சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"டபுள் ஸ்வீட்".. யாரு நம்ம வெல்லமண்டியா.. அதெப்படி இவருக்கு மட்டும்?.. தேனிக்கு ஓடிய மாஜி.. என்னவாம்

ஓபிஎஸ்ஸுடன் தேனியில் ஆதரவாளர்களுடன் சந்தித்து பேசியிருக்கிறார் வெல்லமண்டி நடராஜன்

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவில் சமீபகாலமாகவே ஒதுங்கிக் கிடந்த வெல்லமண்டி நடராஜன், திடீரென சீனில் வந்துள்ளார்.. அத்துடன் டபுள் சந்தோஷத்திலும் இருக்கிறாராம்.. என்ன காரணம்?

Recommended Video

    OPS எந்த அணியில் இருந்தாலும் விசுவாசமாக இருப்பார் | Kolathur Krishnamurthy

    கோர்ட்டு உத்தரவுப்படி இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பதவியும், புதிதாக நியமிக்கப்பட்ட அவைத்தலைவர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளும் செல்லாததாகி விட்டன.

    இந்த தீர்ப்பு வெளியாகிய நிலையில்தான், கூட்டுத்தலைமையோடு மறுபடியும் ஒன்று கூடுவோம், கட்சியை நடத்துவோம் என்று ஓபிஎஸ் வேண்டுகோள் விடுத்தார்.

    உங்களுக்கு என்ன உரிமை இருக்கு? ஒன்று விடாமல் புட்டு புட்டு வைத்து.. ஓபிஎஸ் மீது மாஜி சரமாரி அட்டாக் உங்களுக்கு என்ன உரிமை இருக்கு? ஒன்று விடாமல் புட்டு புட்டு வைத்து.. ஓபிஎஸ் மீது மாஜி சரமாரி அட்டாக்

    கறார்தன்மை

    கறார்தன்மை

    ஆனால், அந்த வேண்டுகோளை எடப்பாடி பழனிசாமி நிராகரித்து விட்டார். இருவரும் இணைந்து செயல்பட இனி வாய்ப்பே இல்லை என்பதையும் திட்டவட்டமாகவும் சொல்லிவிட்டார்.. எனவே, அடுத்து என்ன செய்வது? என்ற ஆலோசனையில் ஓபிஎஸ் ஈடுபட்டு வருகிறார்.. அந்த ஆலோசனையில் நடந்தஒரு சில விஷயங்கள்தான் கசிந்து வருகின்றன.. ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமி மறைந்து ஓராண்டாகி விட்ட நிலையில், பெரியகுளத்தில் அவரது வீட்டிற்கு பல நிர்வாகிகள் நேரில் வந்தனர்.. விஜயலட்சுமி படத்திற்கு அஞ்சலி செலுத்திவிட்ட நிலையில், சூட்டோடு சூட்டாக ஓபிஎஸ்ஸுடன் ஆலோசனை நடத்தினர்..

     வெல்லமண்டி + ஓபிஎஸ்

    வெல்லமண்டி + ஓபிஎஸ்

    விஜயலட்சுமியின் நினைவுநாள், இந்த ஆலோசனைக்கு ஒரு சாக்காக அமைந்துவிட்டது.. பல ஆதரவாளர்கள் அங்கு வந்திருந்த நிலையில், மாஜி அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் திடுதிப்பென 50 நிர்வாகிகளுடன் என்ட்ரி தந்ததுதான் மிகப்பெரிய ட்விஸ்ட்டாக அமைந்துள்ளது.. வெல்லமண்டி + ஓபிஎஸ் கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் தனியாக ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள்.. யாராவது எடப்பாடி தரப்பில் இருந்து, ஓபிஎஸ் பக்கம் வரப்போகிறார்களா என்று தெரியவில்லை.. ஆனால், இதைபற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு வெல்லமண்டி நடராஜன் பதிலளிக்க மறுத்து விட்டார்... இவர் மறுத்து நழுவி சென்றதே, சந்தேகத்தை கிளப்பி விட்டு வருகிறது.

     சிவப்பு கம்பளம்

    சிவப்பு கம்பளம்

    அதிமுக மாஜிக்களில் அடிக்கடி சலசலப்புக்கு உள்ளாகுபவர் வெல்லமண்டி நடராஜன்.. அதிமுகவின் திருச்சியின் மொத்த பலமே இந்த சீனியர் தலைவர்தான்.. எனினும் உட்கட்சி பூசல் திருச்சியில் அடிக்கடி ஏற்பட்டு கொண்டே இருக்கும்.. கடந்த சட்டமன்ற தேர்தலின்போது இந்தத் தொகுதியில், அதிமுக வேட்பாளர் தோல்வி என்பது எதிர்பார்த்ததுதான்.. ஆனால், நேரு வெற்றிபெறுவதற்கு சிவப்புக் கம்பளம் விரித்தவர் வெல்லமண்டி என்று வெளிப்படையாகப் பேசியிருந்தனர் எடப்பாடி ஆதரவாளர்கள்.

     முணுமுணுப்பும், சலசலப்பும்

    முணுமுணுப்பும், சலசலப்பும்

    அதுமட்டுமல்ல, உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக கவுன்சிலர்கள் , திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் குமாரருடன் எடப்பாடி பழனிச்சாமியை சேலத்தில் உள்ள அவரது வீட்டிற்கு வந்து சந்தித்து வாழ்த்து பெற்றனர். அதேபோல, மாஜி அமைச்சர் பரஞ்சோதியும் தன்னுடைய ஆதரவாளர்களுடன் சென்று எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தார். ஆனால் வெல்லமண்டி நடராஜன் மட்டும் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க போகவே இல்லை.. ஒருவேளை இவர் சசிகலா பக்கம் தாவப்போகிறாரோ என்ற சலசலப்பும் எழுந்தது..

     டபுள் சந்தோஷம்

    டபுள் சந்தோஷம்

    இப்போது ஓபிஎஸ்ஸே, சசிகலாவுக்கு அழைப்பு விடுத்துள்ளதால், சசிகலா., தினகரன் தரப்பும் எப்போது வேண்டுமானாலும் இணையும் சூழலில் உள்ளதால், வெல்லமண்டிக்கு டபுள் சந்தோஷத்தை தந்துள்ளதாம்.. 50 ஆதரவாளர்களுடன் தேனிக்கு சென்றதற்கு இதுவும் ஒரு காரணம் என்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, அதேபோல, எடப்பாடி கூட்டிய பொதுக்குழுவிலும் வெல்லமண்டி பங்கேற்காத நிலையில், ஒற்றை தலைமைக்கு எதிரான தன் கருத்துக்களை மட்டும் அடிக்கடி சொல்லி வந்தார். இதனால் நிறைய அதிருப்திக்கும் வெல்லமண்டி ஆளானார்.

     ஆபீஸுக்கு வந்துடுங்க

    ஆபீஸுக்கு வந்துடுங்க

    அதிலும் கடந்த மாதங்களில் அடுத்தடுத்து, நீதிமன்ற தீர்ப்புகள் எடப்பாடி பக்கமே வந்துகொண்டிருந்த நிலையில், ஒருவேளை அவசரப்பட்டு கருத்துக்களை சொல்லிவிட்டோமோ என்றுகூட கலங்கினாராம்.. இருந்தாலும் தன் முடிவில் இருந்து பின்வாங்காமல் இருந்துள்ளார்.. அதனால்தான், கடந்த வாரம் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவான ஹைகோர்ட் தீர்ப்புக்கு முதல் நாளே, தன்னுடைய ஆதரவாளர்களுக்கு போனை போட்ட வெல்லமண்டி, "நிச்சயம் தீர்ப்பு நமக்கு சாதகமாத்தான் வரும். எல்லாரும் நாளைக்கு காலையில் நம்ம ஆபீஸுக்கு வந்துடுங்க" என்றும் நம்பிக்கையுடன் சொன்னாராம்..

     டபுள் குஷி

    டபுள் குஷி

    தீர்ப்பே மறுநாள்தான் வந்த நிலையில், வெல்லமண்டிக்கு மட்டும் எப்படி உறுதியாக முடிவு தெரிந்தது? என்று குழம்பி போயுள்ளனராம் திருச்சி திமுக... தேனியில் ஓபிஎஸ்ஸை ஆதரவாளர்களுடன் சந்தித்ததற்கு, ஹைகோர்ட்டின் தீர்ப்பும் ஒரு காரணமாம். எப்படியோ, அதிருப்தியாளர்கள் ஒவ்வொருவராக ஓபிஎஸ்ஸுக்கு ஓடி வந்து கை கொடுத்து கொண்டிருக்கிறார்கள்.. அடுத்து என்னாகும்? பார்ப்போம்..!

    English summary
    Vellamandi Nadarajans Double Happiness and What is the reason behind meeting OPS ஓபிஎஸ்ஸுடன் தேனியில் ஆதரவாளர்களுடன் சந்தித்து பேசியிருக்கிறார் வெல்லமண்டி நடராஜன்
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X