செஸ் சாம்பியன்களுக்கு வேலம்மாள் பள்ளியில் பிரம்மாண்ட பாராட்டு விழா.. ரூ.60 லட்சம் ரொக்கப் பரிசு
சென்னை: வேலம்மாள் பள்ளியில் செஸ் சாம்பியன்களுக்கு மாபெரும் பாராட்டு விழா நடைபெற்றது. அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு ஆகியோர் பங்கேற்று ரூ.60 லட்சம் பரிசுத்தொகையை வழங்கினர்.
இது தொடர்பாக வேலம்மாள் பள்ளி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இளம் திறமையாளர்களை வளர்ப்பதில் முன்னோடியாகத் திகழும் வேலம்மாள் நெக்ஸஸ் பள்ளியில் உலக அளவில் செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் வியத்தகு சாதனைகள் படைத்த பள்ளி மாணவர்களை கவுரவிக்கும் வகையில் மாபெரும் பாராட்டு விழா நடைபெற்றது.

வேலம்மாள் நெக்ஸஸ் பள்ளிகளின் முதன்மை பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த கண்கவர் பாராட்டு விழா நிகழ்ச்சியில், உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 2-வது இடம் பிடித்த பிரக்ஞானந்தா ரமேஷ்பாபு, உலக அளவில் 8-வது நிலை வீரரும், இந்தியாவின் நம்பர் 1 செஸ் விளையாட்டு வீரருமான குகேஷ், ஆசியாவின் 2வது இடம் பிடித்த டென்னிஸ் வீராங்கனை ஹரிதா ஸ்ரீ, உலக பள்ளி செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கம் வென்ற வீரர்கள் மற்றும் செஸ் பயிற்சியாளர் வேலவன் ஆகியோரது சிறப்பான செயல்பாடுகளை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே. சேகர் பாபு, பத்மவிபூஷன் விருதாளரும், புகழ்பெற்ற செஸ் வீரருமான விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர். வேலம்மாள் கல்விக் குழுமத்தின் தாளாளர் திரு. எம்.வி.எம்.வேல் மோகன் இந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் சிறப்பு விருந்தினர்கள், செஸ் சாம்பியன்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. பெருமிதம் சூழ்ந்த இந்த நிகழ்வில் வேலம்மாள் நெக்ஸஸ் நிர்வாகம் சார்பில் சர்வதேச அளவில் சாதனை படைத்த செஸ் சாம்பியன்களுக்கு ரூ.60 லட்சம் பரிசுத்தொகையினை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கி கௌரவித்தார்.
பாராட்டு விழா கொண்டாட்டத்திற்கு வருகை புரிந்த முக்கியப் பிரமுகர்கள், செஸ் சாம்பியன்கள் மற்றும் இளம் திறமையாளர்களை வளர்ப்பதில் தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் வேலம்மாள் குடும்பத்தினர் அனைவருக்கும் தாளாளர் எம்.வி.எம். வேல்மோகன் தனது நன்றியைத் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், வேலம்மாள் நெக்ஸஸ் இளம் திறமையாளர்களை அடையாளம் கண்டு அவர்களை சாதனையாளர்களாக உயர்த்துகிறது என்பதை மீண்டும் ஒருமுறை உறுதி செய்திருக்கிறது.
எதிர்காலத்தில் இன்னும் பல மாணவர்கள் மிகப்பெரிய அளவில் சாதனைகள் படைக்க காத்திருக்கின்றனர் இவ்வாறு கூறினார். இவ்விழாவில் சட்டமன்ற உறுப்பினன்ர் திரு ஜோசப் சாமுவேல், மாமன்ற உறுப்பினர் பிகே மூர்த்தி, வேலம்மாள் நெக்ஸஸ் பள்ளிகளின் இணை தாளாளர் எம்.வி.எம்.வி. ஸ்ரீராம் வேல்மோகன் மற்றும் பல பிரமுகர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications