'பானை'தான் டார்கெட்.. உதயசூரியனுக்கு வாய்ப்பில்லை! உஷாரான திருமாவளவன்.. 5 மாநிலங்களில் விசிக போட்டி
சென்னை: லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பானை சின்னத்தில் போட்டியிட விசிக உறுதியாக இருக்கிறது. இந்நிலையில் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் விசிக போட்டியிடும் என கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்பி அறிவித்திருக்கிறார்.
எதிர்வரும் லோக்சபா தேர்தலில் பாஜக vs இந்திய கூட்டணி என்கிற சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், இந்த தேர்தலை பயன்படுத்தி சில அரசியல் கட்சிகள் தங்கள் செல்வாக்கை பலப்படுத்த முயன்று வருகின்றன. அந்த வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி, பானை சின்னத்தை வசப்படுத்த 5 மாநிலங்களில் களமிறங்க இருக்கிறது. இன்று கட்சியின் தென் மாநில நிர்வாகிகளுடனான ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதனை உறுதி செய்திருக்கிறார்.

"தெலங்கானாவில் 10, கர்நாடகாவில் 6, கேரளாவில் 3 லோக்சபா தொகுதிகளில் விசிக போட்டியிட முடிவு செய்திருக்கிறது. இந்த 3 மாநிலங்களில், விசிக இந்தியா கூட்டணியில் போட்டியிடவில்லை. ஆந்திராவில் இந்தியா கூட்டணிக் கட்சியான காங்கிரஸிடம் தொகுதி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால் இந்தியா கூட்டணியில் போட்டியிடுவோம். இல்லையெனில் தனித்து போட்டியிடுவோம்" என்று பேட்டியில் கூறியிருக்கிறார்.
தமிழ்நாட்டில் தங்கள் கூட்டணியில் உள்ள விசிகவை, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைக்க வேண்டும் என்று திமுக தொடர்ந்து முயன்று வருகிறது. காரணம் நாடாளுமன்றத்தில் திமுகவின் செல்வாக்கை அதிகரிக்க வேண்டும் என்பதுதான். எனவே, வெற்றி ஒன்றுதான் குறிக்கோள் என்கிற அடிப்படையில் கடந்த 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைக்க விசிகவை திமுக வலியுறுத்தியது. ஆனாலும், விசிக பானை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றது. கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும், விசிக பானை சின்னத்திலேயே போட்டியிட்டது.
இந்த முறையும் உதயசூரியன் சின்னத்தில் விசிகவை நிற்க வைக்க திமுக முயன்றிருக்கிறது. ஆனால், இதற்கு பிடி கொடுக்காமல் 5 மாநிலங்களில் போட்டி என திருமாவளவன் சாமர்த்தியமாக காய் நகர்த்தியுள்ளார். இப்படி போட்டியிடுவதன் மூலம் உதயசூரியன் சின்னத்தில் நிற்க சொல்லி திமுக கட்டாயப்படுத்த முடியாது.
இது குறித்து சில நாட்களுக்கு முன்னர் பேட்டியளித்திருந்த திருமாவளவன் விரிவாக கூறியிருந்தார். அதாவது, "கடந்த லோக்சபா தேர்தலின் போது வெற்றி என்பதை குறிக்கோளாக கொண்டிருந்ததால் ஒரே சின்னத்தில் போட்டியிட வேண்டுமென திமுக வலியுறுத்தியது உண்மைதான். அப்போதும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனிச் சின்னத்தில் ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தது.
சட்டசபை தேர்தலில் ஆறு தொகுதிகளில் பானை சின்னத்தில் தான் போட்டியிட்டோம், வெற்றியும் பெற்றோம். அப்போது வெற்றி என்ற நோக்கிலேயே அந்த கருத்து முன்வைக்கப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சியை நசுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அத்தகைய கோரிக்கை வைக்கப்படவில்லை. எனவே இப்போதைக்கு அது ஒரு பிரச்சனை அல்ல. விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுத் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்றுதான் விரும்புகிறது" என்று விளக்கமளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications