"ஒண்டியே" செய்றாரே.. போட்டோகிராபர்?.. பதற்றமில்லாமல் இவரால் எப்படி நடிக்க முடியுது.. வன்னியரசு டவுட்
வன்னிரயசு 3 கேள்விகளை பிரதமர் மோடிக்கு எழுப்பி ட்வீட் பதிவிட்டுள்ளார்
சென்னை: விசிகவின் வன்னியரசு, மொத்தம் 3 கேள்விகளை எழுப்பி உள்ளார்.. இந்த கேள்விகளால், அவரது ட்விட்டரே அல்லோலகல்லப்பட்டு காணப்படுகிறது.
சுத்தம் என்பது பிரதமர் மோடிக்கு நெருக்கமான விஷயம்.. அதனால்தான் தூய்மை இந்தியா என்ற திட்டத்தையே அன்று துவங்கி வைத்தார். இது அவரது கனவு திட்டமும் கூட.
அன்றைய தினம், காலையில், துடைப்பத்தைக் கையில் எடுத்து அவரே வீதியைச் சுத்தம் செய்து, இந்த திட்டத்தை துவங்கியும் வைத்தார்.

மகாபலிபுரம்
அந்த நிகழ்வு என்றில்லை, அவர் எங்கே சென்றாலும் கண்முன்னே குப்பையை பார்த்துவிட்டால் போதும்.. உடனே சுத்தம் செய்ய இறங்கிவிடுவார்.. நம்ம மகாபலிபுரத்துக்கு அன்று வந்திருந்தபோதுகூட, காலையில் வாக்கிங் முடித்துவிட்டு, கீழே பீச் மணலில் விழுந்து கிடந்த காலி வாட்டர் பாட்டில்களை எல்லாம் சேகரித்து சுத்தம் செய்து கொண்டிருந்தார்.. இப்போதும் அப்படித்தான் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. இதுதான் இன்றைக்கு ட்ரெண்டிங்கும்கூட..

சுரங்கப்பாதை
டெல்லியின் பிரகதி மைதான் பகுதியில் 920 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த போக்குவரத்து வழித்தடத் திட்டத்தின் கீழ் புதிதாக ஒரு சுரங்கப்பாதையும், ஐந்து சிறு சுரங்கப்பாதைகளும் அமைக்கப்பட்டுள்ளன... கடந்த 2019-ம் ஆண்டே இந்த திட்டம் முடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.. ஆனால், தாமதமாகிவிட்டது.. அதுவும் 6 முறை இந்த திட்டம் தள்ளிவைக்கப்பட்டது.. சில நாட்களுக்குமுன்புதான் இந்த பணிகள் எல்லாம் நடந்து முடிந்தன.

குப்பைகள்
1.6 கிமீ நீளமான இந்த சுரங்கப்பாதை, டெல்லியின் மதுரா சாலை மற்றும் பைரோன் மார்க் ஆகிய இடங்களில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதோடு நொய்டா, இந்தியா கேட், காஜியாபாத் போன்ற மற்ற பகுதிகளுக்கும் மக்கள் எளிமையாகப் பயணிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாம்.. இந்த சுரங்கப்பாதையைதான், இன்றைய தினம் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.. மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், ஹர்தீப் சிங் பூரி, சோம் பிரகாஷ், அனுப்ரியா படேல் ஆகியோர் இந்த விழாவில் பங்கேற்றனர்.

வாட்டர் பாட்டில்
இதனிடையே, புதிதாக தொடங்கப்பட்ட சுரங்கப்பாதையை பிரதமர் மோடி பார்வையிடுவதற்காக வந்தார்.. அப்போது அவர் கண்ணில், அங்கிருந்த குப்பைகள் தென்பட்டுவிட்டது.. உடனே கிளீனிங்கில் இறங்கிவிட்டார்.. அதுவும், அந்த குப்பைகளை எல்லாம் வெறும் கைகளாலேயே அகற்றியுள்ளார்.. சுரங்கப்பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அங்கே ஒரு காலி வாட்டர் பாட்டில் கிடந்தது.. அதையும் கீழே குனிந்து அப்புறப்படுத்தினார். இதுதொடர்பான வீடியோக்கள்தான் சோஷியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.
|
3 கேள்விகள்
இதைப்பார்த்த பலரும் மோடியின் சேவையை பாராட்டி வருகின்றனர்.. ஆனால், விசிகவின் வன்னியரசு மட்டும் வித்தியாசமான கேள்வியை கேட்டுள்ளார்.. இந்த வீடியோவை தன்னுடைய ட்விட்டரில் பகிர்ந்து, 3 கேள்விகளை கேட்டுள்ளார்.. அதில், "1.புகைப்படக்காரர் மட்டுமே உடன் சென்றுள்ளாரா? 2.பிரதமர் அலுவலகத்தில் கூட எல்லா வேலைகளையும் இவர் ஒண்டியே செய்கிறாரா? 3.#அக்னிபாத் மூலம் நாட்டை பதற்றமாக்கி விட்டு, இவர் மட்டும் எப்படி பதற்றமில்லாமல் நடிக்க முடிகிறது?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.. இந்த கேள்விகளை பிரதமருக்கும் டேக் செய்துள்ளார் வன்னியரசு.












Click it and Unblock the Notifications