‛கத்தரி டூ தக்காளி’ வரை.. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் விலை அதிகரித்த காய்கறிகள்.. ஜுன் வரை ஷாக்
சென்னை: கோடை வெப்பத்தால் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கத்தரி முதல் தக்காளி வரை அனைத்து காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. மேலும் இந்த விலையேற்றம் என்பது வரும் ஜுன் மாதம் நீடிக்கும் என கூறப்படுவதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக காய்கறிகளின் விலை என்பது படிப்படியாக உயர்ந்து கொண்டே செல்கிறது. கோடை வெயில் அதிகரித்து இருப்பது தான் இதற்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது. அதாவது அதிகப்படியான வெயிலால் காய்கறிகளின் விளைச்சல் என்பது பல இடங்களில் குறைந்துள்ளது.

அதேவேளையில் காய்கறிகளின் தேவை மட்டும் குறைந்தபாடில்லை. இதனால் இயல்பாகவே காய்கறிகளின் விலை என்பது அதிகரிக்க தொடங்கி உள்ளது. அதற்கு சென்னை கோயம்பேடு மார்க்கெட்டும் விதிவிலக்கல்ல.
கோயம்பேடு மார்க்கெட்டிலும் காய்கறிகளின் விலை என்பது அதிகரித்துள்ளது. அதன்படி கடந்த மாதம் 23ம் தேதியை ஒப்பிடும்போது இன்றைய நாளில் பல காய்கறிகளின் விலை என்பது உயர்ந்துள்ளது. ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ.15 முதல் ரூ.30க்கு விற்பனையான நிலையில் தற்போது ரூ.45க்கு விற்கிறது. தக்காளி கிலோ ரூ.10 முதல் ரூ.25க்கு விற்ற நிலையில் தற்போது ரூ.30க்கு விற்பனையாகிறது. முட்டைகோஸ் ரூ.10 முதல் ரூ.25க்கு விற்பனையான நிலையில் தற்போது ரூ.30க்கு விற்பனையாகிறது.
மேலும் பீன்ஸ் ஒரு கிலோ ரூ.120 முதல் 150ல் இருந்த நிலையில் தற்போது ரூ.180 க்கு விற்பனையாகிறது. சின்ன வெங்கம் ரூ.30 முதல் ரூ.55 வரை விற்பனையான நிலையில் தற்போது ரூ.70 ஆக உயர்ந்துள்ளது. பீட்ரூட் ரூ.20 முதல் ரூ.30க்கு விற்ற நிலையில் தற்போது ரூ.50 ஆக அதிகரித்துள்ளது. உருளைக்கிழங்கு ரூ.20 முதல் ரூ.30 ஆக விற்ற நிலையில் ரூ.50 ஆக அதிகரித்துள்ளது. ஒரு கிலோ வெள்ளரிக்காய் ரூ.15 முதல் ரூ.25க்கு விற்ற நிலையில் இப்போது ரூ.50க்கு விற்பனையாகிது.
மேலும் தற்போதைய விலையேற்றத்துக்கு வியாபாரிகள் சில முக்கிய காரணத்தை கூறுகின்றனர். பொதுவாகவே கோடை வெப்பத்தால் காய்கறிகளின் உற்பத்தி சரிந்துள்ளது. இது விலையேற்றத்துக்கு முக்கிய காரணமாகும். மேலும் வாகன கட்டணம், தொழிலாளர் சம்பளம் உள்ளிட்டவை சமீபத்தில் அதிகரித்தது இன்னொரு காரணமாகும்.
அதுமட்டுமின்றி கோடை வெயிலால் காய்கறிகள் உடனடியாக வாடி விடுகின்றன. வாடிய காய்கறிகளை மக்கள் வாங்குவது இல்லை. இதனால் நஷ்டம் ஏற்படுகிறது. இந்த நஷ்டத்தை சரிசெய்ய சற்று விலை உயர்த்தி விற்பனை செய்யப்படுகிறது. கோயம்பேட்டை பொறுத்தவரை கேரட், பீன்ஸ், பீட்ரூட் ஆகியவற்றின் வரத்து குறைந்துள்ளது. ஆனால் டிமாண்ட் அதிகரித்துள்ளதால் விலை உயர்ந்துள்ளது.
இவை தான் காய்கறி விலை உயர்வுக்கான முக்கிய காரணம் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் விலையேற்றம் வரும் நாட்களில் இன்னும் அதிகரிக்கலாம் எனவும், பருவமழை தொடங்கும் ஜுன் மாதத்துக்கு பிறகு காய்கறிகளின் விலை குறையலாம் எனவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இது இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications