மக்கள் இலவசத்திற்கு கையேந்தும் நிலை மாற வேண்டும்! வாணியம்பாடி துயர நிகழ்வால் வேல்முருகன் வேதனை!
மக்கள் இலவசத்திற்கு கையேந்தும் நிலை மாற வேண்டும் என வேல்முருகன் கூறுகிறார்.
சென்னை: மக்கள் இலவசத்திற்கு கையேந்தும் நிலை மாற வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
வாணியம்பாடியில் இலவச வேட்டி சேலைகள் வழங்கும் நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழந்தது வேதனையளிப்பதாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

இலவசத்திற்கு கையேந்தும் நிலை
மக்கள் இலவசத்திற்கு கையேந்தும் இந்நிலையும் இலவசத்தின் பெயரால் தொடரும் மரணங்களும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தைப்பூசத்தை முன்னிட்டு, தனியார் நிறுவனம் சார்பில் நடந்த இலவச வேட்டி- சேலைகள் வழங்கும் நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.

காவல்துறை கண்காணிப்பு
முன் அனுமதி பெற்று இந்த இலவச வேட்டி, சேலைகள் வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டிருந்தாலும், ஒரு குறிப்பிட்ட அளவில் மட்டும் மக்கள் அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும். மக்கள் வரிசையில் செல்ல தடுப்புகளும், உரிய பாதுகாப்பும் இருக்கிறதா என காவல்துறை கண்காணித்த பிறகே, இந்நிகழ்ச்சியை நடத்திருக்க வேண்டும்.

4 பெண்கள்
எனவே, எதிர் வரும் காலத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் எந்த நலத்திட்ட நிகழ்ச்சி என்றாலும், அதனை யார் நடத்தினாலும், அரசிடம் தெரியப்படுத்தி முறையான அனுமதி பெற வேண்டும்.வாணியம்பாடியில் நெரிசலில் சிக்கி உயிரிழந்த 4 பெண்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்க தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும்.

ஆறுதலும் இரங்கலும்
இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.உயிரிழந்த 4 பெண்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும்,ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications