சிபிஐ விசாரணைக்கு ஃபுல் கருப்பில் ஆஜர்! விஜய், ஆதவ் அர்ஜுனாவை கவனிச்சீங்களா!
சென்னை: சிபிஐ விசாரணைக்கு இன்று விஜய் டெல்லியில் நேரில் ஆஜராகிறார். காலை தனி விமானம் மூலம் டெல்லி சென்ற விஜய், இன்னும் சற்று நேரத்தில் விசாரணைக்கு ஆஜராக இருக்கிறார். விசாரணைக்கு சென்ற விஜய், முழுக்க கருப்பு உடை அணிந்து சென்றிருப்பது விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
கரூர் சம்பவத்தை பொறுத்த அளவில், முழுக்க முழுக்க திமுக தரப்பைதான் தமிழக வெற்றிக் கழகம் குற்றம் சாட்டி வருகிறது. கூட்ட நெரிசலுக்கும், உயிர் பலிக்கும் காரணம் திமுகதான் என்று கூறுகிறது.

கரூர் சுத்தம் செய்யப்படும்
கரூர் சம்பவம் குறித்து உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற போது, அதில் இப்படியாக எந்த வாதத்தையும் தவெக வைக்கவில்லை. ஆனால் பொது வெளியில் திமுக மீது சரமாரியான குற்றச்சாட்டை அடுக்கியது. அதிலும் ஆதவ் அர்ஜுனா, "கரூர் காவல்துறை, செந்தில் பாலாஜியின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஒரு காலத்தில் மதுரைக்குள் சென்றால், மதுரை அழகிரியின் கோட்டை என்பார்கள். ஆனால், இன்று அழகிரி அரசியலிலேயே இல்லை. அந்த மாதிரி கரூர் சுத்தம் செய்யப்படும்" என்று கூறியிருந்தார்.
லாஜிக் இல்லாத கேள்விகள்
கரூர் சம்பவம் நடந்த உடன் செந்தில் பாலாஜி எப்படி உடனே அங்கு வந்தால்? ஒரே ராத்திரியில் எப்படி அத்தனை பிரேத பரிசோதனைகளும் நடந்து முடிந்தது? கரண்ட் ஏன் கட் செய்தார்கள்? என்றெல்லாம் அடுக்கடுக்கான கேள்விகளை தவெகவினர் அடுக்கியிருந்தனர்.
நியாயமான கேள்விகள்
மொத்தத்தில் சம்பவம் நடந்ததற்கு காரணம் தவெக கிடையாது என்பதைதான் சுற்றி சுற்றி சொல்லி வருகிறார்கள். என்னதான் இப்படியெல்லாம் வளைத்து, வளைத்து எதிர் குற்றச்சாட்டை முன்வைத்தாலும், தர்க ரீதியாக சில கேள்விகளை அவர்களால் தடுக்க முடியவில்லை. குறிப்பாக விஜய் ஏன் பிரச்சாரத்திற்கு லேட்டாக வந்தார்? என்கிற கேள்விக்கு அவர்களிடம் பதில் இல்லை.
அதேபோல நெரிசலில் உயிர் பலி ஏற்பட்டிருக்கிறது என்று, பத்திரிகையாளர்கள் சொன்னபோதும் காதில் வாங்காமல் ஏன் சென்னைக்கு அவசரமாக சென்றார்? என்பதும் முக்கிய கேள்வியாக இருக்கிறது.
சிபிஐ விசாரணை
இப்படி இருக்கையில் விஷயத்தை சிபிஐ கையில் எடுக்க வேண்டும் என, தவெக விரும்பியிருந்தது. இதனையடுத்து சிபிஐ தனது வேலையை தொடங்கியுள்ளது. ஏற்கெனவே ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோரிடம் மணிக்கணக்கில் விசாரணை நடத்தியிருக்கிறது. இது போதாது என்று, பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய வாகனத்தையும் ஆய்வு செய்திருக்கிறது. தொடர்ந்து விஜய் ஆஜராக சம்மன் அனுப்பியது.
கருப்பு அடையாளம்
இதனையடுத்து இன்று விஜய் ஆஜராகியுள்ளார். முழு கருப்பு உடையில் விஜய் மற்றும் ஆதவ் அர்ஜூனா டெல்லிக்கு சென்றிருக்கிறார்கள். கருப்பு உடை என்பது எதிர்ப்பின் அடையாளமாக இருப்பதாக விஜய் ரசிகர்கள் கருதுகிறார்கள். அதாவது, என்னதான் சிபிஐ வச்சி நெருக்கினாலும், சென்சார் போர்ட்டை வச்சு ஜனநாயகன் படத்தை வெளியிடாமல் செய்தாலும், விஜய் கெத்தா கருப்பு சட்டடை போட்டுட்டு போறாருன்னு பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
மறுபுறம் பிரதமர் மோடியை வரவேற்றபோது, முதலமைச்சர் ஸ்டாலின் வெள்ளை சட்டை அணிந்து இருந்த புகைப்படத்தை பகிர்ந்து, விஜய் தைரியமானவர் என்று கூறி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications