வெற்றி பயண திட்டம்: சென்னை டூ நாகர்கோவில் வரை பெண்கள் இலவசமாக செல்ல முடியுமா? எவ்வளவு தூரம் போகலாம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக முதல்வர் விஜய் தேர்தல் சமயத்தில் அறிவித்த வாக்குறுதிகளில் ஒன்றான வெற்றிப்பயண திட்டத்தை நாளை முதல் தொடங்கி வைக்கிறார். விரைவு பேருந்துகள், ஏசி பேருந்துகள் உள்ளிட்டவற்றில் இந்த திட்டத்தின் கீழ் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய முடியாது. அதே நேரத்தில் சென்னையில் இருந்து எவ்வளவு தூரம் இலவசமாக பயணிக்கலாம்? நாகர்கோவில் வரை செல்ல முடியுமா?.. அப்படி போவதாக இருந்தால் எத்தனை பஸ்கள் மாற வேண்டியிருக்கும் என்பது குறித்த விவரங்களை பார்க்கலாம்.

தமிழக வெற்றிக் கழகம் கடந்த 2026 தேர்தல் வாக்குறுதியாக தமிழகம் முழுக்க அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் என்று அறிவித்தது. தற்போது முதல்வராக விஜய் ஆட்சி அமைத்து வரும் நிலையில் நாளை காந்தி ஜெயந்தி தினம் முதல் அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் வெற்றி பயணத் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார்.

Vetri Payanam Scheme Can women travel for free from Chennai to Nagercoil How far can they travel

எவ்வளவு தூரம் போகலாம்?

தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியில் "மகளிர் விடியல் பயண திட்டம்" தொடங்கப்பட்டது. இதன்படி, சாதாரண நகர அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்க முடியும். விஜய்யின் வெற்றி பயணத் திட்டத்தின்படி, சாதாரண நகர பஸ்களை தாண்டி, எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ் போன்ற அரசு பஸ்களிலும் பெண்கள் இலவசமாக பயணிக்க முடியும். எனினும் மக்களுக்கு இந்த பஸ்களில் எவ்வளவு தூரம் பயணிக்க முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

குறிப்பாக எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ் போன்ற அரசு பஸ்களில் இலவசமாக பயணிக்க முடியும் என்பதால், சென்னை டூ கோவை, நாகர்கோவில் போன்ற வெளியூர்களுக்கும் இலவசமாக செல்ல முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒரு சிலர் நாகர்கோவிலுக்கோ, கோவைக்கோ சென்னையில் இருந்து செல்ல முடியுமா?, அப்படி செல்ல வேண்டும் என்றால், பஸ்கள் மாறி மாறி செல்லலாமா? என சந்தேகம் கிளப்பி வருகிறார்கள்.

100 கிமீ வரை இலவச பயணம்

அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி பார்த்தால், எக்ஸ்பிரஸ் பஸ்களில் ஒரு ஒரு மாவட்டத்திற்கு ஒரு பஸ் என்ற வீதம் பயணம் செய்ய முடியும். குறிப்பாக் அதமிழகத்தில் அரசு எக்ஸ்பிரஸ் பஸ்கள் 30 - 100 கி.மீ. வரையும், எல்.எஸ்.எஸ். பஸ்கள் 30 - 40 கி.மீ. வரையும், டீலக்ஸ் பஸ்கள் 30 - 50 கி.மீ. வரையும் இயக்கப்பட்டு வருகிறது. எனவே இதை வைத்து பார்க்கும் போது, எக்ஸ்பிரஸ் பஸ்களில் பெண்கள் 100 கிமீ தூரம் கட்டணம் செலுத்தாமல் இலவசமாக பயணிக்க முடியும்.

இதனால் சென்னையில் இருந்து பெண் ஒருவர் எக்ஸ்பிரஸ் பஸ்சில் ஏறினால் முதலில் செங்கல்பட்டு வரை இலவசமாக பயணிக்க முடியும். பிறகு திண்டிவனம் அடுத்து விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, நெல்லை, நாகர்கோவில், குமரி என மாறி மாறி கட்டணம் எதுவும் செலுத்தாமலே இலவசமாக பயணிக்கலாம் என தெரிகிறது.

திருநங்கைகளுக்கும் இலவசம்

இது மட்டும் இன்றி நகரங்களில் இருந்து இன்னொரு நகரத்திற்கு அதாவது, திருச்சியில் இருந்து திண்டுக்கல்லுக்கும், தஞ்சையில் இருந்து நாகைக்கும், தஞ்சையில் இருந்து வேளாங்கண்ணிக்கும், திண்டிவனத்தில் இருந்து விழுப்புரத்திற்கும், விருத்தாசலத்தில் இருந்து திருச்சிக்கும், கோவை டூ பழனிக்கும் பழனி டூ திண்டுக்கல், கோவை டூ ஈரோடு, ஈரோடு டூ சேலம், மதுரை டூ விருதுநகர், விருதுநகர் டூ கோவில்பட்டி, நெல்லை டூ நாகர்கோவில் என அரசு எக்ஸ்பிரஸ் பஸ்களில் பெண்கள் கட்டணம் இல்லாமல் இலவசமாக பயணிக்க முடியும்.

தமிழக அரசு நாளை தொடங்கி வைக்க உள்ள வெற்றிப் பயண திட்டத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள 12,692 அரசு பஸ்களில் பெண்களும், திருநங்கைகளும் இலவசமாக பயணிக்கலாம். இதனால் நாள் ஒன்றுக்கு சுமார் 84 லட்சம் பெண்கள் பயனடைவார்கள் என அரசு தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+