வேலுமணி ரெய்டு.. அடுத்த என்ன கைதா? முதல்வர் ஸ்டாலினுடன் விஜிலன்ஸ் டிஜிபி கந்தசாமி பரபர மீட்டிங்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வீடு, அலுவலகங்களில் சோதனை நடக்கும் நிலையில் முதல்வர் ஸ்டாலினுடன் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி கந்தசாமி ஆலோசனை நடத்தினார். வேலுமணி வீட்டில் ரெய்டு நடத்த நிலையில் அவர் கைது செய்யப்படுவாரா என்ற கேள்வி இதனால் எழுந்துள்ளது.

Recommended Video

    தள்ளு முள்ளு, போராட்டம் இடையே SP Velumani வீட்டில் DVAC Raid | Oneindia Tamil

    கடந்த ஜூன் மாதம் 25ம் தேதி.. சென்னை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதல்வர் மு. க ஸ்டாலின் வீட்டில் அந்த சந்திப்பு நடந்தது. லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக நியமிக்கப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி கந்தசாமி முதல்வரை நேரில் சந்தித்து சுமார் 1 மணி நேரம் ஆலோசனை நடத்தினார். அப்போதே அதிமுகவின் மாஜி அமைச்சர்கள் கண்டிப்பாக குறி வைக்கப்படுவார்கள், விரைவில் விசாரணைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்று பேச்சுக்கள் அடிபட்டன.

    டிஜிபி கந்தசாமி எளிதில் கடந்து போக கூடிய அதிகாரியும் இல்லை. தவறு என்றால் தவறு என்று நெற்றியில் அடித்தார் போல சொல்லக்கூடிய ஸ்டிரிக்ட் அதிகாரி.

    கண்டிப்பானவர்

    கண்டிப்பானவர்

    சொராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கை மும்பையின் சிபிஐ பிரிவு விசாரணை செய்த போது, அந்த வழக்கில் அமித் ஷாவை கைது செய்து அழைத்து சென்றவர்தான் கந்தசாமி. சென்ற இடங்களில் எல்லாம் ஸ்டிரிக்ட் அதிகாரி, கண்டிப்பானவர், கரை படியாதவர் என்று பெயர் எடுத்தவர். இதனால்தான் என்னவோ அவருக்கு கடந்த மே மாதம் தானாக தமிழ்நாட்டின் லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்புத்துறை இயக்குனர் என்ற பதவியும் தேடி வந்தது.

    பதவி

    பதவி

    இந்த பதவி இவருக்கு வழங்கப்பட்ட போதே முந்தைய ஆட்சியில் நடந்த முறைகேடுகளை இவர் லிஸ்ட் எடுப்பார் என்று கணிக்கப்பட்டது. அதேபோல் பதவி ஏற்று சில நாட்களில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். இந்த சந்திப்பில் என்ன நடந்தது என்ற விவரங்கள் முழுமையாக வெளிவரவில்லை என்றாலும், முதல்வர் ஸ்டாலினிடம் கந்தசாமி முக்கியமான லிஸ்ட் ஒன்றை கொடுத்ததாக கூறப்பட்டது.

    லிஸ்ட்

    லிஸ்ட்

    அதாவது முன்னாள் அமைச்சர்களின் பெயர்கள், அவர்களின் முறைகேடுகள் குறித்த விவரம் இதில் அடங்கி இருந்ததாக கூறப்பட்டது. இதைத்தான் முதல்வர் ஸ்டாலின் விரிவாக விசாரிக்கும்படி கந்தசாமிக்கு உத்தரவிட்டதாகவும், ஆகஸ்ட் மாதம் இதில் கைது நடவடிக்கைகள் அரங்கேறலாம் என்று அப்போதே செய்திகள் வெளியானது. சரியாக அப்போது வந்த செய்திகளை போலவே வரிசையாக எம். ஆர் விஜயபாஸ்கர் தற்போது எஸ். பி வேலுமணி என்று பலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    ரெய்டு

    ரெய்டு

    முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 60 இடங்களில் இந்த தீவிரமான ரெய்டு 12 மணி நேரமாக நடத்தப்பட்டு வருகிறது. காலையில் தொடங்கிய ரெய்டு முடியும் என்று எதிர்பார்த்தால் தொடர்ந்து ரெய்டு நடத்தும் இடங்களை லஞ்ச ஒழிப்புத்துறை உயர்த்திக்கொண்டு செல்கிறது. 41 ஒப்பந்தங்கள், 811 கோடி ரூபாய் பணப்பரிமாற்றம் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

    யார்?

    யார்?

    இந்த நிலையில்தான் எஸ்.பி வேலுமணி வீடு, அலுவலகங்களில் சோதனை நடக்கும் போது முதல்வர் ஸ்டாலினுடன் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி கந்தசாமி ஆலோசனை நடத்தினார். முதல்வரை நேரில் சந்தித்து கந்தசாமி ஆலோசனை செய்தார். இந்த ரெய்டு நடவடிக்கையில் அடுத்து என்ன செய்யலாம் என்பது குறித்து இவர்கள் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.

    ஆலோசனை

    ஆலோசனை

    எஸ்.பி வேலுமணியை கைது செய்வது அல்லது வழக்கில் புதிய பிரிவுகளை சேர்ப்பதை பற்றி பேசி இருக்கலாம் அல்லது வேறு மாஜி அமைச்சர்கள் மீதான நடவடிக்கை குறித்து பேசி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த மீட்டிங் மொத்தம் 15 நிமிடம் மட்டுமே நடந்ததால் என்னதான் இதில் பேசி இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த சந்திப்பிற்கு பின் டிஜிபி கந்தசாமியின் அடுத்தகட்ட மூவ் என்னவாக இருக்கும் என்று கேள்வி எழுந்துள்ளது.

    கேள்வி

    இன்று எஸ்.பி வேலுமணி வீடு மற்றும் அலுவலகங்களில் நடந்த ரெய்டு குறித்த சிறிய டீசர் பின்வருமாறு.

    காலை 6 மணிக்கு இந்த ரெய்டு தொடங்கியது.

    சென்னை, கோவை மாநகராட்சி டெண்டர்களில் முறைகேடு செய்த்தாக அறப்போர் இயக்கம், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த நிலையில் நடவடிக்கை பாய்ந்துள்ளது.

    இந்த சோதனையை தொடந்து மொத்தம் 17 பேர் மீது மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. ஐபிசி பிரிவு 120-B, சட்ட விரோத செயலை செய்வது, குற்றசதி மேற்கொள்ளவதற்கு எதிரான பிரிவு. ஐபிசி பிரிவு 420 : ஏமாற்றுதல், மோசடிகளுக்கு எதிரான வழக்கு பிரிவு ஐபிசி பிரிவு 40: இது இந்தி தண்டனை சட்டத்தில் குற்றம் என்ற பிரிவின் கீழ் வருவது ஆகும். குற்றம் புரிந்தவர்களுக்கு இந்த பிரிவுகளின் கீழ் வழக்கு சாத்தியப்படும். ஊழல் தடுப்பு 1988 சட்ட பிரிவு : 109 IPCன் 13 (2) r/w 13 (i) (c) and 13 (1) (d) பிரிவுகள்: லஞ்ச ஒழிப்புத்துறையின் லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான சட்ட பிரிவுகள் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

    12 மணி நேரமாக ரெய்டு நடந்து வருகிறது. ரெய்டு நடத்தப்படும் இடங்களின் எண்ணிக்கை 50ல் இருந்து 60 ஆக உயர்ந்துள்ளது.

    A1 ஆக எஸ். பி வேலுமணி மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. A2வாக பி. அன்பரசன் என்பவரும், A3 ஆக கேசிபி எஞ்சினியர்ஸ் நிறுவனமும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. இது போக கே. சந்திரபிரகாஷ், ஆர். சந்திரசேகர் ஆகியோர் முக்கிய குற்றவாளிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த ரெய்டுக்கு எதிராக அதிமுக அறிக்கை வெளியிட்டுள்ளது. அதிமுக மாவட்ட செயலாளர்கள் சென்னை மற்றும் கோவையில் போராட்டத்தில் குதித்தனர்.

    நேற்று திருவேங்கடம் என்ற காண்டிராக்டர் வேலுமணிக்கு எதிராக சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்த நிலையில் இன்று நடவடிக்கை.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+