'நாளை மறுநாளே'.. சென்னை, செங்கல்பட்டு உள்பட 4 மாவட்ட ரேஷன் கடைகளுக்கு பறந்த அறிவிப்பு
சென்னை: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை மறுநாள் ரேஷன் கடைகள் இயங்க போகிறது. அன்று மக்களுக்கான நிவாரணத்தொகை வழங்குவதற்கான முக்கியமான பணிகள் நடக்க போகின்றன.
வங்க கடலில் உருவான மிக்ஜாம்' புயல் ஆந்திராவில் கடந்த டிசம்பர் 5-ந்தேதி கரையை கடந்தது. புயல் கரையை கடக்கும் முன்பு சென்னையை கடந்து செல்ல 36 மணி நேரத்திற்கு மேல் ஆனது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 3 மற்றும் 4, ஆகிய தேதிகளில் மிக அதிகனமழை பெய்தது. குறிப்பாக கடந்த 47 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு கடந்த டிசம்பர் 4ம் தேதி இரவு தொடங்கி டிசம்பர் 5ம் தேதி காலை வரை விடாமல் 36 மணி நேரம் மழை கொட்டியது.

இந்த புயல் காரணமாக கொட்டித்தீர்த்த மழையால் சென்னை வெள்ளக்காடானது. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் சில பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்தன. இதனால் 4 மாவட்ட மக்களும் பெரும் துயரத்தை சந்தித்துள்ளார்கள்.
மழை பாதித்த மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கவும், வெள்ளம் வடியவைக்கும் பணிகளையும் செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், மின்வாரிய ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் இரவு பகல் பார்க்காமல் ஒருவாரம் பணியாற்றியதால் சென்னை வேகமாக வெள்ளத்தில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பியது. அதேநேரம் வெள்ளப்பாதிப்பால் பலர் உடமைகளை இழந்துள்ளனர். ஏராளமானோர் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
இந்த சூழலில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் வெள்ள நிவாரணமாக ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதன்படி சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்கள், செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் வட்டங்கள் முழுமையாகவும், திருப்போரூர் வட்டத்தில் 3 வருவாய் கிராமங்களுக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் வட்டம் முழுமையாகவும், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் 3 வருவாய் கிராமங்களுக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆவடி, பூந்தமல்லி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் ஆகிய 6 வட்டங்களில் உள்ள மக்களுக்கு நிவாரண தொகை வழங்கப்பட உள்ளது.
மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை சேர்ந்த உயர் அதிகாரிகள், வருமான வரி செலுத்துவோர்கள், சர்க்கரை விரும்ப ரேஷன் அட்டைதாரர்கள் மழை வெள்ள பாதிப்பு விவரங்களுடன், வங்கி கணக்கு எண் விவரங்களை தங்கள் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் விண்ணப்பிக்கலாம் என்றும் ஆய்வுக்கு பின்னர் அவர்கள் வங்கி கணக்கில் வெள்ள நிவாரணத்தொகை செலுத்தப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ரூ.6 ஆயிரம் நிவாரண தொகை பெற தகுதியானவர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு அந்த பட்டியல் ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ரேஷன் அட்டைதாரர்களுக்கு வீடு, வீடாக சென்று டோக்கன் வழங்கும் பணியும் தொடங்கி உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் படத்துடன் அச்சிடப்பட்டுள்ள டோக்கனில் ரேஷன் கடையின் பெயர், அட்டைதாரர் பெயர், அட்டை எண் ஆகிய விவரங்களுடன், எந்த தேதியில், எந்த நேரத்தில் நிவாரண தொகை வழங்கப்படும் என்ற விவரங்கள் இடம் பெற்று இருக்கிறது.
இந்த டோக்கன் தரும் பணிகள் நடந்து வரும் நிலையில் து ரூ.6 ஆயிரம் வெள்ள நிவாரணத்தொகை வழங்கும் பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 17-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி வைக்க உள்ளார். வேளச்சேரி அஷ்டலட்சுமி நகரில் முதல்வர் ஸ்டாலின் நிவாரணதொகை வழங்கும் பணியினை தொடங்கி வைக்கிறார்.
இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் டிசம்பர் 17ஆம் தேதி ரேஷன் கடைகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் வெள்ள நிவாரணத்தொகைகான டோக்கன் விநியோகப் பணியினை மேற்கொள்ளும் பொருட்டு ரேஷன் கடைகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications