வேளச்சேரி டூ மேடவாக்கம்.. ஆஹா, பள்ளிக்கரணையில் பார்த்தீங்களா? சள்ளுனு பறந்து வந்துடுச்சாம்..அற்புதம்
சென்னை: பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் பறவைகளின் சீசன் துவங்கி உள்ள நிலையில், பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் ஆர்வமாகி உள்ளனர்..!!
தற்போது தமிழகமெங்கும் மழை பெய்து வருகிறது.. அந்தவகையில், சென்னைக்கும் நல்ல மழை அவ்வப்போது கிடைத்து வருகின்றன.. நீர்நிலைகளும் நிரம்பி காணப்படுகின்றன.. குறிப்பாக, பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதியில், நீர்வளம் பெருகி உள்ளது..

நீர்நிலைகள்: வழக்கமாக, இதுபோன்ற அக்டோபர் மாதங்களில், பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதிக்கு, வெளிநாட்டு பறவைகள் வருகை தருவது வழக்கமாகும்.
அக்டோபர் முதல் ஏப்ரல் வரை இந்த பறவைகள் வந்து செல்லும்.. இப்போதைக்கு சாம்பல்தலை, மஞ்சள் வால்பறவை, கர்கேனி, நீலசிறகு வாத்து, தட்டைவாயன் போன்ற அரிய வகை பறவைகள் வரத்தொடங்கி உள்ளனவாம்.. அதாவது, மஞ்சள் வாலாட்டி - 60, நீலசிறகு வாத்து - 50, தட்டைவாயன் - 1, சாம்பல்தலை ஆள்காட்டி- 2 என பறவைகளின் வருகை உள்ளது.
ரஷ்யா, கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவை கடந்து, பறவைகள் அதிகமாகவே, இனிவரும் நாட்களில் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்ல, வடகிழக்கு பருவ மழைப்பொழிவு அதிகமாகும்போது, இந்த பறவைகளின் எண்ணிக்கையும் உயரும் என்கிறார்கள்.
மகிழ்ச்சி : எனினும், மெட்ரோ ரயில் கட்டுமானம் உள்ளிட்ட பணிகள் நடந்து வரும் நிலையில், பறவைகளின் வருகை வழக்கமான அளவில் இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், கட்டுமான பணிகளால் சதுப்பு நிலத்தின் சூழலியலுக்கு பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் பறவைகள் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

பள்ளிக்கரணை சதுப்பு நிலமானது வேளச்சேரி முதல் மேடவாக்கம் வரை பரவியிருக்கிறது.. இங்கு, கடந்த 2022 அக்டோபர் நிலவரப்படி, 190 வகை பறவைகள் வந்து சென்றுள்ளன.. இதில், 72 வகை பறவைகள் வெளி நாடுகளில் இருந்து வந்து செல்கின்றன. அதிகபட்சமாக வருடத்துக்கு மொத்தம் 41,000 பறவைகள் வந்து செல்வது உறுதியாகியிருக்கிறதாம்.
கணக்கெடுப்பு: வழக்கமாக, தமிழ்நாட்டில் பறவைகள் கணக்கெடுப்பு பணியானது, வடகிழக்கு பருவமழை முடிந்த பிறகே நடைபெறும். அதன்படி 2022-2023ம் வருடத்திற்கான பறவைகள் கணக்கெடுப்பானது நீர் பறவைகள் மற்றும் நிலப் பறவைகள் என 2 கட்டங்களாக நடைபெற்றன.. ஜனவரி 28 மற்றும் 29 ஆகிய தேதிகளிலும், நிலப் பறவைகளின் கணக்கெடுப்பானது மார்ச் 4 மற்றும் 5 தேதிகளிலும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து












Click it and Unblock the Notifications