விக்னேஷ் லாக்கப் டெத்...சட்டசபையில் அதிமுக அனல்... கொலை வழக்கு என முதல்வர் கூறியும் வெளிநடப்பு
விசாரணை கைதி மரணம் தொடர்பாக சந்தேக மரணம் என வழக்கு பதியப்பட்டு 3 போலீசார் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
சென்னை: கைதி விக்னேஷ் மரணத்தில் காவலர்கள் மீது கொலை வழக்கு பதிய உத்தரவு என முதல்வர் கூறிய நிலையில் சட்டசபையில் இருந்து அதிமுகஎம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். விசாரணை கைதி விக்னேஷ் உயிழந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை வைத்தார்.
Recommended Video
விசாரணை கைதி விக்னேஷ் மரணமடைந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த வழக்கு விசாரணையானது எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு விசாரணை தொடர்பாக ஏற்கெனவே தலைமை செயலக காலனி காவல் ஆய்வாளர் செந்தில்குமார் நேரில் ஆஜர்படுத்தப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அதேபோல் விசாரணை கைதி விக்னேஷின் சகோதரர் வினோத் மற்றும் விக்னேஷ், சொல்லு சுரேஷ் என்ற நபர்களை அழைத்து சென்ற ஆட்டோ ஓட்டுநரிடமும் சிபிசிஐடி போலீசார் 8 மணிநேரம் விசாரணை நடத்தினர்.
விக்னேஷை கைது செய்தபோது உடனிருந்த காவலர்களான, உதவி ஆய்வாளர் புகழும் பெருமாள், தீபக், மற்றொரு ஊர்காவல்படையை சேர்ந்த வீரர் 3 பேர் ஆகிய 8 பேரை நாளை மாலை 5 மணிக்குள் சிபிசிஐடி போலீசார் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளனர்.

சட்டசபையில் விக்னேஷ் மரணம்
தமிழக சட்டசபையில் இன்று எடப்பாடி பழனிச்சாமி தமிழக சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். விக்னேஷ் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் அவரது உடலில் 13 இடங்களில் பலத்த காயம் இருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். விக்னேஷ் மரணத்தை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறினார்.

முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
இதற்கு விளக்கம் அளித்த முதல்வர் மு.க ஸ்டாலின், விசாரணை கைதி மரணம் தொடர்பாக சந்தேக மரணம் என வழக்கு பதியப்பட்டு 3 போலீசார் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றார். போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். சட்டப்படி அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது எனவும் கூறினார். பிரேத பரிசோதனை முடிவின் அடிப்படையில் கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

கொலை வழக்கு
தலைமைச் செயலக காலனி காவல் நிலைய லாக்அப் மரணம் விவகாரத்தில் விக்னேஷ் பிரேத பரிசோதனையில் 13 இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளதாக வந்த தகவலின் அடிப்படையில் வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் முதல்வர் மு.க ஸ்டாலின் சட்டசபையில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஈரோடு, திருப்பூர் கொலை சம்பவங்கள் குறித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.

அதிமுக வெளிநடப்பு
விக்னேஷ் மரண வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடாததைக் கண்டித்து அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சட்டபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். வெளிநடப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, விக்னேஷ் மரணத்தில் பலத்த சந்தேகம் இருப்பதாகவும் 13 இடங்களில் படுகாயங்கள் இருப்பதாகவும் கூறினார்.
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு












Click it and Unblock the Notifications