ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்?
சென்னை: 2026 சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். முதல்வர் வேட்பாளராக தேர்தலில் நிற்கும் விஜய், சட்டமன்றத்திற்குள் நுழைந்தே ஆகவேண்டும் என்ற உறுதியோடு 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். தேர்தல்களில் 2 தொகுதிகளில் நின்ற தலைவர்கள் யார் யார்?
இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது தேர்தல் சட்டப்படி (Section 33(7) of RP Act) அனுமதிக்கப்பட்டது. பல்வேறு காரணங்களுக்காக, அரசியல் தலைவர்கள் 2 தொகுதிகளில் போட்டியிடுவார்கள். இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெறும் பட்சத்தில், அதில் ஒரு தொகுதியை வைத்துக்கொண்டு மற்றொரு தொகுதியில் ராஜினாமா செய்ய வேண்டியிருக்கும்.

ஜெயலலிதா
தமிழக வரலாற்றில் ஒரே தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முக்கியமான தலைவர் முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா. 1991 சட்டமன்றத் தேர்தலில், பர்கூர் மற்றும் காங்கேயம் ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு இரண்டிலுமே வெற்றி பெற்றார் ஜெயலலிதா.
தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றதும், சட்ட விதிகளின்படி காங்கேயம் தொகுதியை ராஜினாமா செய்துவிட்டு, பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தொடர்ந்தார். பின்னர் காங்கேயம் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது.
2001 சட்டமன்றத் தேர்தலில் ஆண்டிபட்டி, கிருஷ்ணகிரி, புவனகிரி மற்றும் புதுக்கோட்டை என நான்கு தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்தார் ஜெயலலிதா. ஆனால், ஊழல் வழக்கில் தண்டனை பெற்றிருந்த காரணத்தால், அவரது நான்கு வேட்பு மனுக்களையும் தேர்தல் ஆணையம் நிராகரித்தது. பின்னர் 2002ல் ஆண்டிப்பட்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல்வரானார் ஜெயலலிதா.
ரங்கசாமி
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, கடந்த 2021 சட்டசபை தேர்தலில் தட்டாஞ்சாவடி மற்றும் ஏனாம் தொகுதிகளில் போட்டியிட்ட ரங்கசாமி ஏனாமில் தோல்வி அடைந்தார். தட்டாஞ்சாவடி தொகுதியில் வெற்றி பெற்று தற்போது முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார்.
2011ல் அதிமுகவுடன் கூட்டணி வைத்து கதிர்காமம், இந்திரா நகர் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு, இரண்டிலும் வெற்றி பெற்று முதலமைச்சரானார் ரங்கசாமி. வரும் சட்டசபை தேர்தலிலும் தட்டாஞ்சாவடி, மங்கலம் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார் ரங்கசாமி. ரங்கசாமி 2 தொகுதிகளில் போட்டியிட்ட தேர்தல்களில் எல்லாம் அவரது கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. இதையடுத்து 2 தொகுதி ஃபார்முலாவை இந்த முறையும் அவர் பின்பற்றுகிறார்.
பிரதமர் மோடி
நாடு முழுவதும் பல்வேறு தலைவர்கள், ஒரே தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி 2014 மக்களவைத் தேர்தல்களில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். 2014-ல் வாரணாசி மற்றும் வதோதரா தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார்.
ராகுல் காந்தி
மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ராகுல் காந்தி, 2019 ஆம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் அமேதி மற்றும் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் உத்தர பிரதேசத்தின் அமேதி தொகுதியில் தோல்வி அடைந்தார் ராகுல். கேரளாவின் வயநாடு தொகுதியில் இருந்து எம்.பி ஆனார்.
2024 லோக்சபா தேர்தலில் ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டார் ராகுல் காந்தி. இரண்டு தொகுதிகளிலுமே வெற்றி பெற்றதால் வயநாடு தொகுதியில் ராஜினாமா செய்தார். அந்த தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு, ராகுல் காந்தியின் தங்கையும், காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி வெற்றி பெற்று எம்.பி ஆனார்.
2 தொகுதிகளில் போட்டியிடும் விஜய்
தமிழகத்தில் அடுத்த மாதம் 23 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் அறிமுகம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
தவெக தலைவர் விஜய் 234 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை அறிமுகப்படுத்தினார். விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரு தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு தொகுதியில் பின்னடைவு ஏற்பட்டாலும் மற்றொரு தொகுதியில் வெற்றி பெற்று சட்டசபைக்குள் நுழையும் வகையில், பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு இடங்களில் போட்டியிடுகிறார் எனக் கூறப்படுகிறது.
-
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
குறை பிரசவத்தில் தவெக வெற்றி.. ஆட்சி நீடிக்காது.. திமுக சிவசங்கர் கணிப்பு -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்











Click it and Unblock the Notifications