இளமையை எல்லாம் சினிமாவில் கழித்துவிட்டு கட்சியை ஆரம்பிச்சிட்டாரு! விஜய்யை விமர்சித்த வீரலட்சுமி
சென்னை: நடிகர் விஜய்யை விட அஜித்தான் நிறைய பேருக்கு உதவி செய்திருக்கிறார் என வீரலட்சுமி ஆவேசத்துடன் தெரிவித்தார்.
இதுகுறித்து தமிழர் முன்னேற்றப் படைத் தலைவர் வீரலட்சுமி செய்தியாளர்களிடம் கூறுகையில், மோவூர் கிராமத்தில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுமி 5 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

இந்த விஷயத்தை வீட்டில் சொல்ல பயந்த அந்த சிறுமி திடீரென தீவைத்துக் கொண்டார். இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் விஜய்யின் தீவிர ரசிகையாம். இதனால் ஒரு வீடியோ வெளியிட்டு தனது சிகிச்சைக்கு பணம் கொடுத்து உதவி செய்யுமாறு அந்த சிறுமி கேட்டுக் கொண்டார்.
அந்த வீடியோ எல்லா யூடியூப் சேனல்களிலும் வெளியானது. ஆனால் விஜய் அந்த பெண்ணுக்கு நேரடியாக உதவி செய்யவில்லை. ஆனால் அந்த பகுதியில் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் தங்களால் இயன்ற பணத்தை திரட்டி ரூ 50 ஆயிரமாக அந்த பெண்ணின் சிகிச்சைக்காக கொடுத்தனர்.
அந்த பணத்தை வைத்து மருத்துவ சிகிச்சையை அந்த சிறுமி மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து அந்த சிறுமிக்கு மேற்கொண்டு பணமில்லாத நிலை ஏற்பட்டது. இதனால் சிகிச்சை பெற முடியாமல் 5 அல்லது 6 மாதங்களில் அந்த சிறுமி இறந்துவிட்டார். தனது ரசிகையான சிறுமிக்கே விஜய் உதவவில்லை.
விஜய் இத்தனை காலமாக நடித்து சேர்த்து வைத்த பணத்தில் அவருக்கு விருப்பமிருந்தால் எங்கெல்லாம் கூரை வீடுகள் இருக்கிறதோ அங்கெல்லாம் கல் வீடு கட்டி கொடுக்க வேண்டும். அதற்கு விஜய்க்கு மனம் இருக்கிறதா? தன்னுடைய தீவிர ரசிகையான சிறுமியின் ஆசையை கூட நிறைவேற்ற முடியாத விஜய் தனது சொந்த காசை செலவழிப்பாரா.
விஜய்க்கு 47 வயது இருக்கும். அந்த இளமை காலத்தை எல்லாம் சினிமா துறையில் சல்லாபமாக கழித்த அவர் இத்தனை நாள் சேர்த்து வைத்த பணத்தை பாதுகாக்க அரசியலுக்கு வந்துள்ளார். ஏழை எளிய மக்களுக்கு நேரடியாக இறங்கி உதவி செய்ய அவருக்கு மனமிருக்கிறதா?
அப்படியிருந்தால் நாங்கள் விஜய்யின் அரசியல் பிரவேசத்தை வரவேற்கிறோம். வாழ்த்துகிறோம். சிறுமி இறந்த போது விஜய்க்கு கண்டனங்களை தெரிவித்ததால் அவருடைய ரசிகர்கள் என்னை விமர்சித்து வருகிறார்கள். சினிமாவை சினிமாவாக பாருங்கள் என அஜித் கூறியிருந்தார்.
அது போல் இளைஞர்களும் நடிகர்கள் பின்னால் செல்லாமல் தனது தாய், தந்தை, அண்ணன், தங்கை, அக்காள் உள்ளிட்டோரை பார்த்துக் கொள்ள வேண்டும். சினிமா பார்க்க போய் எத்தனையே இளைஞர்கள் உயிரிழக்கிறார்கள். இவர்கள் உயிர்த் தியாகம் செய்யும் அளவுக்கு நடிகர்கள் இவர்களுக்கு என்ன செய்துவிட்டார்கள்.
நீங்கள் கொடுக்கும் ரூ 1 , ரூ 2 பணம் மூலம் சினிமா பார்த்ததால்தான் நடிகர்கள் இத்தனை ஆடம்பர வாழ்க்கையில் இருந்து வருகிறார்கள். அதன் மூலம் அரசியல் கட்சியை ஆரம்பிக்கிறார்கள். இதற்கு காரணம் அவர்களிடம் இருக்கும் பணத்தை பாதுகாக்கத்தான். கஷ்டப்பட்டு வேலை செய்த பணத்தில் சினிமா பார்த்து நடிகர்களின் பொருளாதாரத்தை உயர்த்தும் ரசிகர்களுக்கு நடிகர்கள் என்ன செய்திருக்கிறார்கள்.
நடிகர்களை நம்பி அவர்கள் பின்னால் இளைஞர்கள் செல்ல கூடாது. அப்படி சென்றால் அவர்களுடைய வாழ்க்கை கெட்டு குட்டிச் சுவராகிவிடும். புயல் பேரிடர் காலங்களில் அஜித் ஏராளமான உதவிகளை செய்துள்ளார். உதவி செய்தால் அதை வெளியே சொல்லக் கூடாது, அதுதான் நம் பண்பாடு. ஆனால் விஜய் ரசிகர்கள் ஒரு ஆசிரமத்தில் உணவு பரிமாறும் போது ஒருவர் உணவு பரிமாற மற்றொரு கையில் விஜய் படத்தை வைத்து விளம்பரம் தேடிக் கொள்கிறார்கள் என வீரலட்சுமி தெரிவித்தார்.
-
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
"டிவிகேவால் தான் கரு கலைந்ததா?".. இதோடு உங்க நாடகத்தை நிறுத்திக்கோங்க!" ஜூலிக்கு நடிகர் வார்னிங் -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
ரூ.2500 உரிமைத்தொகை எப்போது கிடைக்கும்? நிதியமைச்சர் மரியவில்சன் கொடுத்த அப்டேட்! -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம்












Click it and Unblock the Notifications