பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதி.. உடல்நலம் எப்படி உள்ளது? உறவினர்கள் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாரதிராஜா நலமுடன் இருப்பதாக உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். உடல் நலம் பாதிப்பால் கடந்த 3 நாட்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பாரதிராஜா சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாரதிராஜா உடல்நலம் பற்றிய வதந்திகளுக்கு உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

சிவப்பு ரோஜாக்கள், கிழக்கு சீமையிலே படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனர்களில் இடம்பிடித்தவர் பாரதிராஜா. இவரது மகன் மனோஜ், கடந்த மார்ச் மாதம் உயிரிழந்தார். மகன் உயிரிழந்ததில் இருந்து பாரதிராஜா கவலையுடன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

Bharathiraja Hospital Chennai

இந்த நிலையில் தான் கடந்த 27 ஆம் தேதி பாரதிராஜாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து உறவினர்கள் அவரை சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

தொடர்ந்து ஓய்வில் இருந்து வந்த அவருக்கு வீசிங் போன்ற சுவாச பிரச்சினை ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் பாரதிராஜா உடல்நிலை எப்படி உள்ளது என்று அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

பாரதிராஜா உடல்நிலை குறித்து பரவும் தகவல்கள் உண்மையில்லை. அவர் நலமுடன் இருக்கிறார். தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் வீடு திரும்புவார் என்று கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+