நீங்க வேணா பாருங்க! 2024 தேர்தலில் நாம் தமிழர் ஒரு இடத்துல கூட டெபாசிட் வாங்காது! வீரலட்சுமி ஆவேசம்
சென்னை: நாம் தமிழர் கட்சி வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது என தமிழர் முன்னேற்ற படையின் நிறுவனத் தலைவி வீரலட்சுமி சவால் விடுத்துள்ளார்.
சீமான் தன்னை திருமணம் செய்துக் கொண்டு குடும்பம் நடத்திவிட்டு தன்னை கைவிட்டதாக 2011 ஆம் ஆண்டு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் விஜயலட்சுமி. இந்த நிலையில் 12 ஆண்டுகள் கழித்து மீண்டும் சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் விஜயலட்சுமி புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் விசாரணை நடத்துமாறு வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கு ஆணையர் அலுவலகம் உத்தரவிட்டது. இந்த வழக்கு விசாரணையில் விஜயலட்சுமிக்கு தமிழர் முன்னேற்ற படைத் தலைவி வீரலட்சுமி உதவியதாக தெரிகிறது.
விஜயலட்சுமி கமிஷனர் அலுவலகம் சென்றது முதல் அவர் சென்னையில் தங்குவதற்கான ஏற்பாடுகள் வரை வீரலட்சுமி செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விஜயலட்சுமிக்கு நடந்தது என்ன என்பது குறித்து சீமானை கடுமையாக விமர்சித்து வீரலட்சுமி அவ்வப்போது பேட்டி கொடுத்து வந்தார்.
இந்த நிலையில் வீரலட்சுமியை நாம் தமிழர் கட்சியினர் விமர்சித்ததாக தெரிகிறது. மேலும் தன்னால் வழக்கை எதிர்கொள்ள முடியவில்லை என்றும் வீரலட்சுமி தன்னை வேறு ரூட்டிற்கு அழைத்து செல்ல பார்க்கிறார் என்றும் கூறி சீமான் மீதான புகாரை விஜயலட்சுமி வாபஸ் பெற்றார். இந்த நிலையில் சீமானும் விஜயலட்சுமியும் ஒன்று சேர்ந்தால் மகிழ்ச்சியே என வீரலட்சுமி கூறிய நிலையில் சீமானுக்கும் வீரலட்சுமிக்கும் இடையே கடும் மோதல் போக்கு ஏற்பட்டது.
வீரலட்சுமியை சீமான் ஒருமையில் விமர்சித்திருந்தார். இந்த நிலையில் நேற்று முன் தினம் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் ஆஜரான போது வீரலட்சுமி தன்னிடம் பகிரங்கமாக பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என சீமான் கோரியிருந்தார். மேலும் விஜயலட்சுமியும், வீரலட்சுமி தன்னை பயன்படுத்தி சீமானிடம் இருந்து பணம் சம்பாதிக்க முயற்சித்தார் என பகீர் குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும்விதமாக வீரலட்சுமி பேசுகையில் விஜயலட்சுமி வழக்கு ஊடகங்கள் பேசும் அளவுக்கு தெரியப்படுத்தினரே நாங்கதான். எங்கள் உழைப்பு, திறமையால்தான் இந்த வழக்கு வெளியே வந்திருக்கிறது. இதனால் எனக்கு நிறைய பொருளாதார இழப்பு ஏற்பட்டது. நல்லது செய்ய போய் எனக்கு கெட்டபெயர் தான் மிஞ்சியது. என் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு தினமும் 100 பேர் ஆபாச மெசேஜ்களை அனுப்புகிறார்கள்.
ஒரு பெண் தலைவர் என்றும் பாராமல் ஆணும் பெண்ணும் நிர்வாணமாக இருக்கும் புகைப்படத்தை அனுப்புகிறார்கள். நாம் தமிழர் கட்சியின் பெண்கள் பாசறை நிர்வாகிகளும் கடுமையாக அவதூறாக பேசுகிறார்கள். ஆட்சி அதிகாரத்திற்கு வரும் முன்பே இப்படி செய்கிறார்கள். மக்கள் ஓட்டு போட்டு இவர்களை தேர்வு செய்தால், பெண்களுக்கு தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி பாதுகாப்பானதா
2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் சரி, 2021 இல் நடக்கும் தமிழக சட்டசபை தேர்தலிலும் சரி நாம் தமிழர் கட்சியினர் ஒரு இடத்திலாவது டெபாசிட் வாங்கினார்களா. டெபாசிட் வாங்க முடியலை, நீங்கள் பெண்கள் உரிமையை பேசுறீங்களா. வரும் தேர்தலிலும் டெபாசி வாங்க முடியாது என வீரலட்சுமி கொந்தளித்து பேசியுள்ளார்.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications