ஆளுநரே வேந்தர்.. ஊட்டியில் துணைவேந்தர் மாநாடு! ராஜ்பவன் வெளியிட்ட அறிக்கை.. அப்போ நீதிமன்ற தீர்ப்பு?
சென்னை: பல்கலைக்கழகங்களில் வேந்தராக முதலமைச்சர் இருப்பார் என்ற மசோதாவுக்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. இந்த நிலையில் ஊட்டியில் வரும் 25, 26 ஆகிய தேதிகளில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறும் எனவும் அதில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கலந்துகொண்டு மாநாட்டினை தொடங்கி வைப்பார் என ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம் செய்யப்பட்டதில் இருந்து திமுக அரசுக்கும் அவருக்கும் கடுமையான மோதல் நிலவி வருகிறது. இந்த நிலையில் கடந்த சில வருடங்களாக ஆளுநர் நிலுவையில் வைத்திருந்த மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்ததோடு, இனி மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால அவகாசத்தையும் விதித்து உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் அதில் குறிப்பிடத்தக்க மசோதா தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதல்வர் இருப்பார் என்பதுதான். இதற்கிடையே ஊட்டியில் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறும் என ஆளுநர் அறிவித்திருந்தார்.

இது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் ஊட்டியில் வரும் 25, 26 ஆகிய தேதிகளில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறும் எனவும் அதில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கலந்துகொண்டு மாநாட்டினை தொடங்கி வைப்பார் என ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதில்," தமிழ்நாட்டில் உள்ள மாநில, மத்திய மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள்/நிறுவனங்களின் துணைவேந்தர்களின் மாநாடு - 2025, வருகின்ற ஏப்ரல் 25 மற்றும் ஏப்ரல் 26, 2025 அன்று ஆளுநர் மாளிகை, உதகமண்டலத்தில் நடைபெறவுள்ளது
தமிழ்நாட்டில் உள்ள மாநில, மத்திய மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் / நிறுவனங்களின் துணைவேந்தர்களின் வருடாந்திர மாநாடு ஏப்ரல் 25 மற்றும் ஏப்ரல் 26, 2025 தேதிகளில் ஆளுநர் மாளிகை உதகமண்டலத்தில் தொடர்ந்து 4-வது ஆண்டாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திரு. ஜக்தீப் தன்கர், மாண்புமிகு இந்திய குடியரசு துணைத்தலைவர், முதன்மை விருந்தினராக கலந்துகொள்ள சம்மதம் தெரிவித்து ஏப்ரல் 25, 2025 அன்று துணைவேந்தர்கள் மாநாட்டைத் தொடங்கி வைக்கவுள்ளார்கள். திரு.ஆர்.என்.ரவி, மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர்-தமிழ்நாடு மாநிலப் பல்கலைக்கழகங்களின் வேந்தர் மாநாட்டுக்கு தலைமை தாங்கவுள்ளார்கள்.
துணை வேந்தர்கள் மாநாட்டின் நோக்கம், தேசிய கல்விக்கட்டமைப்பை நடைமுறைப்படுத்துதல், பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கல்விசார் ஒத்துழைப்பு, கற்றலின் சிறப்புகளை மேம்படுத்த செயற்கை நுண்ணறவின் பயன்பாடு, கல்வி நிறுவனங்களில் நிதி மேலாண்மை, ஆராய்ச்சி சிறப்பம்சங்கள், திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் திறன் வளர்ச்சி, மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்வு மற்றும் தொழில் குறித்த விரிவான விவாதங்கள் மற்றும் கலந்தாய்வு அமர்வுகள் இம்மாநாட்டில் நடத்தப்படவுள்ளன. கல்வித்துறை, அரசு மற்றும் தொழிற்துறையைச் சேர்ந்த சிறந்த பேச்சாளர்கள் மேற்கண்ட தலைப்புகளில் உரையாற்றவுள்ளார்கள்.
இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் அஜய் குமார் சூட் அவர்கள் 'அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் எல்லைகள்' என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றவுள்ளார்கள். இம்மாநாடு தமிழ்நாடு மாநிலம் முழுவதிலும் உள்ள மாநில, மத்திய மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள்/நிறுவனங்களின் துணைவேந்தர்களை ஒன்றிணைத்து பணியாற்றுவதையும், சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வதையும், உயர்கல்விக்கான புதுமையான அணுகுமுறைகளை கொண்டுள்ளது. ஆராய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த அறிவிப்பில் 'தமிழ்நாடு ஆளுநர் பல்கலைக் கழகங்களின் வேந்தர்' என குறிப்பிடப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications