தவெக நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளராக செங்கோட்டையன் நியமனம்! வெயிட்டான 2 பொறுப்புகள் கொடுக்கும் விஜய்
சென்னை: தவெகவில் இணைந்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு, தவெகவில் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியும் 4 மாவட்டங்களுக்கு அமைப்பு பொதுச்செயலாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. அதாவது, கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் அமைப்பு பொதுசெயலாளராக செங்கோட்டையன் செயல்படுவார் என்று தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற தலைவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கட்சி தலைமைக்கு கெடு விதித்தார். இதனால், கோபம் அடைந்த எடப்பாடி பழனிசாமி செங்கோட்டையனின் கட்சி பதவிகளை பறித்தார். இதற்கு மத்தியில், பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா நடந்தது.

தவெகவில் செங்கோட்டையன்
இதில் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோரை செங்கோட்டையன் சந்தித்து பேசினார். அப்போது அவர், கட்சியை ஒருங்கிணைப்பது தொடர்பாக பேசியதாக கூறினார். இந்த சந்திப்பு நடந்த ஓரிரு நாளில் செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.
அதிமுகவில் கட்சியில் நிறுவன தலைவர் எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே பயணித்த செங்கோட்டையன் நீக்கப்பட்ட நிலையில், அவரது அடுத்த கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்பது அரசியல் வட்டாரத்தில் உன்னிப்பாக கவனிக்கப்பட்டது. இந்த சூழலில் திடீர் திருப்பமாக கடந்த சில நாட்களாக தவெகவில் செங்கோட்டையன் இணைய உள்ளதாக பேச்சு எழுந்தது.
என்னென்ன பதவிகள்
இதை உறுதி செய்யும் விதமாக நேற்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன் மாலையில் தவெக தலைவர் விஜய்யை பட்டினப்பாக்கத்தில் உள்ள வீட்டில் வைத்து சந்தித்து பேசினார். விஜய்யுடன் சுமார் 2 மணி நேரம் ஆலோசனை நடத்திய செங்கோட்டையன் இன்று பனையூரில் உள்ள தவெக கட்சி அலுவலகம் வந்தார்.
விஜய் முன்னிலையில் செங்கோட்டையன் தவெகவில் இணைந்த நிலையில் அவருக்கு என்ன பொறுப்பு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு தவெகவினர் மத்தியில் ஏற்பட்டது. இந்தநிலையில், செங்கோட்டையனுக்கு நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
4 மாவட்டங்களுக்கு அமைப்பு பொதுச்செயலாளர்
மேலும், 4 மாவட்டங்களுக்கு அமைப்பு பொதுச்செயலாளர் பதவியும் செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்டு உள்ளது. அதாவது, கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் அமைப்பு பொதுசெயலாளராக செங்கோட்டையன் செயல்படுவார் என்றும் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பினை அதிகாரப்பூர்வமாக தவெக தலைவர் விஜய் வெளியிட்டு உள்ளார்.
-
விஜய் ஜெயிச்சு ஒரு மாசம் ஆச்சு.. இன்னும் CM ஸ்டாலின் தானா? போலீஸ் செய்த பெரும் பிழை! கொந்தளித்த தவெக -
உங்கள் மண்டையில் ஏதாவது இருக்குதா! விஜய்யின் பெரம்பூர் தொகுதியில் வெடித்து பேசிய மேயர் பிரியா! -
Perambur Power Cut: பவர் இல்லை சிஎம்! பெரம்பூர் பகுதியில் 3 நாட்களாக தொடர் மின்வெட்டு! தூக்கத்தை தொலைத்த மக்கள் -
ஸ்டாலின் தோற்றது விஜய்க்கு வருத்தமளித்திருக்கலாம்! ஓபனாக பேசிய ப.சிதம்பரம்! -
அதிமுக எம்எல்ஏக்கள் ரோட்டில் நிற்கிறார்கள் தெரியுமா? தவெகவை வெளுத்த டிடிவி தினகரன்! -
ஏஐ மூலம் கலைஞர், விஜய் போன்ற தலைவர்களை அசிங்கமாக சித்தரிப்பதா? குரல் எழுப்பும் சிபிஐ! -
விஜய் Vs உதய் Vs அண்ணாமலை? திராவிடக் கடப்பாரைகளை வளைத்த Gen Z! இளைஞர்களால் மாறும் அரசியல் களம்! -
Sengottaiyan: அதிமுக அவ்வளவு தான் முடிஞ்சுது.. செங்கோட்டையன் டைமிங் பன்ச் -
"ஆதவ் அர்ஜுனா வாயை அடக்கிப் பேசணும்.. அதிமுகவை பற்றி பேச அருகதை இல்லை".. கேபி முனுசாமி தாக்கு! -
குதிரை பேரமல்ல! யானை பேரம்! தவெகவில் அதிமுகவினர் இணைவதற்கு இபிஎஸ்தான் காரணம்! ஆதவ் அட்டாக் -
தவெகவில் இணைந்த ஜாய் கிரிசில்டா.. பெண்களுக்காக குரல் கொடுக்கவே அரசியலுக்கு வந்ததாக பேட்டி! -
திருப்பரங்குன்றம் தீபம்.. தவெக அரசின் நிலைப்பாடு.. ஓபனாக பேசிய சிபிஎம்! முக்கிய டிமாண்ட்!












Click it and Unblock the Notifications