சென்னையில் புதுசாக விட்ட தாழ்தள பஸ்களை மொத்தமாக மாற்ற எம்டிசி முடிவு.. பயணிகளுக்கு நல்ல செய்தி
சென்னை: சென்னையில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட தாழ்தள பஸ்களில் போதிய காற்றோட்டம் இல்லை என்று பயணிகள் ஆதங்கம் தெரிவித்த நிலையில், தற்போது ஓடிக்கொண்டு இருக்கும் 52 பஸ்களுக்கும் பதிலாக புதிய டிசைன்களுடன் கூடிய தாழ்தள பஸ்களை இயக்க சென்னை மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.
சென்னையில் தாழ்தள பேருந்துகள் கடந்த ஜூலை மாதம் 28 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டன.
மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் எளிதாக ஏறும் வகையில் இந்த பேருந்தில் வசதிகள் உள்ளன. முதல் கட்டமாக 17 வழித்தடங்களில் 52 தாழ்தள பேருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த பேருந்துகளில் நவீன வசதிகள் உள்ளன. படிக்கட்டுகள் மிகவும் தாழ்வாக இருக்கும் என்பதால், முதியவர்கள் சிரமம் இன்றி ஏற முடியும்.

அதேபோல, மாற்றுத்திறனாளிகள் ஏறுவதற்கு தனியாக சிறப்பு வசதியும் இந்த பேருந்தில் உள்ளது. டிஜிட்டல் திரை, தானியங்கி கதவுகள், ஆட்டோமெடிக் கியர், மாற்றுத்திறனாளிகள் அமர்வதற்கான பிரத்யேக இருக்கைகள் என பல வசதிகள் உள்ளன. இந்த பேருந்துகளில் ஏசி வசதி கிடையாது. ஆனால் ஏசி வசதி கொண்ட பேருந்துகளை போன்றே வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த பேருந்துகளில் வழக்கமாக தற்போது உள்ள பேருந்துகளில் உள்ளதை போல என்ஜின் முன்பக்கம் இல்லை. பின்பக்கத்தில் என்ஜின் உள்ளது. இதனால் பின்பக்க இருக்கைகள் சற்று உயரமாக உள்ளன. ஆனால் பின்பக்க இருக்கைகளில் அமர்ந்து செல்லும் பயணிகளுக்கு காற்றோட்டம் இருக்கும் வகையில் ஜன்னல்கள் இல்லை என்பது பயணிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டாக இருந்தது.
பேருந்துக்குள் போதிய காற்றோட்டம் வரும் வகையில் டிசைன்கள் இல்லை எனவும், இதனால் பயணிகள் கூட்ட நெரிசல் நேரத்திலும் மதிய வேளையிலும் பயணிக்கும் போது உடல் முழுவதும் குப்பென வியர்க்கும் அளவுக்கு புழுக்கம் இருப்பதாக பயணிகள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தனர். இந்த நிலையில்தான், புதிதாக விடப்பட்ட 52 தாழ்தள பேருந்துகளுக்கும் பதிலாக புதிய டிசைன்களுடன் தாழ்தள பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக அரசு போக்குவரத்து கழகம் மொத்தமாக 350 தாழ்தள பஸ்களை கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதில், முதல்கட்டமாகத்தான் 52 பஸ்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இந்த பஸ்களில் டிசைன்களில் சில குறைபாடுகள் இருப்பதாக பயணிகள் கூறிய நிலையில், தற்போது இவற்றுக்கு பதிலாக புதிய பேருந்துகளை அதே வழித்தடத்தில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாம்..
தாழ்தள பஸ்களில் இருக்கை டிசைன்களை மாற்றாமல், காற்றோட்டத்தை ஏற்படுத்தும் விதமாக ஜன்னல்களில் சில மாற்றங்களை செய்ய எம்டிசியின் டெக்னிக்கல் டீம் பரிந்துரை முன்வைத்து உள்ளது. அதேபோல, நின்று கொண்டு செல்லும் பயணிகளின் சிரமத்தை குறைக்கும் விதமாக பேருந்தின் மேற்புரத்தில் காற்றோட்டம் இருக்கும் வகையில் ரூஃப்பில் திறந்து மூம் வகையிலான சிறிய ஜன்னல் வைப்பது ஆகியவற்றையும் பரிந்துரைத்துள்ளதாம்.
புதிதாக வரவிருக்கும் பஸ்கள் இந்த டிசன்களுடனே இருக்கும் என்று அதிகாரிகள் சொல்கிறார்கள். தயாரிப்பில் இருக்கும் 300 பஸ்களும் இந்த டிசைன்களுடன் செய்யப்படும் எனவும், இன்னும் ஒரு மாதத்திற்குள் 50-60 பஸ்கள் ஒப்படைக்கப்படும் என்றும் அப்போது, ஏற்கனவே ஓடிக்கொண்டு இருக்கும் பஸ்களுக்கு மாற்றாக இவை இயக்கப்படும் என்றும் அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.
-
சென்னை கோயம்பேடு பாரில் டேன்ஸ் ஆடும் போது தகராறு.. கார் ஏற்றி இளம்பெண் கொலை! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications