பச்சை நாயை.. இப்படி வெறி கொண்டு கத்த வச்சுட்டீங்களே.. கோபி, நியாயமா??
திருமுருகன் வசனத்தை கலாய்க்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
Recommended Video

சென்னை: "அந்த நாயே பயந்துடுச்சு"... அப்படித்தான் இருக்கு இப்போ இருக்கிற சீரியல் டயலாக்குகள்!!
ஒரு காலத்தில் அழுது கொண்டே சீரியல் பார்த்தவர்கள் அதிகம். இப்போவெல்லாம் அது மலையேறி போயிடுச்சு சீரியல் மோகம் குறையலேன்னாலும், அடுத்த சீன் என்னவாக இருக்கும் என்பது முந்தைய சீனிலேயே யூகித்து விட முடிகிறது.
அதிலும் ஒரு சில நபர்களையும், அவர்களின் ஃபேமஸ் டயலாக்குகளையும் மக்கள் வாரி கலாய்த்து வருகின்றனர். அப்படி ஒரு சீரியல்தான் கல்யாண வீடு. மெட்டி ஒலி திருமுருகன் நடித்து வரும் சீரியல் இது.

சத்தமாக பேசுகிறார்
கொஞ்ச நாளாகவே இவரது நடிப்பு ட்ரண்ட் ஆகி வருகிறது. நல்லாதான் டயலாக் பேசறார், ஆனா என்ன ஆகுதோ தெரியவில்லை, திடீரென்று சத்தமாக அதே டயலாக்கை வேற மாடுலேஷனில் பேசிவிடுகிறார்.

கோபியுடன் மோதாதே
இதனால் அவர் நடிக்கும் சீரியஸ் வசனங்களை மக்கள் வறுத்தெடுக்கிறார்கள், லவ் சீன்களை கூட லந்து செய்கிறார்கள். இணையத்தில் "கோஸ்ட்டுடன் மோது, கோபியுடன் மோதாதே" என்பது போல பல மீம்ஸ்களை போட்டு அலற விடுகிறார்கள்.

கையெழுத்து போடணும்
இப்போது இதை வைத்து ஒரு வீடியோவே வந்துள்ளது. அதில் ஒருவர் பக்கத்தில் ஒரு பெரிய நாயை உட்கார வைத்து கொண்டு, திருமுருகன் டயலாக் ஒன்றை பேசுகிறார். அதில், "அவன் கேட்டபடி கையெழுத்து போட்டுதான் ஆகணும், போடணும்" என்று சாந்தமாக பேசுகிறார்.

முறைத்து குரைக்கிறது
பிறகு, "போடக்கூடாது" என்று திருமுருகன் போலவே மாடுலேஷன் மாற்றி பேசவும், உட்கார்ந்திருந்த நாய் வெறி கொண்டு கத்துகிறது, கோபத்துடன், அந்நபரை முறைத்து குரைக்கிறது. அந்த நாயே பயந்துடுச்சு மாடுலேஷனை பார்த்து என்பது போல இந்த வீடியோவை தெறிக்க விட்டு வைரலாக்கி வருகின்றனர் நெட்டிசன்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications