என் மனைவிக்கு பின்னாடி இவங்க தான்.. ரகசியத்தை ஓபனாக உடைத்த வேல்முருகன் எம்எல்ஏ!
சென்னை: சனாதான சங்கிகளின் கூட்டம் தான் என் மனைவியை தூண்டிவிட்டு எனது பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்க நினைக்கிறார்கள் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரும் பண்ருட்டி எம்எல்ஏவுமான பண்ருட்டி வேல்முருகன் தனது மனைவி காயத்ரியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு இடையேயான வழக்கு காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவர்களுக்கு 2018ல் விவகாரத்து கிடைத்துவிட்டது. எனினும் நீதிமன்ற உத்தரவுப்படி வேல்முருகன் இழப்பீடு தரவில்லை என்று கூறி காயத்ரி நீதிமன்றத்தை நாடினார்.

இந்த வழக்கில் எம்எல்ஏ பண்ருட்டி வேல்முருகன், காயத்ரி ஆகியோர் நீதிமன்றத்தில் கடந்த வார இறுதியில் ஆஜரானார்கள். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய காயத்ரி, , "தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் என்னை கல்யாணம் செய்த போது, எங்க அப்பா தான் சாப்பாட்டிற்கு காசு கொடுத்தார். இன்னைக்கு 100க்கணக்கான ஏக்கர் நிலம் இருக்கு என்று கையை விரித்து காட்டுகிறார் ஆனால் பணம் தர மாட்டேன் என்கிறார்.
நியாயமாக கொடுக்க வேண்டியதை கொடுக்கலாம் இல்லையா? இவரு வந்து மக்களுக்கு நீதி நியாயம்னு பேசுறாரு.. இவருவந்து தமிழகத்துக்கு வாழ்வுரிமை கொடுப்பாராம். அதனால் தான் அந்த கட்சி பேரு தமிழக வாழ்வுரிமை கட்சியாம். மனைவியா கட்டிக்கிட்ட எனக்கு வாழ உரிமை கொடுக்க சொல்லுங்க.. வளசரவாக்கத்துல என் பெயர்ல என் அப்பா வாங்கி கொடுத்த வீடு இருக்கு. அதை வந்து அவர் ஆக்கிரமிப்பு பண்ணிக்கிட்டு இருக்காரு. இவர் ஆளும் கட்சி கூட்டணி எம்எல்ஏ என்பதால், என்னால் ஒன்றுமே பண்ண முடியவில்லை. என்னால் அந்த பக்கம் போக முடியவில்லை. வருமானம் ரீதியாக நான் ரொம்ப கஷ்டப்படுறேன்.
அவருடன் 20 வருசம் வாழ்ந்துட்டேன். வெளியே வந்து படிச்சிருந்தாலோ, இல்லை வேறு யாராவது திருமணம் செய்திருந்தாலோ, என் வாழ்க்கை நிம்மதியாக இருந்திருக்கும். நல்லபடியாக இருந்திருக்கும். இப்ப என் வாழ்க்கையே போச்சு.. என்னுடன் வாழ்ந்ததற்கு உரிய நிவாரணமோ, நியாயமோ எனக்கு அவர் இதுவரை வழங்கவில்லை. எங்களுக்கு 1999ம் ஆண்டு திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டோம். எங்கள் விவாகரத்து வழக்கில் 2018-ம் ஆண்டு தீர்ப்பு கிடைச்சது. மாதம் ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோர்டு உத்தரவு போட்டிருக்கு. இதுவரை அவர் இழப்பீடு கொடுக்கவில்லை. அதற்காகத்தான் கோர்ட்டுக்கு வந்திருக்கிறேன்.
வளசரவாக்கத்தில் எனது பெயரில் உள்ள வீட்டை வேல்முருகன் ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளார்.அந்த வீட்டை ஒப்படைக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவுப்படி எனக்கு இழப்பீடு வழங்க வேண்டும்" இவ்வாறு கூறினார்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள பண்ருட்டி எம்எல்ஏவான வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்து இன்று பேசுகையில், என் வாழ்க்கை துணைவி காயத்ரி கருத்து வேறுபாடு காரணமாக 2018ம் ஆண்டு முதல் பிரிந்து வாழ்ந்து வருகிறார். விவகாரத்து கோரி வழக்கை காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் தொடர்ந்திருக்கிறார்.

நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருக்கின்ற போதே, என் அரசியலை பிடிக்காத சனாதான சங்கிகளின் கூட்டம், என் மனைவியை அழைத்து, எனக்கு எதிராக பேச வேண்டும் என்றும் அவதூறுகளை அள்ளி வீச வேண்டும் என்று கூறி, பாரதிய ஜனதா கட்சியின் செயலாளராக நியமனம் செய்து, எனது பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
நான் தனிம ஒழுக்கத்திலும் சரி, நேர்மையிலும் சரி எப்போதும் அப்பழுக்கற்றவனாக 40 ஆண்டுகளாக அரசியலை செய்து கொண்டிருக்கிறேன். ஆனால் பாஜகவினர் ஏற்பாடு செய்த செய்தியாளர் சந்திப்பில், எனக்கு எதிராக ஏதோ அவர்கள் (மனைவி) ஜீவனாம்சம் கேட்டதாகவும், தவறான, உண்மைக்கு மாறாக பொய்யான செய்திகளை பேச வைத்துள்ளார்கள்.
சங்கிகளின் கும்பலை நான் எச்சரிக்கிறேன். உங்களுக்கு துணிச்சல் இருந்தால், திராணி இருந்தால் நேர்மையான அரசியலை செய்ய வேண்டும். அதைவிட்டுவிட்டு எதிர்கொள்ள துணிவு இல்லாமல் பெண்ணை முன்னிறுத்தி அவதூறுகளை பரப்பி அவமானப்படுத்த நினைத்தால் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்பதை மட்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications