Velmurugan: அதிமுகவில் 3 சீட்? பாஜக கூட்டணிக்கு செல்லமாட்டேன்! தவாக வேல்முருகன் உறுதி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக எங்களுக்கு 3 தொகுதிகளை கொடுப்பதால் நாங்கள் அங்கு செல்வதாக வரும் செய்திகள் தவறானவை என்று கூறிய தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் , பாஜக கூட்டணிக்கு செல்லமாட்டோம் என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது: திமுக எங்களை புறக்கணித்துள்ளது. என்னை திட்டமிட்டு திமுக கூட்டமியில் இருந்து வெளியேற்ற முயற்சி நடந்தது. தமிழர்கள் அல்லாத அதிகாரிகளின் பேச்சை கேட்டு திமுக எங்களை புறக்கணித்துவிட்டது.

Velmurugan Denies AIADMK

சட்டசபைக்கு உள்ளேயும் வெளியேயும் நாங்கள் கோரிக்கைகளை முன் வைத்தோம். அதற்கு திமுக அரசு செவி சாய்க்கவில்லை. விரல் விட்டு எண்ணக் கூடிய சில அதிகாரிகளின் பிடியில் தமிழகத்தில் ஆட்சி நடக்கிறது. நாங்கள் திமுக அரசுக்கு குடைச்சலாக இருப்போம் என சில அதிகாரிகள் தவறான தகவல் கொடுத்துள்ளனர்.

நாங்கள் 2 தொகுதிகள் கேட்ட நிலையில் திமுக எங்களுக்கு ஒரு தொகுதியை மட்டுமே கொடுக்க முன்வந்தது. எனவே திமுக கூட்டணியில் இருந்து தமிழக வாழ்வுரிமை கட்சி வெளியேறுகிறது என்றார்.

அவர் மேலும் கூறுகையில், அதிமுக 3 தொகுதிகளை கொடுப்பதால் அங்கு நாங்கள் செல்வதாக வரும் செய்தி தவறானது. அதே சமயம் எங்களது 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளிக்கும் கட்சியுடன் கூட்டணி அமைப்போம். பாஜக இடம் பெறும் கூட்டணியில் நாங்கள் சேரமாட்டோம் என்பதை அறிவிக்கிறேன்.

வடக்கு வடமேற்கு மாவட்டங்களில் கணிசமான வன்னியர் வாக்கு வங்கியை வைத்திருப்பவர் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் பண்ருட்டி தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்த முறை கூடுதல் தொகுதிகளை அவர் கேட்டிருந்ததாக சொல்லப்படுகிறது. முதலில் 6 சீட் கேட்ட நிலையில் பின்னர் திமுக நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து 2 சீட் கேட்டிருந்தார். ஆனாலும் திமுக எந்த உறுதியையும் கொடுக்கவில்லை என தெரிகிறது.

மேலும் கடந்த 5 ஆண்டுகளாக சாதிவாரி கணக்கெடுப்பு, வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒது்கீடு உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளையும் வேல்முருகன் கேட்டு வந்தார். ஆனால் திமுக அரசு அதை பொருட்படுத்தவில்லை என சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் இன்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்த வேல்முருகன் திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். அதே வேளையில் அதிமுக கூட்டணியில் தவாகவுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்படுவதால் அங்கு செல்வதாக வரும் செய்திகள் தவறு என்பதையும் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+