பல்கலை துணைவேந்தர்கள் நியமனம்! ஸ்டாலின் கைக்கு வரும் பவர்.. உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம், முதலமைச்சருக்கு வழங்கி தமிழ்நாடு அரசு சட்டத்தை நிறைவேற்றி இருந்தது. இந்த சட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில், இந்த தடையை நீக்கி தற்போது உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும், துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்குவது, பல்கலைக்கழகங்களில் வேந்தராக தமிழக முதல்வரை நியமிப்பது உள்ளிட்ட அம்சங்கள் அடங்க 10 சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க மறுத்த நிலையில், உச்சநீதிமன்றம் தனக்குரிய சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதல் அளித்தது. இதனையடுத்து இந்த சட்டங்களை தமிழக அரசு, அரசிதழில் வெளியிட்டது.

பாஜகவினரின் வழக்கு
இதை எதிர்த்து, திருநெல்வேலி சேர்ந்த பாஜகவின் வெங்கடாஜலபதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பல்கலைக்கழகங்களில் வேந்தராக தமிழக முதல்வரை நியமிக்கும் வகையில், கடந்த 1994 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டு நிலுவையில் உள்ள சட்ட திருத்தத்தை வாபஸ் பெறாமல், தமிழ்நாடு அரசு புதியதாக சட்டத்திட்டம் கொண்டு வந்து நிறைவேற்றி இருக்கிறது. இது பேரவையின் விதிகளுக்கு எதிரானது என அந்த வழக்கில் மனுதாரர் குறிப்பிட்டு இருந்தார்.
சட்டவிரோதமானவை
அதேபோல தமிழக அரசின் இந்த மசோதாக்கள், பல்கலைக்கழக மானிய குழுவின் விதிகளுக்கு எதிராக இருக்கிறது என்றும், துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான அதிகாரத்தை தமிழக அரசுக்கு வழங்கும் இந்த சட்டங்கள், சட்ட விரோதமானவை என்று அறிவிக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.
ஜி.ஆர்.சுவாமிநாதன்
இந்த வழக்கு கடந்த ஆண்டு மே மாதம், சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதிகள் நீதிபதிகள் ஜி ஆர் சுவாமிநாதன், வி லட்சுமண நாராயணன் ஆகியோர் அடங்கிய விடுமுறை கால அமர்வில் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், துணைவேந்தர்கள் நியமிக்கும் வேந்தரின் அதிகாரத்தை தமிழக அரசுக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.
துணை வேந்தர்கள்
இதனையடுத்து இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையை நீக்கி தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநில முதலமைச்சர் வசம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Election Exclusive: வரம் கொடுத்த சாமி தலையில் கை வைத்த பிரேமலதா.. திமுக தொகுதிகளை கேட்டு அடம்! குட்டையைக் குழப்பு காங்.! -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
காஞ்சிபுரம் - பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிய எஸ்பிக்கள் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக












Click it and Unblock the Notifications