Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விடியல.. முடியல.. அண்ணாமலை பாதயாத்திரையால் யாருக்கு பாசிட்டிவ்? எண் கணித நிபுணரின் கணிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: அண்ணாமலையின் நடைபயணம் திட்டமிட்டபடி நடைபெற்றாலும் சிறு சிறு சலசலப்புகள் ஏற்படலாம் என்று கணித்துள்ளார் எண் கணித நிபுணர் ஜெ.என்.எஸ் செல்வன். ராமேஸ்வரத்தில் தொடங்கும் என் மண் என் மக்கள் நடைபயணம் மெகா வெற்றியை அடையும் என்றும் கணித்துள்ளார் ஜெ.என்.எஸ் செல்வன். புகார் பெட்டியால் சில நெகடிவ் அம்சங்களும் அண்ணாமலைக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றும் கணித்துள்ளார் ஜெ.என்.எஸ் செல்வன்.

தமிழக அரசு மீதும், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மீதும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வரும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வரும் ஆண்டு நாட்டில் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலுக்கு முன்பாக தமிழகத்தில் கட்சிக்கு ஆதரவு திரட்டவும், பலம் சேர்க்கவும் 'என் மண், என் மக்கள்' என்ற பெயரில் பாதயாத்திரை நடைபயணம் செல்வதற்கு திட்டமிட்டு உள்ளார். இந்த நடைபயணம் நிகழ்ச்சி ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து நாளை மறுநாள் 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் தொடங்க உள்ளது. இந்த நடைபயணத்தை தொடங்கி வைப்பதற்காக மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான அமித்ஷா வருகை தர உள்ளார்.

Vidiyala Mudiyala words are Negative energy for Annamalai Pathayatra says JNS Chelvan Prediction

ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகாமையில் உள்ள தனியார் திடலில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக பரந்த நிலப்பரப்பில் பாராளுமன்ற வடிவில் மேடை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதில் கட்சி முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் அமருவதற்காக தனித்தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் அமித்ஷா, அண்ணாமலை, பா.ஜ.க. தலைவர்களை வரவேற்று விளம்பர பதாகைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

அண்ணாமலையின் இந்த பாதயாத்திரை நடைபயணத்தில் பங்கேற்க இதுவரை சுமார் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். 234 தொகுதிகளிலும் 100 நாட்கள் நடைபயணம் செல்லும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது. மொத்தம் ஐந்து கட்டங்களாக இந்த யாத்திரை நடைபெறுகிறது.

Vidiyala Mudiyala words are Negative energy for Annamalai Pathayatra says JNS Chelvan Prediction

முதற்கட்டமாக ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய பாராளுமன்ற தொகுதிகளை உள்ளடக்கி நடைபெறும் முதற்கட்ட யாத்திரை ஆகஸ்ட் 22ஆம் தேதி நிறைவடைகிறது. அதன் பிறகு சிறு சிறு இடைவெளிகளுடன் அடுத்தடுத்த கட்டங்களாக யாத்திரை நடைபெறுகிறது. 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் யாத்திரை நிறைவடைகிறது. இந்த நிறைவு நாளில் பிரதமர் பங்கேற்க இருக்கிறார். மேலும் இதில் பங்கேற்க வருமாறு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளார்.

இதனிடையே இந்த நடைபயணம் எப்படி இருக்கும் அதன் தாக்கம் குறித்து எண்கணித நிபுணர் ஜெஎன்எஸ் செல்வன் அவர்கள் நமது ஒன் இந்தியா இணைய தளத்திற்காக பிரத்யேகமாக கணித்து கூறியுள்ளார். அண்ணாமலையின் நடைபயணம் அதிரடியாகவும் பேசு பொருளாகவும் அமையப்போகிறது என்று கூறியுள்ளார் ஜெ.என்.எஸ் செல்வன். பாஜக மாநிலத்தலைவர் கே. அண்ணாமலையின் பெயர் எண் கூட்டுத்தொகை 24 கூட்டினால் 6 வருகிறது.

பொதுவாகவே 6ஆம் எண்ணை கூட்டுத்தொகையாக கொண்டவர்கள் சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். அதுவும் கே. அண்ணாமலை வித்தியாசமாக கேரக்டர் கொண்டவர். செய்யும் செயல்கள் எல்லாவற்றிலும் வித்தியாசமாக செய்வார். இந்த நடைபயணமும் அப்படித்தான் அமையப்போகிறது.
ஆட்சியாளர்களாலும், தேசிய அளவிலும் உலக அளவிலும் அண்ணாமலை பேசப்படக்கூடியவராகவும் இருப்பார். இந்த நடைபயணத்தை பலரும் விரும்பப்போகிறார்கள்.

இந்த பாதயாத்திரை பயணத்திட்டம் தடையின்றி நடைபெறுமா? என்ற கேள்வி எழுகிறது. ஆனால் இது தடையின்றி நடைபெறும் என்று ஜெ.என்.எஸ் செல்வன் கூறியுள்ளார். இந்த நடைபயணத்தால் அண்ணாமலையின் இமேஜ் மேலும் உயரும். கூடுதலான சக்தி பெறுவார் என்பது நிச்சயம்.

அதே நேரத்தில் அண்ணாமலையுடன் கூடவே பயணம் செய்யும் புகார் பெட்டியில் "விடியல .. முடியல" என்று எழுதப்பட்டிருக்கிறது. இந்த வார்த்தைகள்தான் அண்ணாமலையின் உழைப்பை இந்த இரண்டு சொற்கள் அதள பாதாளத்திற்கு கொண்டு செல்லப்போகிறது என்றும் எண் கணித நிபுணர் ஜெ.என்.எஸ் செல்வன் கூறியுள்ளார்.

எந்த ஒரு தலைவருமே பாசிட்டிவ் ஆக சொல்ல வேண்டும். முதல்வர் ஸ்டாலின் கடந்த சட்டசபை தேர்தலின் போது " ஸ்டாலின்தான் வராரு.. விடியல் தரப்போராரு" என்று பாசிட்டிவ் ஆக சொன்னது வெற்றிக்கு வழி வகுத்தது. அதே போலத்தான் மக்களுக்கு பாசிட்டிவ் ஆக சொல்ல வேண்டும். அதுதான் வெற்றியைத் தரும். 'விடியல.. முடியல ' என்று சொல்வது நெகடிவ் சக்தியை அதிகரிக்கும். நல்லதை சொன்னால் நல்லது நடக்கும் என்பதை மனதில் வைத்து அண்ணாமலை நடை பயணத்தை தொடங்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+