இந்தி எதிர்ப்பு போராட்டம் நடக்கும்! வரலாறு திரும்பும்! தமிழக வாழ்வுரிமைக் கட்சி எச்சரிக்கை!
சென்னை: இந்தியை திணிக்கும் முயற்சிகள் தொடர்ந்தால் தமிழகத்தில் வீரம் செறிந்த இந்தி எதிர்ப்பு போராட்டம் நடக்கும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் எச்சரித்துள்ளார்.
சனாதானத்தை உள்ளடக்கிய இந்து ராஷ்டிரத்தை நிறுவி தாய் மொழிகளை அழிக்க அமித்ஷா திட்டமிடுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

ஒரே மொழி
ஒரே நாடு, ஒரே உணவு, ஒரே வரி என்ற வகையில் தற்பொழுது ஒரே மொழி என்ற ஆர்.எஸ்.எஸ்-ன் கொள்கையை நடைமுறைப்படுத்த பாசிச மோடி அரசு திட்டமிட்டுள்ளது. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு, மத்தியப் பல்கலைக் கழகங்கள் உட்பட அனைத்து தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் அல்லாத கல்வி நிறுவனங்களிலும் பயிற்று மொழி கட்டாயமாக இந்தியாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.

அமித்ஷா பரிந்துரை
அதுமட்டுமின்றி, வேலைவாய்ப்பு தேர்வுகளில் இந்தி மொழி அவசியம், பணியாளர்கள் தேர்விலும் இந்தி மொழி அறிவு கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பரிந்துரைகளை குடியரசு தலைவரிடம் அளித்துள்ளது. ஒன்றிய அரசின் அலுவலகங்கள், இலாகாக்கள் அளிக்கும் கடிதங்கள், பதில்கள், மின்னஞ்சல்கள் ஆகிய அனைத்தும் இந்தி மொழியில் தான் இருக்க வேண்டும். அரசின் விளம்பரங்கள், நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ்கள், உரைகள் அனைத்தும் இந்தி மொழியில் தான் இருக்க வேண்டும், ஐ.நா.வில் இந்தியாவின் அலுவல் மொழியாக இந்தி மொழி தான் இருக்க வேண்டும் என்பது தான், அமித்ஷா தலைமையிலான குழுவின் பரிந்துரைகள்.

இந்து ராஷ்டிரம்
இந்தியாவில் வாழும் பல்வேறு இனக்குழுக்களின் மொழிகளை மறைத்துவிட்டு, அழித்துவிட்டு இந்திதான், நாட்டின் தாய்மொழி என்பது போன்ற ஒரு பொய்யான தோற்றத்தை உருவாக்க, ஆர்.எஸ்.எஸ் வகையாறாக்கள் முடிவெடுத்துள்ளனர். அவர்களின் முடிவு, இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு எதிரானது என்பதை, சற்றும் கூட சிந்திக்கவில்லை. சனாதானத்தை உள்ளடக்கிய இந்து ராஷ்டிரத்தை நிறுவி, அனைத்து தாய் மொழிகளையும், பல்வேறு இனக்குழுக்களின் பண்பாடு, உணர்வுகளையும் அழிப்பது என்பது, மோடி, அமித்ஷா கும்பல்களின் திட்டம்.

வீரம் செறிந்த போராட்டம்
இந்தித் திணிப்புக்கு எதிராக 1935 மற்றும் 1965 ஆகிய ஆண்டுகளில் தமிழ்நாடு நடத்திய வீரம் செறிந்த போராட்டங்கள், எங்களது தமிழை மட்டுமின்றி, இந்தியாவில் உள்ள பல்வேறு தேசிய இனக்குழுக்களின் மொழிகளையும் காப்பாற்றியுள்ளது. எனவே, இந்திய ஒன்றியத்தில், மீண்டும் இந்தி திணிப்பை கையில் எடுப்பதன் வாயிலாக, அது நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும் என்பதை மோடி, அமித்ஷா கும்பலுக்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் சுட்டிக்காட்டுகிறேன்.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications