ஸ்டாலின் சாரே சொல்லிட்டாங்க.. நாங்க எடுக்க முடியாது.. பொங்கிய பெண் போலீஸ்.. மல்லுக்கட்டிய நடத்துநர்
சென்னை: அரசு பேருந்தில் பெண் போலீஸ் ஒருவர் டிக்கெட் எடுக்காததால் அவருடன் நடத்துநர் ஒருவர் மல்லுக்கட்டிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Recommended Video
பொதுவாக சீருடை அணிந்து கொண்டு அரசு பேருந்துகளில் செல்லும் போலீஸாருக்கு டிக்கெட் கேட்கப்படாது. அவர்கள் பணிநிமித்தமாக வேறு ஒரு ஸ்டேஷனுக்கு செல்லலாம், இல்லாவிட்டால் வழக்கு விசாரணைக்காக கோர்ட்டிற்கு செல்லலாம் என்பதால் இந்த சலுகை!
அதிலும் தற்போது பெண்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம் என சொல்லிவிட்டதால் ஏழை எளிய பெண்கள் முதல் அனைத்து தரப்பினரும் இதை வரவேற்று கொண்டாடி வருகிறார்கள்.

பேருந்து நிலையம்
இந்த நிலையில் ஒரு பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தில் இரு பெண் போலீஸார் அமர்ந்துள்ளார்கள். அவர்கள் இருவர், டிரைவர், கன்டக்டரை தவிர அந்த பேருந்தில் வேறு யாருமே இல்லை. இந்த நிலையில் வழக்கம் போல பஸ் புறப்பட தயாரான போது கன்டக்டர் டிக்கெட் டிக்கெட் டிக்கெட் என பெண் போலீஸ் அமர்ந்திருந்த இடத்திற்கு வந்தார்.

டூட்டிக்கு செல்கிறேன்
அப்போது அந்த பெண் போலீஸ் நான் டூட்டிக்காக செல்கிறேன் என்கிறார். அதற்கு அந்த கன்டக்டர் வாரண்டை காட்டுங்கள் என்கிறார். அதற்கு அந்த பெண் போலீஸ், "ஸ்டாலின் சாரே சொல்லிட்டாரே.. வாரண்ட் வரும் வரை உங்களுடைய ஐடி கார்டை காட்டி அரசு பேருந்துகளில் பயணிக்கலாம் என! அப்புறம் ஏன் டிக்கெட் கேட்கிறீர்கள்.

அரசாணை
எங்களுக்கு அவர் அனுப்பிய அரசாணை வந்துள்ளது. உங்களுக்கு கிடைக்காவிட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல என்கிறார் அந்த பெண் போலீஸ்!. அதற்கு விடாமல் மல்லுகட்டிய கன்டக்டர், "சரி உங்கள் வாதத்திற்கே வரேன், உங்களுக்கு அனுப்பிய ஆர்டரை எனக்கு காட்டுங்கள் என்றார்.

டிப்போவுக்கு வண்டியை விடுங்க
அதற்கு அந்த பெண் போலீஸ், சரி நீங்க நேராக வண்டியை டிப்போவுக்கு விடுங்கள்" என்கிறார். உடனே டிரைவர் "ஏன்பா, கன்டக்டர், நான் வண்டி ஓட்டுறதா வேண்டாமா, அவங்க யூனிபார்ம் போட்டிருக்காங்க, அவங்ககிட்ட டிக்கெட் கேட்காதே என்கிறார். அதையும் மீறி பெண் போலீஸும் கன்டக்டரும் வாக்குவாதம் செய்கிறார்கள்.

மரியாதை இல்லையா
பெண் போலீஸ் என்ற மரியாதை இல்லாமல் வா, போ, இறங்கு என ஒருமையில் பேசுவதாக பெண் போலீஸ் குற்றம்சாட்டுகிறார். ஆனால் கன்டக்டரோ ஆமாம் டிக்கெட் எடுங்க .. இல்லன்னா இறங்குங்கன்னுதானே சொல்றேன்" என்கிறார். இதை அமைதியாக உட்கார்ந்து கொண்டு இன்னொரு பெண் போலீஸ் வீடியோ எடுக்கிறார்.

மல்லுக்கட்டும் கன்டக்டர்
உடனே அவரிடம் கன்டக்டர், எனக்கு கொடுக்கப்பட்டுள்ள டிக்கெட் ஒப்படைப்பு ஷீட்டில் என்ன எழுதியிருக்கிறது என்பதையும் அந்த வீடியோவில் தெளிவாக காட்டுங்கள். இந்த காலமை எடுத்து விட்டால் நான் ஏன்ம்மா உங்களிடம் டிக்கெட் கேட்க போகிறேன் என கன்டக்டர் சொல்ல இப்படியாக இவர்களுக்கு உரையாடல் போகிறது.

இலவச பயணம்
கடைசியில் பேருந்து புறப்படும் இடத்திற்கு சென்றதா, இல்லை பணிமனைக்கு சென்றதா என தெரியவில்லை. மேலும் பெண்களுக்கு இலவச பயணம் எனும் போது பெண் போலீஸிடம் இவர் எதற்கு மல்லுக்கட்டுகிறார் என தெரியவில்லை. ஒரு வேளை அந்த பெண் போலீஸ் நீண்ட தூரம் பயணிக்கிறாரா என்பதும் தெரியவில்லை. ஆனால் பெண்களுக்கு இலவசம் என்ற நிலையிலும் இவரை போல சில கன்டக்டர்கள் பெண்களிடம் டிக்கெட் எடுக்கச் சொல்லி கட்டாயப்படுத்தும் சம்பவங்களும் நடைபெறும் நிலையில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications