"இந்தியை கண் மூடித்தனமாக எதிர்க்க தேவையில்லை.." வெங்கையா நாயுடு சொன்ன விஷயம்! கவனித்த மாணவர்கள்
சென்னை: இந்தி மொழி திணிக்கப்படுவதைத் தான் எதிர்ப்பதாகத் தெரிவித்த முன்னாள் இந்தியத் துணை குடியரசுத் தலைவர் எம். வெங்கையா நாயுடு, அதேநேரம் பல மொழிகளை கற்பதுதான் எதிர்காலத்திற்கு நல்லது என்றார். மேலும், இந்தியைக் கண்மூடித்தனமான எதிர்ப்பும் கூடாது என்ற அவர், எவ்வளவு மொழிகளை கற்க முடியுமோ அவ்வளவு மொழிகளை கற்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
சென்னையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா ஒன்றில் முன்னாள் இந்தியத் துணை குடியரசுத் தலைவர் எம். வெங்கையா நாயுடு கலந்து கொண்டார். அங்குப் பேசிய அவர் எந்த மொழி திணிக்கப்படுவதையும் எதிர்ப்பதாகத் தெரிவித்தார். அதேசமயம், கண்மூடித்தனமான எதிர்ப்பும் கூடாது என்ற அவர், வாழ்வில் சிறந்த வாய்ப்புகளுக்காக மாணவர்கள் பல மொழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

வெங்கையா நாயுடு
மாணவர்கள் மத்தியில் பேசிய வெங்கையா நாயுடு, "இந்தியைக் கண் மூடித்தனமாக எதிர்க்கும் எண்ணம் வேண்டாம். இந்தி திணிக்கப்படக் கூடாது, அதை நான் ஒருபோதும் ஏற்க மாட்டேன். அதேநேரம் மொழிப் பெருமையையும் நடைமுறைத் தேவைகளையும் நாம் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். தேசிய அளவில் அங்கீகாரம் பெறவோ அல்லது நாட்டின் பல்வேறு பகுதிகளில் உங்கள் எதிர்காலத்தைத் தொடரவோ விரும்பினால், இந்தி கற்றுக்கொள்வது அவசியம்.
ஆங்கிலம் ஒரு வெளிநாட்டு மொழி என்றாலும், உலகளாவிய தொடர்பு மொழி. எனவே மாணவர்களும் அதைக் கற்றுக்கொள்வது அவசியம். அதேபோல நாம் தாய்மொழிக்குத் தான் முதலிடம் தரவேண்டும். உங்கள் தாய் மொழியை கற்றுக் கொள்வதில் நீங்கள் பெருமை கொள்ள வேண்டும். தாய் மொழியைக் கற்று, அதில் தேர்ச்சி பெறுங்கள். ஆனால் இந்தி, ஆங்கிலம் கற்றுக்கொள்வதும் எதிர்காலத்திற்கு உதவும்.
தாய் மொழி
வீட்டில் தாய்மொழியில் பேச வேண்டும். முதலில் தாய்மொழியில் பேசுங்கள். தாத்தா பாட்டி, பக்கத்து வீட்டார்கள், கோவில்கள் என எந்தவொரு இடமாக இருந்தாலும் தாய் மொழியில் பேசுங்கள். அதுதான் மொழியைப் பாதுகாக்கும் வழி.
இங்கு வந்து கல்லூரியில் தாய்மொழி பற்றி நான் பேசுவது உங்களுக்கு ஆச்சரியமளிக்கலாம். ஆம், தாய்மொழியில் பேசுவதில் பெருமை கொள்ள வேண்டும். முதலில் தாய்மொழி, பிறகு சகோதர மொழி, அதன் பிறகு தான் வேறு எந்த மொழியும் இருக்க வேண்டும். முடிந்தவரை பல மொழிகளைக் கற்றுக்கொள்ளுங்கள் என்பதுதான் எனது ஆலோசனை.
ஆங்கிலம்
நான் ஆங்கிலத்திற்கு எதிரானவன் அல்ல. அதையும் கற்கலாம். ஆனால், அதற்கு முன் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, அஸ்ஸாமி, பஞ்சாபி போன்ற நமது அழகான இந்திய மொழிகளைக் கற்றுக் கொள்ளுங்கள். நம் நாட்டில் ஏராளமான மொழிகள் உள்ளன, இந்தியும் இதில் ஒன்று.
நான் மீண்டும் சொல்கிறேன். இந்தியை எதிர்க்க வேண்டும் என்ற கண்மூடித்தனமான எண்ணம் வேண்டாம். திணிப்பு இருக்கக் கூடாது என்பதை நான ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், அதைக் கண் மூடித்தனமாக எதிர்க்கத் தேவையில்லை என்பதே என் கருத்து.. நீங்களும் இதைப் பின்பற்ற வேண்டும் என நினைக்கிறேன்.
இந்தி
எனக்கு டெல்லிக்குச் சென்ற பின்னரே இந்தியின் முக்கியத்துவம் புரிந்தது. நான் நெல்லூரைச் சேர்ந்தவன். ஆரம்பத்தில் இந்தி கற்கவில்லை. ஆனால் டெல்லியில் தேசியத் தலைவராகவோ, பிற மாநிலங்களில் பணியாற்றவோ, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்ல இந்தி அவசியம் என்பதை உணர்ந்தேன். அதேபோல கல்லூரிப் படிப்புகளைத் தாண்டி பொது அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். அதற்கும் போதிய நேரத்தை ஒதுக்க வேண்டும்" என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications