சென்னை - பெங்களூர் நெடுஞ்சாலையில் 3 கிமீ அணிவகுத்த வாகனங்கள்.. ஸ்ரீபெரும்புதூரில் கடும் ‛டிராபிக்'
சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே மாம்பாக்கம் - சுங்குவார்சத்திரம் இடையே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 3 கிலோமீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் வாகன ஓட்டுநர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே மாம்பாக்கம், சுங்குவார்சத்திரம் உள்ளிட்ட ஏரியாக்கள் உள்ளன. இது தொழில் நிறுவனங்கள் நிறைந்த பகுதியாகும். இந்நிலையில் அந்த வழியாக செல்லும் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

அதாவது இந்த பகுதியில் ஏற்கனவே பாலம் வேலை நடக்கிறது. இதனால் வாகனங்கள் சர்வீஸ் ரோடு வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன. நெடுஞ்சாலையை ஒப்பிடும்போது சர்வீஸ் ரோடு மிகவும் குறுகலானது.
இப்படியான சூழலில் தான் சர்வீஸ் ரோட்டில் சென்ற கண்டெய்னர் லாரி பழுதாகி நடு வழியில் நின்றது. கண்டெய்னர் லாரியால் நகர முடியவில்லை. இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் 3 கிலோமீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது கண்டெய்னர் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்யும் பணி தொடங்கி உள்ளது.
குறிப்பாக கண்டெய்னர் உள்பட ஏராளமான லாரிகள் இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கி உள்ளன. அந்த லாரிகள் அருகே உள்ள தொழிற்சாலைகளுக்கு பொருட்களை ஏற்றி செல்வதாக கூறப்படுகிறது. இந்த போக்குவரத்து நெரிசல் காரணமாக அந்த தொழிற்சாலைகளுக்கான சப்ளையில் தாமதம் ஏற்பட உள்ளது.
அதேபோல் இன்று சனிக்கிழமை.. சென்னையில் இருந்து ஏராளமானவர்கள் இந்த நெடுஞ்சாலை வழியாக சொந்த ஊர்களுக்கு செல்ல உள்ளனர். இந்த போக்குவரத்து நெரிசல் அவர்களின் பயணத்தையும் கூட பாதிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் விரைந்து போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் பணி நடந்து வருகிறது.
-
அலப்பறைக்கு ரெடியான RCB ரசிகர்கள்.. பெங்களூரில் மேம்பாலங்களை மூடும் போலீசார்.. பின்னணி இதுதான் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக











Click it and Unblock the Notifications