பிரபல நடிகை லீலாவதி காலமானார்.. பெங்களூரில் பிரிந்த உயிர்.. பெரும் சோகம்.. யார் இவர் தெரியுமா?
சென்னை: பழம்பெரும் நடிகை லீலாவதி பெங்களூரில் இன்று காலமானார். தமிழில் எம்ஜிஆர், சிவாஜி உள்பட பலருடன் நடித்த இவர் வயது முதிர்வு காரணமாக பெங்களூரில் இன்று காலமானார்.
தமிழில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் நடிகை லீலாவதி. இவர் கர்நாடகாவை சேர்ந்தவர். தட்சிண கன்னட மாவட்டம் பெல்தங்கடியில் பிறந்த இவர் 16 வயதில் சினிமாவில் நடிக்க தொடங்கினார்.

தமிழ், கன்னடம், தெலுங்கு உள்பட பல மொழி படங்களில் நடித்து வந்தார். தமிழில் ‛பட்டினத்தார்', ‛வளர்பிறை', ‛அவள் ஒரு தொடர்கதை', ‛அவர்கள்', ‛நான் அவன் இல்லை' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
கன்னட சினிமாவில் அங்கு சூப்பர் ஸ்டாராக விளங்கிய மறைந்த நடிகர் ராஜ்குமாருடனும், தெலுங்கு சினிமாவில் நடிகர் என்டிஆருடனும் நடித்துள்ளார். கன்னட சினிமாவில் மட்டும் 400 படங்கள் வரை நடித்துள்ளார். இந்நிலையில் தான் லீலாவதி தற்போது பெங்களூர் புறநகர் மாவட்டம் நெலமங்களாவில் வசித்து வந்தார். அவருக்கு வயது 85.
இவர் தனது மகனும், நடிகருமான வினோத் ராஜ்யுடன் வசித்து வந்தார். இந்நிலையில் தான் வயது முதிர்வு காரணமாக அவர் சமீபத்தில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். வீட்டில் வந்து அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் தான் இன்று அவருக்கு திடீரென்று லோ பிபி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவர் உடனடியாக அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலமானார். நடிகை லீலாவதியின் மறைவுக்கு நடிகர், நடிகைகள் உள்பட திரையுலக கலைஞர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
-
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications