குஷ்புக்கு எல்லாமே சூட்டிங்தான்..சிரிப்பால் சிக்கிட்டாங்களே! அழுகையெல்லாம் நடிப்பா? விக்ரமன் விளாசல்
சென்னை: செய்தியாளர்கள் சந்திப்பில் கேமராக்கள் முன் அழுதபடி பேசிய நடிகை குஷ்பு, அதன் பின் சிரிக்கும் காட்சி வெளியான நிலையில், அவருக்கு எல்லாமே சூட்டிங்தான் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் விக்ரமன் விமர்சித்து உள்ளார்.
திமுகவின் பேச்சாளர்களில் ஒருவராக இருந்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, சர்ச்சைகளுக்கு பெயர்போனவர். ஒரு முறை சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததற்காக கட்சியில் இருந்தே சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருந்தார். அதன் பின்னர் மீண்டும் கட்சிக்கு வந்த அவர், திமுக மேடைகளில் கலந்துகொண்டு பேசி வந்தார்.

இந்த நிலையில் சென்னையில் கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினரான பாஜகவை சேர்ந்த நடிகை குஷ்பு குறித்து அவர் தெரிவித்த கருத்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
இதற்கு பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்ததுடன் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகை குஷ்பு, "இவர்களுக்கு பெண்கள் பற்றி அவதூறாக பேச அதிகாரம் வழங்கியது யார்? திமுக கருணாநிதி இருந்தபோது இப்படி இல்லை.
பெண்களை அசிங்கப்படுத்துவதாக நினைத்து கருணாநிதியை இவர்கள் அசிங்கப்படுதுகிறார்கள். பெண்கள் பற்றி இழிவாக பேசும் தைரியம் யாருக்கும் வரக்கூடாது. அப்படி வந்தால் திருப்பி அடிப்போம். தேசிய மகளிர் ஆணையம் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேச்சு குறித்து தாமாக முன்வந்து விசாரணை நடத்த இருக்கிறது. எங்கு அடிக்க வேண்டுமோ அங்கு அடித்தால்தான் இவர்களுக்கு புத்தி வரும்.'' என்று கண்கலங்கியபடி பேசினார்.
குஷ்பு பேசிய சில மணி நேரத்திலேயே சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்குவதாக அறிவித்தார் கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன். மேலும் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உடனடியாக கைது செய்தனர். இந்த நிலையில்தான் குஷ்பு பேட்டியளித்த பின் அவர் செய்த ஒரு காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில் அழுதபடி பேட்டி கொடுத்த குஷ்பு, பேட்டி முடிந்த பிறகு ஓரமாக சென்று அமர்ந்து சிரிக்கிறார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் விக்ரமன் "நடிகை குஷ்பு அவர்கள் திமுக குறித்தும் தமிழினம் குறித்தும் தொடர்ந்து இழிவாக பதிவிட்டு வருகிறார். ஊடகவியலாளர் சந்திப்பில் கேமரா முன்னால் அழுதுவிட்டு விலகி வந்ததும் குலுங்கி குலுங்கி சிரிக்கிறார்.
அவருக்கு எல்லாமே சூட்டிங் தான். இத்தனை ஆண்டுகள் தமிழ்நாட்டில் இருந்தும் தமிழை சரிவர பேச முயற்சி செய்யாதவர். அவரிடம் வேறெதை எதிர்பார்க்க முடியும்? இருப்பினும் "யாகாவாராயினும் நாகாக்க" எனும் திருக்குறளை அவருக்கு பரிந்துரைக்கிறோம். தமிழ் தெரிந்தவர்களிடம் அதன் விளக்கத்தை தெரிந்து கொள்ளட்டும்." என்று ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார்.
-
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக












Click it and Unblock the Notifications