ஆம்பூருக்கு மெகா பரிசு.. நிர்மலா ஹிட் அறிவிப்பால் வேலூர் மாவட்டமே மாறுது.. இதுவே பாஜக வர்த்தக அரசியல்
சென்னை: 2026-27 மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் அறிவித்துள்ள பல்வேறு அறிவிப்புகள் நாட்டு மக்களின் கவனத்தை பெற்று வருகின்றன.. அந்தவகையில் ஒடிசா மாநிலம் தால்சரில் இருந்து வேலூர் மாவட்டம் ஆம்பூருக்கு நீர்வழிப்பாதை அறிவிக்கப்பட்டுள்ளது.. ஒடிசாவுக்கும் ஆம்பூருக்கும் என்ன சம்பந்தம்? எதற்காக நம்ம ஆம்பூரை இதில் இணைக்க வேண்டும்? அதற்கான சாத்திய கூறுகள் என்ன? சுருக்கமாக இங்கே பார்க்கலாம்...!
ஒடிசாவின் தால்சரில் இருந்து வேலூர் மாவட்டம் ஆம்பூர் வரையிலான புதிய நீர்வழிப்பாதை திட்டம் இன்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது..

இதனை வெறும் போக்குவரத்து வசதியாக மட்டுமே பார்க்க முடியாது.. இந்தியாவின் கிழக்கு பகுதியை தெற்கோடு இணைக்கும் ஒரு பிரம்மாண்ட அரசியல் இதில் மறைந்துள்ளது.. மிகச்சிறந்த பொருளாதார உத்தியாகவும் கவனிக்கப்படுகிறது..
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
காரணம், வட மாநில கனிம வளங்களையும் தென் மாநில உற்பத்தி திறனையும் ஒரு நேர்க்கோட்டில் இணைப்பதன் மூலம் இந்திய பொருளாதாரத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த மத்திய அரசு திட்டமிடுவது தெரியவருகிறது..
வரலாற்று ரீதியாக கவனித்தோமானால், ஒடிசா போன்ற மாநிலங்கள் இயற்கை வளங்கள் நிறைந்திருந்தாலும், அவற்றை முறையாக பயன்படுத்துவதற்கான கட்டமைப்பு வசதிகள் குறைவாகவே உள்ளன...
வேலூர் மாவட்டம்
தால்சர் பகுதி இந்தியாவின் நிலக்கரி மற்றும் தாதுக்களின் இதயமாக விளங்கி கொண்டிருக்கிறது.. அங்கிருந்து சரக்குகளை சாலை வழியாகவோ அல்லது ரயில் வழியாகவோ கொண்டு வருவது என்பது லேசுபட்ட வேலையில்லை.. நிறைய காசு தேவைப்படும்.. நிறைய டைம் எடுக்கும்..
ஆனால் இப்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த நீர்வழிப்பாதை, இந்தியாவின் கிழக்கு கடற்கரை வழித்தடத்தினால் சரக்கு போக்குவரத்து செலவு பல மடங்கு குறையும்.. நேரம் மிச்சமாகும்.. உலகளாவிய சந்தையில் இந்திய பொருட்களின் விலையை போட்டித்தன்மையுடன் வைத்திருக்க உதவும்.
என்ன காரணம் ஆம்பூர்?
எனினும் இதற்கு எதற்கு நம்முடைய ஆம்பூர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது? என்றுதானே கேட்கிறீர்கள்.. அதிலும் ஒரு சீக்ரெட் உள்ளது..
ஆம்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள வாணியம்பாடி, ராணிப்பேட்டை பகுதிகள் பல வருட காலமாகவே இந்தியாவின் தோல் மற்றும் காலணி ஏற்றுமதியில் முக்கியப் பங்கு வகித்து வருகின்றன.. ஆம்பூரில் இருந்துதான் லண்டன், நியூயார்க் போன்ற நகரங்களுக்கு உலகத்தரம் வாய்ந்த தோல் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
ஆம்பூர் பெஸ்ட் சாய்ஸ்
ஒரு நீர்வழிப்பாதை ஆம்பூர் வரை வரும்போது, அது இந்த பிராந்தியத்தை ஒரு மிகப்பெரிய சரக்கு போக்குவரத்து முனையமாக மாற்றும்.. இந்த நீர்வழிப்பாதை மூலம் மூலப்பொருட்களைக் கொண்டு வருவதற்கும், தயாரான பொருட்களை துறைமுகங்களுக்கு அனுப்பி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கும் வசதியாக இருக்கும் என்பதால்தான் நம்முடைய ஆம்பூர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது..
மேலும், இந்த திட்டமானது உள்ளூர் இளைஞர்களுக்கு பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன், தமிழகத்தின் உள்மாவட்ட பொருளாதாரத்தை வலுப்படுத்தும்.
திராவிட பொருளாதார மாடல்
இதையே அரசியல் ரீதியாக சற்று உற்று கவனித்தால், மத்திய அரசு தமிழகத்தின் உட்கட்டமைப்பு வசதிகளில் அதிக கவனம் செலுத்துவதை இது காட்டுகிறது...
திராவிட பொருளாதார மாடல் மற்றும் மத்திய அரசின் ஜி-7 பொருளாதார இலக்கு ஆகிய இரண்டிற்கும் இடையே ஒரு பாலமாக இந்த திட்டம் அமையும்.
தமிழக அரசு முன்னெடுக்கும் தொழில் வளர்ச்சித் திட்டங்களுக்கு இந்த நீர்வழிப்பாதை ஒரு பெரும் ஊக்கத்தை அளிக்கும் என்றே தெரிகிறது.. அதுமட்டுமல்ல, நீர்நிலைகளை பற்றியும் பயப்பட தேவையில்லை. காரணம், இது ஒரு பசுமை போக்குவரத்து முறை என்பதால் நீண்ட கால அடிப்படையில் நன்மை பயக்கும் என்றே கருதப்படுகிறது.
பாஜக வர்த்தக அரசியல்
இதன் மூலம் ஒடிசாவின் சுரங்கங்களும் ஆம்பூரின் தொழிற்சாலைகளும் சேர்ந்து, நம்முடைய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் ஏற்படுத்தும் என்றும் நம்பப்படுகிறது..
மொத்தத்தில் தால்சர் - ஆம்பூர் நீர்வழிப்பாதை என்பது வெறும் சிமெண்ட் மற்றும் தண்ணீருக்கான பாதையாக மட்டுமல்லால், அது வடக்கையும் தெற்கையும் வர்த்தக ரீதியாக ஒன்றிணைக்கும், பாஜகவின் புதிய வர்த்தக அரசியலாக பார்க்கப்படுகிறது... பொறுத்திருந்து பார்ப்போம்...!!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications