கோரிக்கை ஏற்பு! தலைமை அஞ்சல் அலுவலக முற்றுகை போராட்டம் வாபஸ்! வேல்முருகன் அறிவிப்பு!

தலைமை அஞ்சல் அலுவலக முற்றுகை போராட்டத்தை கைவிட்ட வேல்முருகன்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தனது கோரிக்கை நிறைவேற்றப்பட்டதால் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த தலைமை அஞ்சல் அலுவலக முற்றுகை போராட்டம் நிறுத்தி வைக்கப்படுவதாக வேல்முருகன் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள 3,167 அஞ்சல்துறை காலிப் பணியிடங்களையும் தமிழர்களை கொண்டே நிரப்ப வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக வேல்முருகன் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

அஞ்சல் துறை

அஞ்சல் துறை

அஞ்சல் துறையில் இந்தியா முழுவதும் 40000 கிராமின் டாக் சேவக் காலியிடங்களுக்குப் பணியிடங்களை நிரப்ப ஒன்றிய அரசின் அஞ்சல் துறை முடிவு செய்துள்ளது. இப்பணியிடங்களில், தமிழ்நாட்டில் 3,167 காலியிடங்கள் உள்ளன இந்நிலையில் 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்பப்பட உள்ள மேற்கண்ட பணியிடங்களுக்கு கடந்த ஜனவரி 27ம் தேதி முதல் வரும் பிப்ரவரி 16ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இணைய விண்ணப்பத்தில் 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் பாட வாரியாக கேட்கப்பட்டு உள்ளது.

விண்ணப்பிப்பதில் சிக்கல்

விண்ணப்பிப்பதில் சிக்கல்

மாநில பாட முறையில் தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் ஆகிய 5 பாடங்களே உண்டு. ஆனால், இணைய விண்ணப்பத்தில் 6வது பாடமும் இடம் பெற்றுள்ளது. அது "தெரிவு மொழி" என்பது. மற்ற மாநிலங்களில் தெரிவு மொழி இருப்பதால், அம்மாநிலங்களில் அஞ்சல்துறை தேர்வுக்கு விண்ணப்பிக்க எந்த வித சிக்கலும் இல்லை. ஆனால், 6 வது பாடமே இல்லாத, இரு மொழித் திட்டம் நடைமுறையில் உள்ள தமிழ்நாட்டின் இளைஞர்கள் என்ன செய்வார்கள்.

6 வது பாடம்

6 வது பாடம்

6 வது பாட விவரங்களை நிரப்பாவிட்டால் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ய முடியாத நிலை இருந்ததால் தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் நாளை (13-02-2023)திங்கள் கிழமையன்று சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை அஞ்சல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டிருந்தது.

3,167 காலி பணியிடங்கள்

3,167 காலி பணியிடங்கள்

இந்நிலையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் போராட்ட அறிவிப்பையொட்டியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினரும் எழுத்தாளருமான நண்பர் சு.வெங்கடேசன் மேற்கொண்ட முயற்சியாலும் தற்போது மேலே சொன்ன அந்த சிக்கல்கள் சரி செய்யப்பட்டுள்ளதாக இந்திய அஞ்சல் துறையால் அறிவிக்கப்பட்டிருந்தாலும் தமிழகத்தில் உள்ள 3,167 காலி பணியிடங்களையும் தமிழர்களைக் கொண்டே நிரப்ப இந்திய அஞ்சல் துறை முன்வர வேண்டும் இல்லையெனில் மீண்டும் சென்னையில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+