"தமிழகத்தில் உள்ள பாஜக தான் திமுக! டெல்லியில் உள்ள திமுக தான் பாஜக.." கோபத்தோடு கொளுத்திப் போட்ட விஜய்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் இப்போது திமுக- பாஜக- அதிமுக இடையே ரகசிய கூட்டணி இருப்பதாக கூறியுள்ள தவெக தலைவர் விஜய், டெல்லியில் இருக்கும் திமுக பெயர் தான் பாஜக என்றும் தமிழ்நாட்டில் இருக்கும் பாஜக பெயர் தான் திமுக என்றும் கடுமையாக சாடினார். மேலும், மக்களால் அமைந்த இந்த ஆட்சியை யாராலும் கலைக்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளராக மதுராந்தகம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் மரகதம் குமரவேல். பின்னர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தார். இதையடுத்து மதுராந்தகம் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

Vijay Accuses DMK

சுவாரஸ்யமாக அதே மரகதம் குமரவேல் தற்போது தவெக வேட்பாளராக களமிறங்கியுள்ளார். இந்த தொகுதியில் திமுக, அதிமுக, இடதுசாரிகள், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும் போட்டியிடுகிறது. இதனால் அங்கு ஐந்து முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே மதுராந்தகத்தில் மரகதம் குமரவேலை ஆதரித்து இன்று தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய அவர், "ஊழல் செய்த கூட்டத்தை விட மாட்டோம். தடித்த தோலுக்கு சொந்தக்காரன் நான்.. எல்லாவற்றையும் 34 ஆண்டுகளாக பார்த்துவிட்டு வந்துள்ளேன். திமுகவினரால் ஊழல் செய்ய மாட்டோம் என்று சொல்ல முடியுமா? ரெண்டே ரெண்டு பேருக்கு மட்டும் தான் போட்டி.. தூயசக்தி தவெகவுக்கும், தீயசக்தி திமுகவுக்கும் தான் போட்டியே.

தவெக - திமுக இடையில் போட்டி என்பதை இப்போது அவர்களே சொல்ல தொடங்கிவிட்டார்கள். பவளவிழா கட்சியின் பண்ணையார் வீட்டுக் குழந்தையுடன் தான் நமக்கு போட்டி.. ஆட்சியை கவிழ்க்கலாம் என்று கணக்கு போடுகிறார்கள். உங்களால் ஒன்றும் கிழிக்க முடியாது.

எப்போது பார்த்தாலும் பாஜக உள்ளே வந்துவிடும் என்று பூச்சாண்டி காட்டுகிறார்கள். டெல்லியில் இருக்கும் திமுக பெயர் தான் பாஜக.. தமிழ்நாட்டில் இருக்கும் பாஜக பெயர் தான் திமுக.. திமுக, பாஜக, அதிமுக இடையே ரகசிய கூட்டணி.. தைரியம் இருந்தால் திமுக, அதிமுக, பாஜக மூவரும் ஒன்றாக வரலாமே? இந்த ஆட்சி கலையும் என்று எப்படி பேசலாம்? இது விஜய் ஆட்சி இல்லை.. மக்களுக்கான ஆட்சி. இதை யாராலும் கலைக்கவே முடியாது" என்றார்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+