சென்னையில் வீடு தேடி வரும் காய்கறிகள்.. 850க்கு மளிகை காம்போ பேக்.. எப்படி பெறுவது
சென்னை: சென்னையில் பிற்பகல் 1மணிக்குள் ஆர்டர் செய்து காய்கறி வீட்டிலேயே பெற்றுக்கொள்ளலாம் என்று மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பிரச்சனையால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளார். அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மளிகை பொருட்களை வாங்குவதற்காக வீடுகளை விட்டு வெளியே செல்லாமல் தடுப்பதற்காக அந்த பொருட்கள் வீடு தேடி வரவழைக்கும் புதிய திட்டத்தை சென்னை மாநகராட்சி துவங்கி உள்ளது.

இதன்படி சென்னையில் 20 குடும்பங்களுக்கு மேல் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள கீழ்கண்ட எண்களை மதியம் ஒரு மணிக்குள் தொடர்பு கொண்டு காய்கறிகளை பெற்றுக்கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
பல வீடுகள் சேர்ந்து மொத்தமாக வேண்டும் என்பவர்கள் ஆர்டர் செய்ய வேண்டிய தொலைப்பேசி எண்கள் பின்வருமாறு:
044-24791133
90256 53376
73050 50541
73050 50542
73050 50543
73050 50544
தனிநபர்கள் தங்களுக்கு காய்கறிகள் வேண்டும் என்றால் ஜுமோட்டோ, ஸ்வீகி மற்றும் டுன்ஜோ ஆகிவிற்றின் மூலம் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம். இதுவரை http://www.cmdachennai.gov.in/ என்ற இணையதளம் வழியாகவும் காய்கறிகளை ஆர்டர் செய்யலாம்.
இதுதவிர சென்னை மாநகராட்சி சார்பில் நடமாடும் மளிகை மற்றும் காய்கறி அங்காடிகள் துவக்கப்பட்டுள்ளது. 15 நாட்களுக்கு தேவையான காம்போ பேக்கை ரூ.850க்கு வாங்கிக்கொள்ளலாம். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறுகையில், "கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் இடையூறு இன்றி காய்கறிகள், மளிகை பொருட்களை வீட்டின் அருகே வரும் தள்ளுவண்டிகள் மூலம் பெற்றுக்கொள்ளலாம். இந்த நடமாடும் மளிகை அங்காடிகளில் நான்கு நபர்கள் கொண்ட குடும்பத்திற்கு 15 நாட்களுக்கு தேவைப்படும் அரிசி, பருப்பு, எண்ணெய், மிளகாய், உப்பு மற்றும் இதர மளிகை பொருட்கள் அடங்கிய காம்போ பேக் ரூ.850க்கு கிடைக்கும். இதன் மூலம் மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்கலாம் என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications