துணிச்சலாக பேசக்கூடியவர்.. தயாரிப்பாளர் டூ நடிகர்! யார் இந்த கே ராஜன்?
சென்னை: தமிழ் திரையுலகின் மூத்த தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகரான கே. ராஜன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரைத்துறையினரையும், ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சிறு பட்ஜெட் திரைப்படங்களுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவரும், பரபரப்பான கருத்துகளால் அடிக்கடி கவனம் பெற்றவருமான கே ராஜன் யார் என்பது குறித்து இங்கு காணலாம்.
திரைப்பட தயாரிப்பாளர் கே ராஜன் தற்கொலை செய்து கொண்டுள்ளது திரைத்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. துணிச்சலாகவும் பரபரப்பாக பேசக்கூடிய கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பட தயாரிப்பாளர் கே ராஜன்
அவரது உடலை மீட்ட தீ அணைப்புத்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தயாரிப்பாளர் கே. ராஜன் யார் என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்..
கடந்த 1983 ஆம் ஆண்டு வெளியான பிரம்மச்சாரி என்ற படத்தை தயாரித்ததன் மூலம் திரையுலகில் நுழைந்தவர் கே. ராஜன். திரைப்பட தயாரிப்பு மட்டுமின்றி சில படங்களை இயக்கவும் செய்துள்ளார். அவள் பாவம், நினைக்காத நாளில்லை உள்ளிட்ட படங்களை இவர் தயாரித்துள்ளார்.
1991 ஆம் ஆண்டில் இயக்குநராகவும் அறிமுகம் ஆகியுள்ளார். 1991 ஆம் ஆண்டில் நம்ம ஊரு மாரியம்மா என்ற படத்தை இயக்கியிருந்தார். 2005 ஆம் ஆண்டு உணர்ச்சிகள் என்ற படத்தையும் அவர் இயக்கியிருந்தார். ழுத்தாளராவும் திரைத்துறையில் தனது பங்களிப்பை செய்துள்ளார். தங்கமான தங்கச்சி என்ற படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார்.
ஹீரோக்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும்
1987 ஆம் ஆண்டில் நடிகராகவும் அறிமுகம் ஆனார். மைக்கேல் ராஜ் என்ற படத்தில் நடிகராக அறிமுகம் ஆனார். பாம்பு சட்டை, துணிவு, பராகசுரன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். கே ராஜன் சிறு பட்ஜெட் படங்களுக்காக அதிகம் குரல் கொடுக்க கூடியவராக அறியப்பட்டார். ஹீரோக்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று தொடர்ந்து பேசி வந்தார்.
சினிமாவில் அவர் கூறும் கருத்துகளும், பரபரப்புகளுக்கும் - சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாதவையாக இருக்கும். 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் பயணம் செய்த கே ராஜன் தற்கொலை செய்து கொண்டு இருப்பது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.














Click it and Unblock the Notifications