நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும்.. தமிழ்நாடு இனி சிறக்கும்.. அறிக்கையில் அறிவித்தார் விஜய்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுக விழா நாளை நடைபெற உள்ளது. "நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும், தமிழ்நாடு இனி சிறக்கும்" என விஜய் அறிவித்துள்ளார். கட்சிக் கொடியை ஏற்றி வைப்பதோடு, கொடிப் பாடலையும் வெளியிடுவதாக விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கிய நடிகர் விஜய், தாம் ஏற்கனவே நடிக்க ஒப்புக்கொண்டுள்ள படங்களை நடித்து முடித்துவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்திருக்கிறார். 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளார் விஜய்.

vijay tamilaga vettri kazhagam

தமிழக வெற்றிக் கழகத்திற்கு உறுப்பினர் சேர்க்கை, நிர்வாகிகள் நியமனம், மாநாடு என அடுத்தடுத்த பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார் விஜய். அடுத்த மாத இறுதியில், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மாநாடு நடத்தப்பட உள்ளது. அதற்கு முன்பாக கட்சிக் கொடியை அறிமுகம் செய்ய விஜய் முடிவு செய்துள்ளார்.

நாளை காலை 9.15 மணியளவில், சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ கொடியை ஏற்றி வைக்க உள்ளார். இதற்காக நாளை காலை 8 மணியளவில் நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து புறப்படும் நடிகர் விஜய், பனையூர் செல்கிறார்.

இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், "என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே.. சரித்திரத்தின் புதிய திசையாகவும் புதிய விசையாகவும் ஒவ்வொரு நாளும் அமைந்தால் அது ஒரு பெரும் வரம். அப்படியான வரமாக இறைவனும் இயற்கையும் நமக்கு அமைத்துக் கொடுத்திருக்கும் நாள்தான் 2024 ஆகஸ்ட் 22.

vijay tamilaga vettri kazhagam

நம் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய அடையாளமான கொடி அறிமுகமாகும் நாள். தமிழ்நாட்டின் நலனுக்காக உழைத்து, நம் மாநிலத்தின் அடையாளமாகவும் மாறப் போகும் நம் வீரக் கொடியை, வெற்றிக்கொடியை நாளை நம் தலைமை நிலையச் செயலகத்தில் அறிமுகப்படுத்தி கழகக் கொடிப் பாடலை வெளியிட்டு, கழகக் கொடியை ஏற்றி வைக்கிறோம் என்பதைப் பெருமகிழ்வுடன் அறிவிக்கிறேன்.

நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும். தமிழ்நாடு இனி சிறக்கும். வெற்றி நிச்சயம்.

தேதி-22.08.2024 வியாழக்கிழமை
நேரம்- காலை 9.15 மணி முதல்
இடம்: தலைமை நிலையச் செயலகம் பனையூர், சென்னை-600119

இவ்வாறு தெரிவித்துள்ளார் விஜய். விஜய்யின் இந்த அறிவிப்பால் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள், விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+