி, மருத்துவம், சுகாதாரம் கிடைத்தது. சகோதரத்துவம், சுதந்திரம் கிடைத்தது. கிறிஸ்தவம் வந்த பிறகு தான் பள்ளிக்கூடம், மருத்துவமனை வந்தது. பழைய சட்டங்கள் தூக்கி எறியப்பட்டன; புதிய சட்டங்கள் உருவாகின. இதனால் தான் சனாதனிகளுக்கு இஸ்லாமியம் மீதும், கிறிஸ்தவம் மீதும் கோபம் வருகிறது.

பிதற்றல்

பிதற்றல்

சமூக ஒழுங்கை ஒட்டுமொத்தமாக புரட்டி போடும் வகையில் பிரிட்டீஷ் ஆட்சி இருந்தது. அதனால் இன்றும் அவர்கள் பதறிக் கொண்டிருக்கிறார்கள். இரு மதங்களும் சகோதரத்துவத்தை கொண்டுள்ளதால் தான் உலகம் முழுவதும் பரவி இருக்கிறது. இந்தியாவை தவிர வேறு எங்காவது இந்து என சொல்லக்கூடிய அளவிற்கு நாடு இருக்கிறதா என்று சுய விமர்சனம் செய்ய வேண்டும். இந்தியாவையே இன்னும் இந்து நாடு என அறிவிக்க முடிகிறதா, அறிவிக்க முடியாது. இது மதமாக இல்லை.. சகோதரத்துவத்தை போதிக்கவில்லை. பாகுபாடுகளை உயர்த்தி பிடிக்கிறது. மதச்சார்பின்மைக்கும் பதிய வியாக்கனம் சொல்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.. அறியாமையில் பேசுகிறாரா? வேண்டுமென்று பிதற்றுகிறாரா? தெரியவில்லை.

பிதற்றுகிறாரே

பிதற்றுகிறாரே

மதச்சார்பின்மை என்பதற்கு அவர் சொல்லுகிற விளக்கம் அவரவர் மதத்தை பின்பற்ற வேண்டும். குடிமக்கள் மதம் சார்ந்து இருக்கலாம். இந்திய அரசு மதச்சார்பற்ற அரசாக இருக்க வேண்டும். குடிமக்களை குடிமக்களாக மட்டும் பார்க்க வேண்டும். கருத்தை, வரலாற்றை, உண்மையை திரிப்பது பாஜக பேசும் அரசியல் அதனால் தான் விமர்சிக்கிறோம்.. நாடாளுமன்றத்தில் பேசும்போதும் ஒரு சார்பின்மை பற்றி பேசினேன். 20ம் நூற்றாண்டில் இந்திய புரட்சியாளர் அம்பேத்கர், என்ன பேசினாரோ அதையே தான் 2000 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சி அதிகாரத்தை எதிர்த்து பேசினார். இயேசு பெருமான் 32 ஆண்டுகள் தான் வாழ்ந்தார், 3 ஆண்டுகள் மட்டுமே போதனைகள் செய்தார். 29 ஆண்டுகள் சராசரி மனிதனாக வாழ்ந்தார். 3 ஆண்டுகள் போதித்த போதனைகள் இதுவரை உலகை ஆள்கிறது என்றார் திருமாவளவன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+