வீரமணியை காப்பாற்றிய திமுக பெரிய பவர்சென்டர்.. கைமாறிய கோடிகள்.. நிர்மல்குமார் பகீர் குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிறுமிகளுக்கு பாலியல் கொடுத்ததாக ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி அவரின் நண்பர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று காலை வீரமணியின் உதவியாளர் கணேசன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை திமுக மூடிமறைத்ததாக புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் திமுக, தவெக இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்படுகிறது. இந்நிலையில் வீரமணி திமுகவில் பெரிய பவர் சென்டரை அணுகியுள்ளார். இதற்கு பெரிய விலை கொடுத்துள்ளது என்று நிர்மல்குமார் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னையில் அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதியின் பேட்டியை பார்த்தேன் திமுக சில விஷயங்களில் ஓவர் ரியாக்ஷன் கொடுக்கிறது. தங்களின் தவறுகளை மறைப்பதற்காகவே இப்படி நடந்து கொள்கிறார்கள். ஜெம் கிரானைட் வீரமணி வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் ஆளுக்கொரு ப்ரஸ்மீட் கொடுக்கிறார்கள். அவர்களின் அனைத்துத் தலைவர்களையும் ரியாக்ட் செய்ய சொல்கிறார்கள்.

Veeramani

பதில் சொல்லியே ஆக வேண்டும்

அவர்கள் அதில் என்ன சொல்ல வருகிறார்கள் என்பது கேள்வி குறியாக உள்ளது. வீரமணி தொடர்பான வீடியோ எல்லாம் பார்த்தோம். அதில் நிழலாக இருந்தது. அதை போதுமான ஆதாரமாக எடுத்து கொள்ள முடியாது. ஆதாரம் வந்த பிறகு விசாரணையை தொடர்கிறோம் என்று தான் கூறினோம். திமுக ஆட்சியில் விசாரணையை கைவிடவில்லை என்று அமைச்சர் ரகுபதி கூறுகிறார்.

இவர் சட்டத்துறை அமைச்சராக 5 ஆண்டுகள் எப்படி இருந்தார் என்பதற்கு இதுதான் லட்சணம். இது தான் வழக்கை மூடிமறைக்கும் ரிப்போர்ட். நீதிமன்றம் சென்று எங்களுக்கு விசாரிப்பதற்கு மேலும் 2 மாத அவகாசம் வேண்டும் என்று தான் அரசு கேட்டிருக்க வேண்டும். அதைவிட்டு விசாரணையை மூடியது ஏன். வீடியோ நிழலாக இருந்தது என்று ரகுபதிக்கு சொன்னது யார். இதற்கு அவர் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

பெரிய பவர் சென்டர்

அவர் என்ன சொல்ல வருகிறார். வழக்கை கையாண்டவர்கள் அவரிடம் சொன்னாரா. இந்த ஆதாரம் ரெக்கார்டு ஆனதால் இப்போது சிக்கிவிட்டார்கள். இல்லையென்றால் ஆதாரத்தை அழித்து தப்பித்திருப்பார்கள். அண்ணா பல்கலைக்கழக வழக்கில் ஞானசேகரனை தப்பிக்க வைத்து, பிறகு அனைத்து கட்சியினர் போராடியதால் நடவடிக்கை எடுத்தனர். வீரமணி அமைச்சர்கள் போன்ற பவர் சென்டரை அணுகி தப்பிக்க பார்த்தார்.

சுமார் 5 மாதங்கள் வழக்கு கிடப்பில் போடப்பட்டது. ஆதாரங்களை ஆய்வு எல்லா விசாரணையும் நடத்தியுள்ளனர். வீரமணி பெரிய திமுகவில் முடிவெடுக்க கூடிய பெரிய பவர் சென்டரை அணுகித்தான் இந்த பிரச்சனைக்கு தீர்வு கண்டுள்ளார். அதற்கு பெரிய விலை கொடுத்திருப்பார்கள். குற்ற வழக்குகளில் இருந்து யாரும் தப்பிக்க விட மாட்டார்கள். திமுக தான் இதபோன்ற கேடுகெட்ட வேலையை செய்யும். இப்போதும் வீரமணியை காப்பாற்றும் முயற்சி நடக்கிறது" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+