மனைவியுடன் கோவில் கோவிலாக செல்லும் ஆளுநர் ரவி.. தமிழ்நாடு அரசு செலவுதானா? விசிக வன்னி அரசு கேள்வி
சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, மனைவி லட்சுமி ரவி ஆகியோர் கோவில்களுக்கு செல்லும் செலவும் தமிழ்நாடு அரசுதான் செய்கிறதா? இதனை முறைப்படுத்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த சில நாட்களாக பல்வேறு கோவில்களுக்கு பயணம் மேற்கொண்டார். ஆளுநர் ரவி மனைவியுடன் கடந்த 16-ந் தேதி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு சென்றார். பின்னர் ராமநாதசுவாமி கோயில் பிரகாரத்தைச் சுற்றி தூய்மைப்பணியில் இருவரும் ஈடுபட்டனர். பின்னர் மதுரையில் மீனாட்சி அம்மன் கோயிலுக்கும் சென்று வழிபட்டனர். ராமேஸ்வரம், மதுரையை தொடர்ந்து ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலிலும் இருவரும் சாமி தரிசனம் செய்தனர். அங்கும் மனைவியுடன் ஆளுநர் ரவி தூய்மைப் பணியில் ஈடுபட்டார். சென்னையில் நேற்று சென்னை தி.நகர், திருமலை திருப்பதி தேவஸ்தான கோயிலில் வெங்கடேஸ்வர சுவாமி, ராமர் தரிசனம் செய்து வழிபட்டார் ஆளுநர் ரவி.

ஆளுநரின் இந்த பயணங்களுக்கான செலவு யாருடையது? என கேள்வி எழுப்பி உள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு. இது தொடர்பாக தமது சமூக வலைதளப் பக்கத்தில் வன்னி அரசு எழுதி இருப்பதாவது: ஆளுநர் பணிக்காக நியமிக்கப்பட்ட ரவி, அந்த பணியை தவிர சனாதனத்தை பரப்பும் வேலைகளை தான் அதிகம் செய்து வருகிறார்.கூடவே திருமதி லட்சுமி ரவி அவர்களையும் கூட்டி செல்கிறார். இதற்கான செலவுகளை தமிழ்நாடு அரசு தான் செய்து வருகிறதா?
ஆளுநர் @rajbhavan_tn பணிக்காக நியமிக்கப்பட்ட திரு.ரவி அவர்கள் அந்த பணியை தவிர சனாதனத்தை பரப்பும் வேலைகளை தான் அதிகம் செய்து வருகிறார்.கூடவே திருமதி லட்சுமி ரவி அவர்களையும் கூட்டி செல்கிறார்.
— வன்னி அரசு (@VanniKural) January 19, 2024
இதற்கான செலவுகளை தமிழ்நாடு அரசு தான் செய்து வருகிறதா?
அரசு பணி நிமித்தமாக திருச்சிக்கு… https://t.co/buTxVSC1SR
அரசு பணி நிமித்தமாக திருச்சிக்கு போகும் போது, கோவிலுக்கு போவது என்பது வேறு, ஆனால், கோவிலுக்கு போவதற்காக மட்டுமே அரசு பணத்தில் போவது சரியா? கூடவே மனைவி மக்களையும் அழைத்துச்சென்று மக்களுடைய வரி பணத்தை செலவழிப்பது சரியா? தமிழ்நாடு அரசு இந்த
தண்டச் செலவை முறைப்படுத்துமா? இவ்வாறு வன்னி அரசு கேள்வி எழுப்பி உள்ளார்.












Click it and Unblock the Notifications