கொடுமை! அப்பா ரூமிலேயே பகீர்.. விஜய் ஆண்டனி வீட்டில் இல்லையா? விபரீத முடிவை மீரா எடுத்தது ஏன்?
சென்னை: வீட்டில் மகள் மீரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட போது விஜய் ஆண்டனி வீட்டில் இல்லை என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பிறந்தவர். இவர் இசையமைப்பாளர், பாடகர், நடிகர், தயாரிப்பாளர், சவுண்ட் என்ஜினியர், பாடலாசிரியர் என்ற பன்முகங்களை பெற்றுள்ளார்.

காதலில் விழுந்தேன், டிஸ்யூம், வேட்டைக்காரன், அங்காடி தெரு உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து பிரபலமடைந்தார் விஜய் ஆண்டனி. இவர் காளி, நான், சைத்தான், பிச்சைக்காரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
விஜய் ஆண்டனி கடந்த 2006ஆம் ஆண்டு பாத்திமா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் கணவரின் தயாரிப்பு நிறுவனத்தை கவனித்து வருகிறார். இவர்களுக்கு மீரா, லாரா ஆகிய இருமகள்கள் உள்ளனர். இதில் மூத்தவர் மீரா, இளையவர் லாரா. விஜய் ஆண்டனி ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் தற்போது ரத்தம் எனும் படத்தில் நடித்து வருகிறார்.
இதனால் பிஸியாக படப்பிடிப்புகளில் கலந்து கொண்டு வருகிறார். இந்த நிலையில் விஜய் ஆண்டனியின் மகள் மீரா சென்னை சர்ச் பார்க் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று இரவு தூங்க சென்ற நிலையில் அவருடைய தந்தை அறையில் மின்விசிறியில் தூக்கில் தொங்கியதை வீட்டு பணியாளர் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து மீராவை அருகில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவருடைய உடலை போலீஸார் மீட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மகள் மீரா அண்மையில் தந்தை விஜய் ஆண்டனி நடத்திய இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். மீராவுக்கு கடந்த சில தினங்களாக மன அழுத்தம் இருந்து வந்ததாகவும் அதற்காக அவர் சிசிச்சை மேற்கொண்டு வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் மீரா இந்த விபரீத முடிவை ஏன் எடுத்தார் என தெரியவில்லை.
அதிலும் விஜய் ஆண்டனி ரத்தம் படப்பிடிப்பில் பிஸியாக இருந்த நிலையில் அவருடைய அறையிலேயே மீரா தூக்கிட்டுக் கொண்டுள்ளார். மகள் இறக்கும் போது நடிகர் விஜய் ஆண்டனி அவருடைய வீட்டில் இல்லை என்கிறார்கள். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு மீரா இறந்ததாக அறிவிக்கப்பட்டதை அடுத்து விஜய் ஆண்டனிக்கு தகவல் தெரியவைக்கப்பட்டதாகவும் தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications