சிக்கனில் சதை இருக்கு.. எலும்பு இல்லை.. கடைக்காரரின் கன்னத்தில் ஓங்கி அடித்த வாடிக்கையாளர்- வீடியோ
சென்னை: பூந்தமல்லி அருகே ஓட்டலில் சிக்கன் எலும்பாக இல்லாததால் சப்ளையரை தாக்கிய வாடிக்கையாளர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரையான்சாவடியில் இருந்து ஆவடி செல்லும் சாலையில் சென்னீர்குப்பம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஓட்டல் ஒன்று உள்ளது. இங்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த கார்த்தி என்பவர் சிக்கன் வாங்கிச் சென்றுள்ளார்.

வீட்டிற்கு வாங்கிச் சென்றவர் வீட்டில் வைத்து சாப்பிட்டபோது கறியில் எலும்பு இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்து தனது நண்பருடன் ஓட்டலுக்கு வந்தவர் வாங்கிச் சென்ற சிக்கனில் எலும்பு ஏதும் இல்லை என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பின்னர் அங்கு கடையில் சப்ளை செய்து கொண்டிருந்த ஊழியர் சாகுல் அமீது என்பவரின் கன்னத்தில் பளார், பளார் என அறைந்தார். இதில் அந்த ஊழியர் நிலை குலைந்து போனார்.
இந்த காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது பின்னர் அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். கன்னத்தில் அறைந்ததில் சாகுல் அமீதுக்கு காது கேட்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து கடை உரிமையாளர் பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் பூந்தமல்லி போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு தலைமறைவாக உள்ள நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஓட்டலில் இருந்து சாப்பிட வாங்கி சென்ற சிக்கனில் எலும்பு இல்லாததால் ஓட்டல் ஊழியர் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications