Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருமாவின் அதிரடி.. அன்புமணியின் சரவெடி.. திமுக கூட்டணியில் என்னதான் நடக்கிறது? போட்டுடைத்த புள்ளி

பாமக திமுக கூட்டணிக்கு வந்தால் திமுக கூட்டணியில் இருந்து திருமா வெளியேறுவார் என்று மூத்த பத்திரிகையாளர் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் எம்பி திருமாவளவன் திமுக கூட்டணி உடையுமா, உடையாதா என்ற கேள்விக்கு மூத்த பத்திரிகையாளர் கோடீஸ்வரன் பதில் அளித்துள்ளார்.

சமீபத்தில் பாமக - திமுக இணைந்தால் அந்த கூட்டணியில் இருக்க மாட்டோம் என்று திருமாவளவன் எம்பி தெரிவித்தார். சென்னையில் பாஜகவிற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய போது திருமா இதை தெரிவித்தார். அதில், பாஜக, பாமக இருக்கும் கூட்டணியில் நாங்கள் இருக்க மாட்டோம். அது திமுக கூட்டணியாக இருந்தாலும்.

அவர்கள் எந்த கூட்டணியில் இருந்தாலும் இருக்க மாட்டோம். இந்தியாவில் யாருக்காவது இப்படி சொல்ல தைரியம் இருக்கிறதா?, தமிழ்நாட்டு பொறுத்தவரை இந்த யுத்தம் விடுதலை சிறுத்தைகளுக்கும் பாஜகவிற்கு இடையிலான யுத்தம். நான் கருத்தியல் ரீதியாக சவால் விடுகிறேன். கருத்தியல் ரீதியாக மோதிக்கொள்ள தயாரா? கருத்தியல் ரீதியாக சண்டை போட தயாரா? ஓட ஓட விரட்டி அடிப்போம், என்று கூறினார்.

பாமக

பாமக

திமுக - பாமக நெருக்கம் ஆகி வருவதாக செய்திகள் வந்த நிலையில்தான் திருமா இப்படி கூறினார். இந்த நிலையில்தான் திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். விசிக எம்பி திருமாவளவன் பேசியதற்கு எதிர் வினையாக அன்புமணி இப்படி பேசி உள்ளார். சேலத்தில் அன்புமணி பேசுகையில், திமுகவுடன் கூட்டணியா? அதெல்லாம் வதந்தி. திமுக கூட்டணி குறித்து எந்த பேச்சுவார்த்தையும் இல்லை. 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலின் போது பாமக தலைமையில்தான் கூட்டணி அமையும். திமுகவுடன் கூட்டணி என்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். தேர்தலுக்கு 5 மாதம் முன்னரே பாமக நிலைப்பாட்டை தெரிவிப்போம், என்றுள்ளார். இந்த நிலையில் திமுக கூட்டணி உடையுமா, உடையாத என்ற கேள்வி மூத்த பத்திரிகையாளர் கோடீஸ்வரன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பதில் அளித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு

ஈரோடு கிழக்கு

ஈரோடு கிழக்கு தேர்தல், திருமாவின் பேச்சு குறித்து பத்திரிகையாளர் கோடீஸ்வரன் அளித்த பேட்டியில், ஈரோடு கிழக்கு தேர்தல் தோல்வியால் எடப்பாடி இறங்கி போக வேண்டும். அவர் ஓபிஎஸ், சசிகலாவுடன் சேர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படுகிறது. ஆனால் அதை எடப்பாடி ஏற்றுக்கொள்ள மாட்டார். இந்த ஒரு தேர்தல் தோல்வியால் அதை எடப்பாடி ஏற்றுக்கொள்ள மாட்டார். அவர் மறுப்பார். பணநாயகம் வென்றுவிட்டது. பணம்தான் திமுக வெற்றிக்கு காரணம் என்று எடப்பாடி வாதம் வைப்பார். அவர் வைக்கும் வாதத்திலும் கொஞ்சம் சரியானதுதான். ஈரோடு கிழக்கில் ஆட்சியரின் செயல்பாடுகள் மோசமாக இருந்தது. அவருக்கு அனுபவம் போதவில்லை.

செய்தியாளர்கள்

செய்தியாளர்கள்

செய்தியாளர்களை ஆட்சியர் உள்ளே அனுமதிக்கவில்லை. அவர் எதோ தவறு தவறாக விதியை சொல்கிறார். இது என்ன கொடுமை. அவர் எதுவுமே தெரியாமல் பேசி உள்ளார். இபப்டி எல்லாம் தேர்தல் நடந்தால் எதிர்க்கட்சிகள் புகார் வைக்கத்தான் செய்யும். இதனால் பணம்தான் திமுக வெற்றிக்கு காரணம் என்று எடப்பாடி வாதம் வைப்பார். அவர் வைக்கும் வாதத்திலும் கொஞ்சம் சரியானதுதான். இந்த தேர்தலுக்கு இடையில் திருமாவளவன் திமுக கூட்டணியில் இருந்து வெளியேற போவதாக சிலர் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். பாஜகவை கடுமையாக எதிர்ப்பவர் திருமா.

திருமா

திருமா

கொஞ்சம் கூட பின்வாங்காமல் திருமா பாஜகவை யோசிப்பார். திருமா அதில் உறுதியாக இருப்பார். அதேபோல் பாமக இருக்கும் கூட்டணியிலும் திருமா இருக்க மாட்டார். ஏனென்றால் பாமக - விசிக தொண்டர்கள் சேரவே மாட்டார்கள். பாமக திமுக கூட்டணிக்கு வந்தால் திமுக கூட்டணியில் இருந்து திருமா வெளியேறுவார். திமுக கூட்டணியில் சில கசப்புகள் திருமாவிற்கு இருக்கலாம். திமுக ஒரு சில இடங்களில் பாஜகவிடம் இறங்கி செல்கிறது அல்லது மௌனமாக செல்கிறது. இந்த நெருடல் காரணமாக திருமா கூட்டணியை பற்றி யோசிக்கலாம்.

 எடப்பாடி

எடப்பாடி


அதோடு எடப்பாடி வழக்கில் வென்ற போதும் திருமா வாழ்த்தினார். அவர் ஏன் வாழ்த்த வேண்டும். திமுக கூட்டணி முறிவதற்கு வாய்ப்பு உள்ளது என்று கூற மாட்டேன். அவர்களின் கூட்டணி வலிமையாக உள்ளது. பாமக இங்கே வந்தால் வேண்டுமானால் கூட்டணியில் மாற்றம் ஏற்படலாம். ஆனால் மொத்தமாக கூட்டணி உடைய என்பதை இப்போதே சொல்ல முடியாது. ஆனால் அரசியலில் எதுவுமே நிரந்தரம் கிடையாது. அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால் பாஜகவை ஆதரிக்கும் கூட்டணியில் திருமா இருக்கவே மாட்டார். லாலு பிரசாத் போல பாஜகவுடன் கூட்டணியே வைக்க மாட்டேன் என்று இருப்பவர்தான் திருமா.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+