உரம் விலையை குறைத்து..தட்டுப்பாடின்றி கிடைக்கச் செய்ய வேண்டும்..அரசுக்கு வேல்முருகன் வலியுறுத்தல்.!
சென்னை: விவசாயிகளுக்கு குறைந்த விலையில் தடுப்பாடின்றி உரம் கிடைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து, சம்பா நெற்பயிர் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

சம்பா சாகுபடி
தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து, சம்பா நெற்பயிர் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். விவசாயிகளில் பெரும்பாலோனோர், தங்களது நகைகளை அடகு வைத்தும், வட்டிக்கு கடன் வாங்கியும் விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர். சம்பா சாகுபடிக்கு, யூரியா, டிஏபி, பொட்டாஷ் உள்ளிட்ட அனைத்து வகை உரங்களின் தேவை அதிகரித்துள்ள நிலையில், தமிழ்நாட்டிற்கு, ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 1,43,500 மெக்ரிக் டன் உரத்தில், இதுவரை 77,863 மெட்ரிக் டன் உரம் மட்டுமே உர உற்பத்தி நிறுவனங்களால் வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

உரம் வீழ்ச்சி
ஒவ்வொரு ஆண்டும் உரம் வழங்கல் முறை வீழ்ச்சி அடைந்து வருவதால், தமிழ்நாட்டில் உரத்தட்டுப்பாடும், விலையேற்றமும் அதிகரித்துள்ளது.
மேலும், உரத்திற்கான மூலப்பொருட்களின் விலை அதிகரித்து விட்ட நிலையில், அதற்கேற்றவாறு ஒன்றிய அரசு மானியத்தை உயர்த்தாமல் இருப்பதும், உரத்தட்டுப்பாட்டிற்கும், விலையேற்றத்திற்கும் முக்கிய காரணமாகும்.

மானியம் குறைப்பு
உரத்திற்கான மானியம் குறைக்கப்பட்டுள்ளதை காரணம் காட்டியும், மூலப்பொருட்களின் விலை உயர்வை காட்டியும், உரத்தின் விலையை கண்மூடித்தனமாக அதிகரித்துள்ளது உர நிறுவனங்கள். ஒன்றிய அரசின் உர மானியக் குறைப்பும், உர நிறுவனங்களின் விலையேற்றமும், விவசாய வளர்ச்சியும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. உரத்தட்டுப்பாடும், விலையேற்றமும் விவசாயிகளை மட்டுமின்றி, ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் பாதிக்கும் என்பதை கூட கருத்தில் கொள்ளாமல், உரத்திற்கான மானியத்தை ஒன்றிய அரசு குறைத்துள்ளது.

அழுத்தம் தருக
எனவே, விவசாயிகளின் நலன் கருதி, அவர்களுக்கு குறைந்த விலையில் உரம் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிச்சந்தைகளில் உர பதுக்கல் மற்றும் விற்பனையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டிற்கு தேவையான உரங்களை பெறவும், உரத்திற்கான மானிய அளவை உயர்த்தவும் ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications