பொதுமக்களுக்கு ஷாக்.. மீண்டும் உயரும் காய்கறி விலை.. ரூ.100ஐ நெருங்கும் தக்காளி! என்ன தான் பிரச்சினை
சென்னை: நமது அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திராவில் வரத்து குறைவதால் காய்கறி விலை திடீரென உயரத் தொடங்கியுள்ளன, தமிழகத்தில் தக்காளி உட்பட காய்கறி விலை உயரலாம் என அஞ்சப்படுகிறது.
தமிழ்நாட்டில் இப்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், சொந்த ஊர் சென்றவர்கள் அனைவரும் திரும்பியுள்ளனர். இதற்கிடையே கடந்த சில நாட்களாக மீண்டும் பெரும்பாலான காய்கறிகள் விலை உயரத் தொடங்கியுள்ளது.

குறிப்பாக நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் தக்காளி விலை கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அங்குத் தக்காளி விலை கிலோ ரூ.75க்கு விற்பனை செய்யப்படுகிறது. விரைவில் தக்காளி விலை ரூ.100ஐ தொடலாம் என்றும் கூறப்படுகிறது. சில்லறை விற்பனையில் ஏற்கனவே தக்காளி விலை ரூ.90ஐ நெருங்கிவிட்டது.
உயர்கிறது: கர்நாடகா மட்டுமன்றி ஆந்திராவிலும் பெரும்பாலான பகுதிகளில் தக்காளி உள்ளிட்ட விலை ஏறியுள்ளது. தக்காளி வரத்து குறைந்துள்ளதே இதற்குக் காரணமாகும். மதனப்பள்ளி, அனந்தப்பூர், சித்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து வரும் தக்காளி பெருமளவு குறைந்த நிலையில், இதுவே தக்காளி விலை உயர்வுக்குக் காரணமாக இருக்கிறது.
தக்காளி வரத்து மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்ப மேலும் சில வாரங்கள் வரை ஆகும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். பலமனேரு, ராயலசீமா மற்றும் ஆந்திரா-கர்நாடக எல்லையின் பிற பகுதிகளிலிருந்து வரும் தக்காளி வரத்துச் சீராகும் வரை தக்காளி பற்றாக்குறை இருக்கும் என்றும் இதனால் விலை உயர்வு அடுத்த சில வாரங்களுக்கு நீடிக்கும் எனக் கூறப்படுகிறது.
காய்கறிகள் விலை: தக்காளி மட்டுமின்றி வெங்காய விலையும் அதிகரித்துள்ளது. நாட்டில் வெங்காய உற்பத்தியில் முக்கிய மாநிலமாக இருக்கும் மகாராஷ்டிராவில் உற்பத்தி குறைந்துள்ளது. இதன் காரணமாகவே வெங்காய விலையும் உயர்ந்துள்ளது. கடந்த பல ஆண்டுகளாகவே ஒவ்வொரு ஆண்டும் கோடையில் வெங்காய விலை தொடர்ந்து உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இது மட்டுமின்றி இஞ்சி விலையும் ரூ.150ஐ தாண்டியுள்ளது. சிமிலிகுடா மற்றும் ஆந்திரா-ஒடிசா எல்லைப் பகுதிகளில் இருந்து வரும் இஞ்சி வரத்து குறைந்துள்ளதே இதற்குக் காரணமாகும். இதுபோல பெரும்பாலான காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. கத்திரிக்காய் உள்ளிட்ட சில காய்கறி விலை மட்டும் பெரியளவில் உயராமல் இருக்கிறது.
சென்னையில் என்ன நிலை: சென்னைக்குத் தேவையான காய்கறிகள் பெரும்பாலும் இந்த இரு மாநிலங்களில் இருந்து தான் வருகிறது. இரு மாநிலங்களிலும் உற்பத்தி குறைந்துள்ளதால் சென்னையிலும் காய்கறி விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
அதிகரிக்கும் செலவுகள்: பருவம் தவறிப் பெய்யும் கனமழையால் பல பகுதிகளில் அறுவடைக்குத் தயாராக இருந்த காய்கறிகள் பாதிக்கப்பட்டன.. இதுவே தட்டுப்பாடு ஏற்பட முக்கிய காரணமாகும். இது தொடர்பாக வியாபாரிகள் மேலும் கூறுகையில், "இது மட்டுமின்றி காய்கறியை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்ல ஆகும் போக்குவரத்து செலவும் அதிகரித்துள்ளது. மேலும், அதீத வெப்பத்தால் எடுத்து வரும் வழியிலேயே காய்கறிகள் சேதம் ஆவதும் கணிசமாக அதிகரித்துள்ளது. இவை எல்லாம் சேர்த்துத் தான் காய்கறி விலை உயர்வுக்குக் காரணமாக இருக்கிறது" என்றார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பருவமழை காலத்தில் தக்காளி விலை ரூ.100ஐ தொட்டது. தமிழ்நாட்டில் கூட சென்னை மட்டுமின்றி பல்வேறு ஊர்களிலும் தக்காளி விலை உச்சம் தொட்டே இருந்தது. இப்போது பள்ளிகள் திறந்துள்ள நிலையில், மீண்டும் தக்காளி விலை ரூ.100ஐ தொடலாம் என அஞ்சப்படுகிறது.
தக்காளி மட்டுமின்றி கிட்டத்தட்ட அனைத்து வகையான காய்கறிகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளன. இதனால் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications